என் மலர்

  ஆரோக்கியம்

  இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை
  X

  இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
  இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்தசோகை ஏற்படுகிறது. உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை ‘இரத்தசோகை நோய்’ என்கிறார்கள்.

  * பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் இரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்தசோகை.

  * மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

  * இரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  * இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

  * இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

  * பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.

  * இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.

  * வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
  Next Story
  ×