search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டீன் ஏஜ் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
    X
    டீன் ஏஜ் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

    டீன் ஏஜ் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

    தற்போது இளம் வயதினர் பலரும் தங்களுடைய நேரத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாக செலவிடுகின்றனர். அதன் மூலம் ஏற்படும் புதிய நட்பு காரணமாக பலர் தங்கள் எதிர்காலத்தை தொலைத்நத விடக்கூடிய அபாயம் உள்ளது.
    டீன் ஏஜ் என்ற பதின்பருவம் வாழ்வில் மிக முக்கியமானது. பெண்கள் இந்த பருவத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரும். கல்வி, குறிக்கோள் என்று வாழ்க்கையில் முக்கியமான படிநிலைகளை நோக்கி நடைபோடும் இந்த பருவத்தில் தான் நம்மை திசைமாற்றும் சவால்களும் குறுக்கே வந்து நிற்கும். மனதை கட்டுப்படுத்தி அந்த தடைகளை தாண்டினால் ஒளிமயமான எதிர்காலம் நம் கையில் சேரும். அதற்கான சில டிப்ஸ் இங்கே...

    கோபத்தை கட்டுப்படுத்துதல்

    இளம் வயதில் தன்னை கவரும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை அடைந்தே தீர வேண்டும் எனற பிடிவாதம் ஏற்படும். அவ்வாறு நடக்காவிட்டால் மனதில் விரக்தி கோபம் போன்ற உணர்வுகள் ஆட்கொண்டு தீய பழக்கங்களும் அடிமையாகக்கூடும். நாளடைவில் அது மனநோயாக மாறும் நிலையில் தவறான பாதையை மனம் நாடுகிறது. எனவே எதையும் பகுத்தறிவோடு அணுகி கோபத்தை தவிர்க்க வேண்டும்.  நிதானமாக செயல்பட வேண்டும்.

    சமூக வலைத்தளங்களில் கவனம்

    தற்போது இளம் வயதினர் பலரும் தங்களுடைய நேரத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாக செலவிடுகின்றனர். அதன் மூலம் ஏற்படும் புதிய நட்பு காரணமாக பலர் தங்கள் எதிர்காலத்தை தொலைத்நத விடக்கூடிய அபாயம் உள்ளது. குறிப்பாக இளம் பெண்கள் சமூக வலைத்தளங்களை பயனபடுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவற்றில் நல்ல தகவல்களை விட வாழ்க்கையை சீரழிக்கும் நச்சு பதிவுகளே ஏராளமாக உலவி வருவதை உணர்ந்து அவற்றிலிந்து விவேகத்துடன் விலகுவதே எதிர்கால நலன்களுக்கு ஏற்றது.

    அழகுக்கு முன்னுரிமை

    இளம் பருவத்தில் பார்ப்பது அனைத்தும் அழகாக தெரிவதுடன் தானும் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆவலும் உருவாகி விடுகிறது. இளம் வயதில் உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதால் தோற்றத்தில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் செயல்களும் மாற்றமடைகின்றன. மற்றவர்கள் பயன்படுத்துவது போன்ற அழகு சாதனங்கள் கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கங்கள் உடல் நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    நட்பில் அக்கறை

    டீன் ஏஜ் பருவத்தில் தன்னை அறியாமல் எதிர்பாலினம் மீது ஈர்ப்பு ஏற்படும். மனம் தாமாகவே அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பும். அது காதல் போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி தவறான பாதைக்கு இட்டு செல்லுக்கூடும். அந்த நேரத்தில் பெற்றோர் மற்றும் வீட்டிலுள்ள பெரியோர்களின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் ஏற்று நடப்பது மிகவும் அவசியம்.

    மாதவிடாய் தவிப்பு

    டீன் ஏஜ் பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் குறித்த விஷயங்களில் குழப்பங்கள் இருக்கக்கூடும். உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்ய வேண்டும். சரியானஉணவுமுறை உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் இதனை எளிதாக கையாளலாம்.

    சுய அடையாளத்தை உருவாக்குதல்

    அழகு, உடை, ஆகியவற்றில் மற்றவர்களுடன் ஓப்பீடு செய்து வழக்கதை மாற்றிக்கொள்ளும் மனச்சிக்கல் இளம் வயதினருக்கு எளிதாக உருவாகி விடுகிறது. தோற்றம், உணவு பழக்கவழக்கம் மரியாதை கொடுப்பது என அனைத்துவிஷயங்களிலும் மற்றவர்களை பின்பற்றும் வண்ணமாகவும் வளரும். இது இளம் பெண்களின் சுய அடையாளத்தை மறைத்து அவர்களது தனித்திறமை வெளிப்படுவ்தற்கு தடையாகவும் அமைந்து விடும்.

    இளம் பெண்கள் டீன் ஏஜ் பருவத்தில் தாங்கள் சந்திக்கும் சவால்களை பெற்றோரின் வழிகாட்டுதலோடும், நல்ல நூல்களின் துணையோடும் பகுத்தறிவோடும் தகர்ந்தெறிந்தால் சாதனை புரியலாம்.
    Next Story
    ×