என் மலர்

  செய்திகள்

  வட மாவட்டங்களில் ரூ.200 கோடி மதிப்புள்ள காங்கிரஸ் சொத்து கண்டுபிடிப்பு: திருநாவுக்கரசர் தகவல்
  X

  வட மாவட்டங்களில் ரூ.200 கோடி மதிப்புள்ள காங்கிரஸ் சொத்து கண்டுபிடிப்பு: திருநாவுக்கரசர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் அமைக்கப்பட்ட சொத்து மீட்பு குழு வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 200 கோடி மதிப்புள்ள காங்கிரஸ் சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளனர் என்று திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

  அந்த காலத்தில் காங்கிரஸ் மீது பற்று கொண்டவர்களும், கொடை வள்ளல்களும், தேசபற்றாளர்களும் தங்கள் சொத்துக்களை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளனர். அவ்வாறு கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள் பராமரிப்பு இல்லாமல் வேற்று நபர்கள் பிடியில் இருக்கிறது. அதை கண்டுபிடித்து மீட்க நாடு முழுவதும் மாநில வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் மூத்த வக்கீல் சாந்தி தலைமையில் சொத்து மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 200 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளனர்.

  தற்போது இந்த சொத்துக்கள் தனியார் மற்றும் அமைப்புகள், மாற்று கட்சிகளிடம் உள்ளது. மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான தென்மாவட்டங்களை இன்னும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. ஆய்வு முடித்து மொத்த சொத்துக்களையும் கண்டுபிடித்ததும் அதை மீட்கும் பணி தொடங்கும்.

  தற்போது கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடங்கி இருக்கிறது. வட மண்டலத்துக்கு பாப்பிராஜ், தென்மண்டலத்துக்கு சஞ்சய்தத் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

  ஒரு பூத்துக்கு 50 உறுப்பினர்களுக்கு குறையாமல் சேர்க்க வேண்டும் என்று கூறி உள்ளோம். நாளை மறுநாள் சஞ்சய்தத் தலைமையில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இன்னும் 15 நாட்களுக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×