என் மலர்
செய்திகள்

தி.மு.க. ஆட்சியின் ஊழல் பற்றி கமல் பேசாதது ஏன்?: எச்.ராஜா
அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் பற்றி புகார் கூறி வரும் கமல், தி.மு.க. ஆட்சியின் ஊழல் குறித்து இதுவரை பேசாதது ஏன்? என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் கமல் அரசியலுக்கு வரலாம். அதை யாரும் தடுக்கவில்லை. முடிவெடுத்தால் முதல்வர் என்று அவர் கூறிய கருத்திற்குத்தான் நான் விளக்கம் அளித்தேன். என்னை அவர் எலும்பு நிபுணர் என்று விமர்சனம் செய்துள்ளார். நான் எலும்பு உள்ளவனா? இல்லையா? என்று எந்த மேடையிலும் விவாதிக்க தயார்.
அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் பற்றி புகார் கூறி வரும் கமல், தி.மு.க. ஆட்சியின் ஊழல் குறித்து இதுவரை பேசாதது ஏன்? இதன் மூலம் தி.மு.க.வின் ஊதுகுழலாக ஸ்டாலினின் கைப்பாவையாக அவர் இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.
ரஜினி குறித்து நாங்கள் விமர்சம் செய்யாதது ஏன் என்று கேட்கிறார்கள். ரஜினி எந்த மதத்தையும் புண்படுத்தியவர் கிடையாது. ஆனால் கமல், குறிப்பாக இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் திரைப்படங்களில் நடித்துள்ளார். நேரிடையாகவும் பேசியுள்ளார். எனவே தான் நாங்கள் அவரை எதிர்க்கிறோம்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதே அரசியலுக்கு வந்து விட்டதாக கமல் கூறியுள்ளார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்தது குறித்து யாருக்கும் தெரியாது. கமலை நடிப்பை மக்கள் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் அரசியலில் அவரை ஆதரிக்கமாட்டார்கள்.
பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று சசிகலா குடும்பத்தினர் நினைத்து வருகிறார்கள். இது அவருக்கே பாதகமாக அமைந்து விடும். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை ஊழலை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவை அதே பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ஜனதா போராடி வருகிறது. அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story