என் மலர்

  ஆரோக்கியம்

  மூன்றாம் மாதம் : முகம் மிக ஜொலிக்கும்
  X
  மூன்றாம் மாதம் : முகம் மிக ஜொலிக்கும்

  மூன்றாம் மாதம் : முகம் மிக ஜொலிக்கும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்தது போன்று இப்போதும் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை தோன்றும். முகம் பூசி மெழுகினாற் போன்று அழகாக ஜொலிக்கத் தொடங்கும்.
  கர்ப்பிணிகளுக்கு இரண்டாம் மாதத்தில் இருந்தது போன்று இப்போதும் சோர்வு, தலைச்சுற்றல் போன்றவை தோன்றும். முகம் பூசி மெழுகினாற் போன்று அழகாக ஜொலிக்கத் தொடங்கும். முகத்திலும், உடல்பகுதிகளிலும் சின்னச்சின்ன பருக்கள் சிலருக்கு உருவாகும்.

  * இடுப்பு பெரிதாகும். மார்பக அளவும் அதிகரிக்கும். அடிக்கடி பசி உணர்வு தோன்றும். அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகும். எப்போதாவது தலைவலியும் வந்துபோகும்.

  * சிசு இந்த 9 முதல் 12-வது வாரத்தில் (அதாவது மூன்றாவது மாதத்தில்) உருவம்கொள்ளத் தொடங்குகிறது. நரம்புகட்டமைப்புகளுக்கு ரத்த ஓட்டம் முழுமையாக நடைபெற ஆரம்பிக்கும்.

  * மூன்றாம் மாதத்தில் உள் இனப்பெருக்க உறுப்புகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும். இந்த காலகட்டத்தில் சிசு 6.7 செ.மீ. நீளமும் 23 கிராம் எடையும் கொண்டிருக்கும்.

  * மூன்றாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு புரோஜஸ்ட்ரான் ஹார்மோன் அதிகம் சுரக்கும். அதனால் மலச்சிக்கல் ஏற்படலாம். அந்த சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து அடங்கிய உணவினை போதுமான அளவு சாப்பிடவேண்டும். இந்த மாதத்திலும் போலிக் ஆசிட் மாத்திரை தினமும் உட்கொள்வது அவசியம்.

  * ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறை வாக இருந்தால் டாக்டரின் ஆலோசனையின்படி இரும்பு சத்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  * 10-வது வாரம் ஆன பின்பு ஸ்கேன் செய்து பார்த்தால் வயிற்றில் இரட்டைக் குழந்தை இருந்தால் தெரிந்துவிடும். கர்ப்பப்பையின் அளவும் அதிகரித்திருக்கும்.

  * மூன்றாவது மாதத்திலும் வாந்தி இருந்துகொண்டிருந்தால், காலையில் விழித்ததும் ரஸ்க், பிஸ்கெட் போன்ற உலர்ந்த வகை உணவுகளை உட்கொள்வது நல்லது. இவைகளை சாப்பிட்டால் குமட்டல் நீங்கும். உடலுக்கு தேவையான கலோரியும் கிடைக்கும். வாந்தி உணர்வு ஏற்படும்போது கட்டாயத்திற்காக எதையும் சாப்பிட முயற்சிக்கக்கூடாது. உடலில் எதுவும் தங்காத அளவுக்கு தொடர்ந்து வாந்தி ஏற்பட்டுக் கொண்டிருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

  * மூன்றாவது மாதத்தில் போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும். கேரட், மாங்காய், வெண்ணெய், முட்டை, இனிப்புக்கிழங்கு, பழ வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வைட்டமின்கள் ஆரோக்கியமான சருமம் மற்றும் பார்வைத்திறனுக்கு தேவை. சிசுவின் எலும்பு வளர்ச்சியையும் துரிதமாக்கும். சிசுவின் ஈறு மற்றும் பல் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

  * கர்ப்பிணி இந்த தருணத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதனால் முதுகுவலி, தசைப்பிடித்தல், உடலில் நீர்போடுதல், மலச்சிக்கல் போன்றவை நீங்கும். முதல் மூன்று மாதங்களில் தரையில் படுத்து செய்யக்கூடிய பயிற்சிகளையும் தொடரலாம்.

  * இந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எய்ட்ஸ், மஞ்சள்காமாலை, சிபிலிஸ் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். உடல் எடையை பரிசோதிப்பதும் அவசியம்.
  Next Story
  ×