என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    • தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

    மேற்கு வங்காளத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்துலுக்கு முன்னதாக தனி மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தேவைப்பட்டால் அத்தகைய முயற்சிகளை முறியடிக்க தனது சொந்த ரத்தத்தை சிந்தவும் தயார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கட்சி கூட்டத்தில் மம்தா உரையாற்றியபோது கூறியதாவது:-

    தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது. சிலர் என்னை மிரட்டுகிறார்கள். நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்படவில்லை.

    மேற்ககு வங்கத்தை பிரிக்க முயற்சித்தால் எனது ரத்தத்தை கூட சிந்துவேன் ஆனால் மாநிலத்தை பிரிக்கவிட மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளூர் கவுன்சிலர் ஆதரவாளர்களுக்கும் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்
    • அமைச்சரின் தொகுதியில் உள்கட்சி மோதல்கள் பதிவாகியுள்ளதால், மம்தா பானர்ஜி அதிருப்தி

    கொல்கத்தா:

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஜாவேத் அகமதுகான் பங்கேற்கவில்லை. அவரை மம்தா புறக்கணித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

    தெற்கு கொல்கத்தாவில் உள்ள அமைச்சர் ஜாவேத் அகமது கானின் சொந்த தொகுதியான கஸ்பாவில் உள்கட்சி மோதல்கள் அண்மையில் பதிவாகியுள்ளன. அந்த பகுதி உள்ளூர் கவுன்சிலர் சுஷாந்த் கோஷின் ஆதரவாளர்களுக்கும் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி நிலையில், பல வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக கொல்கத்தா போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் சுஷாந்த் கோஷ் ஆதரவாளர்களுக்கு எதிராக அமைச்சர் ஜாவேத் அகமதுகான் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனால் அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி, அமைச்சரை அழைத்து வாய் மூடி பேசாமல் இருங்கள் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்கலைக்கழக வேந்தர் பதவியை முதல்வருக்கு வழங்க வகை செய்யும் மசோதா உருவாக்கப்படுகிறது.
    • தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஜெகதீப் தங்கார் பதவி வகித்து வருகிறார். இந்த பதவியை அவரிடம் இருந்து முதல்வருக்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனையடுத்து முதல்வரை பல்கலைக்கழங்களின் வேந்தர் ஆக்க வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டு விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.

    ×