என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்

X
பெண்களுக்கு வேலை தரும் மன அழுத்தம்
பெண்களுக்கு 9 மணி நேர வேலை தரும் மன அழுத்தம்
By
மாலை மலர்6 Jan 2022 4:28 AM GMT (Updated: 6 Jan 2022 4:28 AM GMT)

ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறான பிரச்சினைகள் இருக்கின்றன. ஆண்களைக் காட்டிலும் அதிக நேரம் வேலை செய்யும் பெண்களுக்கு நேரமும் கூடுதலாக தேவைப்படுகிறது.
ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் அல்லது அதற்கும் மேல் வேலை செய்யும் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. லண்டன் கல்லூரி பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வுக்கு, வேலைக்குச் செல்லும் ஆண்கள் 11,215 பேர், பெண்கள் 12,188 பேர் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சராசரியாக வாரத்திற்கு 35-40 மணி நேரம் வேலை செய்வது உடலுக்கும், மனதுக்கும் நல்லது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 55 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக வேலை செய்யும் பெண்களில் 7.3 சதவீதம் பேர் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனால் 55 மணி நேரம் வேலை செய்யும் ஆண்களுக்கு பெண்களை காட்டிலும் மன அழுத்தத்தின் அளவு குறைவாக இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘‘இந்த ஆராய்ச்சி முற்றிலும் பெண்களைக் கண்காணித்து நடத்தப்பட்டதாகும். மன அழுத்தத்தை கடந்து பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவற்றை சரியாக வரையறுக்க முடியாது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறான பிரச்சினைகள் இருக்கின்றன. ஆண்களைக் காட்டிலும் அதிக நேரம் வேலை செய்யும் பெண்களுக்கு நேரமும் கூடுதலாக தேவைப்படுகிறது. இதனால் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை சரியாக முடிக்க வேண்டும் என்கிற அழுத்தமும் பாதிப்பை அதிகப்படுத்திவிடுகிறது” என்கிறார், ஆராய்ச்சியின் தலைவர் கில் வெஸ்டோன்.
வார இறுதி நாட்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் பெண்களுக்கும் கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதிலும் ஆண்கள் 3.4 சதவீதம் மட்டுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதாகவும், பெண்கள் 4.6 சதவீதம் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×