
பதினெட்டு முதல் 21 வயதுதான் பெண்ணிற்கேற்ற திருமண வயது என்று அரசாங்கம் சொல்கிறது. அதே போல 21 வயதிலிருந்து 35 வயது வரை தான் கருவுற நினைப்பவர்களின் காலகட்டம். அந்த வயதில் தான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்து கருவுருவதற்கேற்ற முதிர்ச்சியை பெற்றிருக்கும். ஏனெனில் அந்த சமயத்தில் தான் ஆரோக்கியமான சினைமுட்டைகள் பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளிவரும்.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்புகள் குறைவாகவே இருக்கும். இதற்கு காரணம் சீரற்ற சினை முட்டைகள் வெளிபடுவதற்கான கால இடைவெளி அதிகமாக இருப்பதே காரணம் ஆகும். ஆனால் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல இவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
35 வயதுக்குப் பிறகு பெண்கள் கருத்தரித்தால் தாய்க்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறக்கும் குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மனவளர்ச்சி குறைபாடுடன் கூடிய குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புண்டு.
கர்ப்ப காலத்தில் 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்
1. 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
2. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எடை குறைவாக இருக்கும்.
3. இவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
4. இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்புகள் அதிகம்.
5. இவர்களுக்கு சுக பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் செய்ய வாய்ப்புகள் அதிகம்.
6. இவர்களின் குழந்தைகளுக்கும் உடல் நல கோளாறுகள் ஏற்பட வாய்புகள் அதிகம்.
ஒருவேளை குழந்தை பேற்றை தள்ளி போட வேண்டிய கட்டாயம் இருந்தால் குழந்தை பேற்றை தடுப்பதற்க்கென்று பல்வேறு கருத்தடை முறைகள் உள்ளன, அவற்றை பின்பற்றினால் குழந்தை பெறுவதை தள்ளி போடலாம். பொதுவாக குழந்தை பெரும் வயதை தள்ளி போடாதீர்கள். உரிய வயதில் குழந்தை பெற்று தாய்மையை அனுபவியுங்கள்.