search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்கள் ரெப்ரிஜிரேட்டர் பராமரிப்பும் பயன்படுத்தும் முறைகளும்
    X

    பெண்கள் ரெப்ரிஜிரேட்டர் பராமரிப்பும் பயன்படுத்தும் முறைகளும்

    ரெப்ரிஜிரேட்டர் சரிவர பராமரித்தால்தான் அதன் குளுமை திறன் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தடுக்க முடியும். அந்த வகையில் ரெப்ரிஜிரேட்டர் பராமரிக்க தேவையான வழிமுறைகளை பார்க்கலாம்.
    அனைவரின் வீட்டிலும் தற்போது ரெப்ரிஜிரேட்டர் பயன்பாடு உள்ளது. சிறியது, பெரியது என்ற அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற அளவுகளில் ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளன. அதிக விலை கொடுத்து வாங்கும் ரெப்ரிஜிரேட்டர்களை சரியாக பராமரிப்பது மூலமே சரிவர இயங்குவதற்கும், அதன் ஆயுட்காலம் நீட்டிப்பதற்கும் வழிவகை செய்யமுடியும். அதுபோல் ரெப்ரிஜிரேட்டர் சரிவர பராமரித்தால்தான் அதன் குளுமை திறன் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தடுக்க முடியும். அந்த வகையில் ரெப்ரிஜிரேட்டர் பராமரிக்க தேவையான வழிமுறைகள் இதோ:-

    கண்டென்ஸர் காயில்களை சுத்தப்படுத்தவும்


    ரெப்ரிஜிரேட்டரின் சரியான இயக்கத்திற்கும், மின் செலவிற்கும் உதவுவது கண்டென்ஸர் காயில்கள்தான். இதில் அதிக தூசு மற்றும் அழுக்கு படிந்து விட்டால் இதன் இயக்கம் சரிவர நடைபெறாது. அதன் மூலம் அதிக மின் செலவு ஏற்படும். எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை தூசு விரட்டி (அ) வாக்யூப் கிளினர் வாயிலாக கண்டென்ஸர் காயிலை சுத்தம் செய்திட வேண்டும். கண்டென்ஸர் காயில் என்பது பிரிட்ஜின் பின்புறம் (அ) கீழ் பகுதியில் இருக் கும்.

    டிரையின் ஹோல் சுத்தம் செய்தல்

    புதிய மாடல் ரெப்ரிஜிரேட்டரில் சில வகையில் டிரையின் ஹோல் இருக்காது. ஆனால் சில மாடல்களில் தண்ணீர் வெளியேற வழிப்பாதையிருக்கும். அதனை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும். அதுபோல் டிரிப் பேன்-யை வெளியில் எடுத்து கழுவி பொருத்த வேண்டும். நாம் உணவு பொருட்களின் துகள்கள் டிரையின் ஹோல்களில் அடைத்துக்கொண்டு துர்நாற்றம் ஏற்படவும், தண்ணீர் வழிந்து பிரிட்ஜ் உட்புறம் பரவும் வழி ஏற்படும். எனவே, அவ்வப்போது டிரையின் ஹோலை சுத்தம் செய்திடவேண்டும்.



    கேஸ்கட்டை சுத்தம் செய்திட வேண்டும்

    கேஸ்கட் என்பது ரெப்ரிஜிரேட்டர் கதவு மற்றும் பிரிசர் கதவுகளில் உள்ளது. இதுவே ரெப்ரிஜிரேட்டரின் உட்பகுதி குளுமை வெளியேறாமல் பாதுகாக்கும். இந்த கேஸ்கட் வெடிப்புகள் மற்றும் பிளவு ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்திட வேண்டும். மேலும் இந்த கேஸ்கட்டை சுலபமாக வெளியே கழட்டி விடமுடியும். அவ்வாறு கழட்டி அதனை சோப்பு பவுடர் கொண்டு சுத்தம் செய்திட்டு பின் மாட்டி விடலாம். இதன் மூலம் கேஸ்கட் சுத்தமாவதுடன் அதில் வெடிப்பு, பிளவு ஏற்படாது.

    உட்புற டெம்பரேச்சர் அளவை கண்காணித்தல்


    அவ்வப்போது பிரிட்ஜின் உட்புற டெம்பரேச்சர் அளவை பரிசோதித்து சரி செய்திடல் வேண்டும். அதிக பொருட்கள் உள்ளபோது 37 முதல் 40 டிகிரி வரை பாரன்ஹிட் அளவு உள்ளவாறு பராமரித்தல் வேண்டும். பிரிஸரின் டெம்பரேச்சர் என்பது 0-5 பாரன்ஹீட் அளவு இருந்திட வேண்டும். டெம்பரேச்சர் சரியாக பராமரித்தல் மூலம் மின் செலவு குறையும்.

    வாட்டர் பில்டரை மாற்றவும்

    தற்போது வரும் ரெப்ரிஜிரேட்டர்களில் ஐஸ் மேக்சன் மற்றும் ராட்டர் டிஸ்பென்சர்கள் உள்ளன. அதில் வாட்டர் பில்டர்கள் உள்ளன. அவற்றை சரியான கால இடைவெளியில் மாற்றிட வேண்டும். பெரும்பாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை வாட்டர் பில்டர்களை மாற்றுவது அவசியம். அப்படியெனில் பிரிட்ஜ் நிறுவனம் வழங்கிய மேனுவலில் உள்ள அறிவுரைப்படி மாற்றுதல் வேண்டும்.

    பிரிட்ஜ் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்


    அதிக சூட்டுடன் உணவு பொருட்களை பிரிட்ஜ் உட்புறம் வைத்தல் கூடாது. அவ்வப்போது பிரிட்ஜ் கதவுகளை திறந்து மூடவோ, அதிக நேரம் கதவை திறந்து வைத்து இருப்பதோ கூடாது. இதன் மூலம் அதிக மின் செலவு மற்றும் பிரிட்ஜ் அதிக இயக்கத்திறனை கட்டுப்படுத்திட முடியும். பிரிட்ஜ் உட்புறத்தையும் அவ்வப்போது தூய்மை செய்திடவேண்டும். ரெப்ரிஜிரேட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் அளித்துள்ள பராமரிப்பு குறிப்புகளை படித்து பார்த்து அதன்படி அவ்வப்போது தூய்மை மற்றும் மாற்றவேண்டிய உபகரணங்களை மாற்றிடுதல் வேண்டும்.

    வினிகர் கொண்டு கேஸ்கட் மற்றும் உட்புற பகுதிகளை தூய்மை செய்வது மிக சிறப்பானதாக இருக்கும். 
    Next Story
    ×