search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப காலத்தில் இரவுப் பணியில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா?
    X
    கர்ப்ப காலத்தில் இரவுப் பணியில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா?

    கர்ப்ப காலத்தில் இரவுப் பணியில் ஈடுபட்டால் கருச்சிதைவு ஏற்படுமா?

    கர்ப்பமாக இருக்கும் பெண்கள், அலுவலகத்தில் இரவுப் பணி செய்வதால் கருச்சிதைவு ஏற்படலாம்’ என்ற புதிய ஆய்வு வெளியாகியுள்ளது.
    கர்ப்பமாக இருக்கும் பெண்கள், அலுவலகத்தில் இரவுப் பணி செய்வதால் கருச்சிதைவு ஏற்படலாம்’ என்ற புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற இந்த ஆய்வில், 23 ஆயிரம் கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

    ஆய்வின் முடிவில், கர்ப்பம் தரித்து 8 வாரங்களுக்கு மேலான பெண்கள், ஒரு வாரத்தில் இரண்டு அல்லது அதற்கும் கூடுதலான நாட்கள் இரவுப் பணி செய்தால், கருக்கலைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இரவுப் பணியில் ஈடுபடாத கர்ப்பிணிகளைக் காட்டிலும் கருக்கலைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு 32 சதவிகிதம் அதிகமாக இருக்கிறதாம். இந்த ஆய்வு முடிவு அதிகாரபூர்வ மருத்துவ இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

    “இரவில் பணியாற்றும் கர்ப்பிணிகள், அலுவலகத்தில் செயற்கை வெளிச்சத்தில் அதிகமாக உள்ளதால், அவர்களது உயிரியல் கடிகாரம் பாதிக்கப்படும். மேலும் உறக்கம், விழிப்பு இரண்டையும் நிர்வகிக்கும் மெலடோனின் என்ற ஹோர்மோன் சுரப்பையும் குறைக்கும். கர்ப்ப காலம் முழுமையாகப் பூர்த்தியடைவதற்கு, மெலடோனின் சுரப்பு மிகவும் அவசியம். இந்த ஹோர்மோன் சுரப்பு பாதிக்கப்படும்போது கருச்சிதைவு ஏற்படுகிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்பு நடைபெற்ற ஆய்வில், இரவுப் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே மெனோபாஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டது. மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக ஏற்படும்போது, அந்தப் பெண்களுக்கு இதய-இரத்தநாள நோய்கள், எலும்புப் புரை, நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கண்டறியப்பட்டது.

    Next Story
    ×