search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கவர்னர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
    X

    புதிய கவர்னர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

    புதிய கவர்னர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்க்கு, தி.மு.க.வின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, இன்று அனைத்துத்துறைகளிலும் தமிழகத்தின் முன்னேற்றம் தேக்க நிலைமைக்கு வந்து விட்டது.

    “234 சட்டமன்ற உறுப்பினர் பலம் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவு தான் இருக்கிறது”, என்று தேர்தல் ஆணையத்தில், முதல்-அமைச்சரின் அணி சார்பில் வெளிப்படையான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கின்ற இந்த நேரத்தில், பதவியேற்கும் புதிய ஆளுநர் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறை வேற்றுவார் என்று உளமார நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×