என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
    கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் பெண்கள் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு ஒரே உணவு தாய்ப்பால் தான். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த உணவுகளை உட்கொண்டாலும், அது தாய்ப்பாலுடன் கலந்து குழந்தையை அடையும்.

    எனவே உங்கள் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டுமானால், தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்களது உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். அதிலும் இது கோடைக்காலம். இக்காலத்தில் உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்களை அதிகம் சாப்பிட தோன்றும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.

    சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃப்ளேவர் தாய்ப்பாலில் கலந்து, குழந்தைக்கு வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    தாய்ப்பால் கொடுக்கும் போது ஸ்ட்ராபெர்ரி பழத்தை பெண்கள் அதிகம் சாப்பிட்டால், குழந்தைக்கு தீவிரமாக அழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் வாய்வுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் போன்றவையும், சில நேரங்களில் சருமத்தில் அரிப்புக்களும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    அன்னாசியில் உள்ள அசிட்டிக் தன்மை, தாய்ப்பாலுடன் கலந்தால், அது தாய்ப்பாலை நாற்றமிக்கதாக மாற்றுவதோடு, குழந்தைக்கு நாப்கின் அரிப்புக்களையும் உண்டாக்கும்.

    கிவி பழத்தை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது குழந்தைக்கு ஆரோக்கியமானதல்ல. இப்பழத்தில் உள்ள உட்பொருட்கள் குழந்தைக்கு வாய்வுத் தொல்லையை உண்டாக்கும்.

    செர்ரிப் பழங்களை அதிகமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதில் இயற்கையாகவே மளமிளக்கும் தன்மை உள்ளது. ஒரு வேளை அதிகமாக உட்கொண்டால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
    இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல.
    இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று சொல்ல முடியாது.

    அது கருமுட்டை மற்றும் விந்துவை பொறுத்ததுடன், பெண்ணின் பரம்பரையில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. இப்போது இந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி காண்போம்.

    இரட்டையர்களின் வகைகள் :

    இரட்டை குழந்தைகளிலேயே இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:

    ஒன்று போலிருக்கும் இரட்டை

    வேறுபாடுள்ள இரட்டை.

    ஒன்று போலிருக்கும் இரட்டையர்கள் :

    இந்த வகையான இரட்டையர்களைப் பார்த்தால், பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதாவது இந்த வகை குழந்தைகள் ஒரே ஒரு விந்தணுவின் மூலம் பிறப்பார்கள். அதாவது ஆணிடமிருந்து வெளிப்படும் ஆயிரக்கணக்கான விந்தணுக்களில் ஒரே ஒரு செல் மட்டும் கருமுட்டையினுள் சென்று இணையும். அப்படி இணையும் போது சில சமயங்களில் இயல்புக்கு மாறாக கருமுட்டையானது இரண்டாக பிரியும். இப்படி இரண்டாக பிரிந்த கருமுட்டை குழந்தைகளாக உருவாகும்.

    ஒட்டிப்பிறக்கும் குழந்தைகள் :

    ஒருவேளை கருமுட்டையானது முழுமையாக இரண்டாக பிரியாமல் போனால் தான், குழந்தைகள் ஒட்டிப் பிறக்கின்றன. இந்த செயல்பாட்டில் ஒரு கருமுட்டையும், ஒரு விந்தணுவும் மட்டும் இருப்பதால் தான், இந்த வகையான இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள். இருப்பினும் இவர்களுக்கிடையேயும் ஒருசில வேறுபாடுகள் இருக்கும். அதில் ஒன்று குழந்தைகளுக்கு செல்லும் ஊட்டச்சத்துக்களின் அளவைப் பொறுத்து,
    வேறுபாடுள்ள இரட்டையர்கள்

    பெண்களுக்கு மாதந்தோறும் ஒரே ஒரு சூல்முட்டை வெளிப்படும். சில சமயங்களில் இரண்டு சூல்முட்டைகள் வெளிப்படும். அப்படி வெளிப்படும் தருணம், பெண் உறவில் ஈடுபட்டால், இரண்டு சூல்முட்டைகளில் இரு வேறு விந்தணுக்கள் நுழைந்து குழந்தைகளாக உருவாகின்றன. ஆனால் இந்த வகையான இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒன்று போல் காணப்படமாட்டார்கள் மற்றும் அவர்களின் பண்புகளும் வேறுபட்டு காணப்படும்.

    பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் மேலும் இன்னும் நிறைய பிரச்சனைகளை பெண்கள் சந்திப்பார்கள்.
    பொதுவாக கருக்கலைப்பு செய்தால், பெண்களின் மனநிலை மட்டுமின்றி, உடல் நிலையும் பாதிக்கப்படும். கருக்கலைப்பு செய்வதால், அதனை பெண்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவு தான் முடிவு எடுத்து கருக்கலைப்பு செய்தாலும், அதனை பெண்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    பெரும்பாலானோருக்கு கரு கலைந்தால், இரத்தப்போக்கு தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் இருக்கும் என்பது தெரியும். ஆனால் இன்னும் நிறைய பிரச்சனைகள் மற்றும் மாற்றங்களை பெண்கள் சந்திப்பார்கள்.

    * கருக்கலைப்பு செய்தால், மார்பகங்கள் வீங்கவோ அல்லது தளர்ந்தோ இருக்கும். எனவே சிறிது நாட்களுக்கு தளர்வான பிரா அணிய வேண்டும்.

    * கருக்கலைப்பு செய்த பின்னர், தொடர்ந்து 1-2 வாரங்களுக்கு இரத்தப்போக்கு அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி, இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது வெளியேற்றப்படுவதால், அவை கடுமையான வயிற்றுப் பிடிப்புக்களை ஏற்படுத்தும்.

    * கருக்கலைப்பிற்கு பின், அவ்வப்போது லேசான இரத்தப்போக்கு ஏற்படும். அத்துடன் கடுமையான வயிற்று வலியையும் சந்திக்கக்கூடும்.

    * சில பெண்களுக்கு கருக்கலைப்பிற்கு பின் உடல் பருமனடையும். இருப்பினும் சில பெண்களுக்கு மன இறுக்கத்தினால், சரியாக சாப்பிட முடியாமல், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இவை அனைத்தும் பெண்களின் மனநிலையைப் பொறுத்தது.

    * கருக்கலைப்பிற்கு பின் பெண்கள் கடுமையான முதுகு வலியை சந்திப்பார்கள். மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்தால், வலியானது இன்னும் அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிடும்.

    * கருக்கலைப்பினால் கருப்பை வாயானது புண்ணாக இருப்பதால், அப்போது உடலுறவில் ஈடுபட்டால், கடுமையான வலியை சந்திக்கக்கூடும். எனவே கருக்கலைப்பிற்கு பின் 3 வாரத்திற்கு உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

    * கருக்கலைப்பிற்கு பின் உடலில் இரும்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால், மருத்துவர்கள் இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பார்கள். இப்படி இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை எடுக்கும் போது, அவை மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

    * கருக்கலைப்பிற்கு பின்பு ப்ரௌன் நிற கசிவுகள் பிறப்புறுப்பின் வழியாக அதிகம் வெளியேறும். இதற்கு முக்கிய காரணம், கருக்கலைப்பிற்கு பின் உடலானது தானாக சுத்தம் செய்ய ஆரம்பிக்கும். அப்படி ஆரம்பிப்பதால் வெளியேறுவதாகும். ஆனால் இந்த கசிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசும் போது, கடுமையான காய்ச்சலால் அவஸ்தைப்படக்கூடும்.

    * கருக்கலைப்பு செய்த பின்னர், அடிவயிறானது உப்புசத்துடன் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் இரத்தப்போக்கு மட்டுமின்றி, ஹார்மோன் மாற்றங்களும் தான்.

    * கருக்கலைப்பை தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் ஓவுலேசன் சுழற்சியானது ஆரம்பித்துவிடும். சிலருக்கு 4-8 வாரங்களுக்குள் மாதவிடாய் சுழற்சியானது ஆரம்பமாகி விடும்.
    பெண்கள் எப்போதும் கர்ப்பிணிப் போல் தோற்றம் தரும் பெருத்த வயிறை வெறுக்கவே செய்கிறார்கள்.
    பருவ வயதிலும் திருமணத்துக்கு முன்பும் சிற்றிடையோடும், ஒட்டிய வயிறுமாக வலம் வரும் இளம் பெண்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை பெற்றபின் இடையும், வயிறும் பெருத்து அழகு காணாமல் போய்விடுகிறது. உடல்பருமனைப் பற்றி கண்டுகொள்ளாத பெண்கள் கூட எப்போதும் கர்ப்பிணிப் போல் தோற்றம் தரும் பெருத்த வயிறை வெறுக்கவே செய்கிறார்கள்.

    1989-ல் தேசிய குடும்பநல மற்றும் சுகாதார ஆய்வில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 11 சதவீதம் பேர் உடல் பருமனாவது தெரியவந்துள்ளது. இதுவே 2005-ல் 15 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 5.8 கோடி பெண்கள் உடல் பருமனாக இருக்கிறார்கள்.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் 2009-ல் நடத்திய ஆய்வில் 12.3 சதவீத நகர்ப்புற பெண்கள் குண்டாக உள்ளனர். இதற்கு காரணம் வீட்டு வேலை குறைவு, முறையற்ற உணவு ஆகியவைதான் என்கிறார்கள், நிபுணர்கள்.

    மெனோபாஸ் பருவத்தை அடையும் 40 முதல் 60 வயதில் உடல் பருமனான நிலை மாறி தற்போது 20 முதல் 30 வயதில் பெண்கள் குண்டாக ஆரம்பித்து விட்டார்கள். உடல் பருமனாகும்போது அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில் படிகிறது. மிகவும் ஆபத்தானது வயிற்றில் சேரும் கொழுப்பு.

    அடிவயிற்று கொழுப்பினால் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பாலுணர்வு குறைபாடும் தோன்றுகிறது. இதை தடுக்க சில பழக்க வழக்கங்களை மேற்கொண்டாலே போதும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் சேரும் நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறும்.

    தூங்கி எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை தொடங்கி விட வேண்டும். முழு தானியங்கள், புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இரவில் சீக்கிரமே உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்கு செல்ல வேண்டும். கேழ்வரகில் கால்சியம் அதிகம் உள்ளது. ஓட்ஸ் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டுக்கு சோயா நல்லது. இவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற சிறுசிறு தொந்தரவுகளில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஓட்டல் உணவுக்கு எப்போதும் குட்பை சொல்லிவிடுங்கள். முறையாக உடற்பயிற்சி செய்து, வயிற்றுக் கொழுப்பைக் குறையுங்கள். இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மெலிந்து சிக்கென சிட்டுப்போல் பருவப் பெண் அழகிற்கு வந்துவிடுவீர்கள்.
    கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான்.
    கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்றவை ஏற்படுவது இயல்புதான். இதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடும் உண்ணும் உணவுகளும்தான். கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதிக்கு அதற்கு 'ஜெஸ்டேஸனல் டயபட்டிஸ்' என்று பெயர்.

    பால், காபி போன்றவைகளில் அதிகம் சீனி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் சாப்பிடலாம். ரத்தத்தில் கட்டுப்பாட்டில் இருந்தால், காய்கறி சூப்புடன் ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி, தார்பூசணி, பேரிக்காய் முதலிய பழங்களை கையளவு சேர்த்துக் கொள்ளலாம்.

    மதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்ப்பதுடன், தேங்காய் சேர்க்காத சமையலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், சர்க்கரை, பேரீச்சம்பழம், மாம்பழம், சீதாப்பழம், வாழைப்பழம், அப்பம், இடியப்பம், புட்டு, கஞ்சி, களி, கூழ், மைதாவில் செய்த பிரெட், பூரி, பரோட்டா,

    சேமியா, பொங்கல், கிழங்கு வகைகள், கரட், பீட்ரூட், வாழைக்காய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி கருவாடு... இவையனைத்தையும் கட்டாயமாக தவிர்த்துவிட வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். தினசரி 2,200 கலோரிகள் அளவுள்ள உணவுகளை சரிவிகித அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

    முப்பத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பம் தரித்த காலத்திலிருந்தே மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் வாங்கிங் செல்ல வேண்டுமாம்.
    திருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும்.
    திருமணம், முதலிரவு போன்றவை மீது ஆசை அலைபாயும். திருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். புதிய இடம், பெரிதாய் தெரியாத நபர். அவருடன் முதன் முதலில் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் தருணம்.

    தன்னை பற்றி அவர் என்ன எண்ணுவார், அவர் எப்படி நடந்துக் கொள்வார் என்ற பெண்களின் எண்ணம் என எண்ணங்களால் சூழ்ந்திருக்கும் இடம் அது. ஆனால், இவ்விடத்தில் கூட உறவை தாண்டிய சில கேலித்தனமாக, அபத்தமானவற்றை பெண்கள் சிந்திக்கிறார்கள் தெரியுமா?

    * முதலிரவின் போது தனது மேக்கப்பை முழுமையாக களைத்துவிடலாமா? வேண்டாமா என்ற எண்ணம் பெண்கள் மத்தியில்
    ஏற்படுகிறது.

    * வெளியிடங்களுக்கு சென்று வேறு ஒருவரது குளியலறையை ஒருமுறை பயன்படுத்தவே சில பெண்கள் மிகவும் தயங்குவார்கள். இதில், நாளையிலிருந்து வேறு ஒரு நபரின் குளியலறையை தான் பயன்படுத்த வேண்டுமா? என்ற எண்ணமும் அவர்களிடம் அதிகம் எழுகிறது.

    * தப்பி தவறியும் குறட்டை வந்துவிடக் கூடாது, மானமே போய்விடும் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். இதனால் முதல் நாளிலேயே தன் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்படும். இதுவே, கணவன் குறட்டை விட்டால் என்ன செய்வது என்று குழம்புவார்கள்.

    * வாய் துர்நாற்றம் என்பது மிகவும் பொதுவானது. கணவரிடம் பேசும் போது வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் அவர் என்ன நினைத்து கொள்வார் என்று ஒரு வெட்கம் பெண்களிடம் ஏற்படுகிறது.

    * பெண்கள் தாங்கள் உறங்கும் போதும் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்கிறதாம்

    * எத்தனை நாட்களுக்கு புடவைக் கட்டிக்கொண்டு உறங்க வேண்டும், இரவு உடை அணிந்து உறங்கலாமா, எப்போதிருந்து.. என்பது பற்றியெல்லாம் கூட பெண்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    * ஒருவேளை காலையில் நேரதாமதமாக எழுந்துவிட்டால் கணவர் வீட்டில் தவறாக எடுத்துக் கொள்வார்களோ... புதிய சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் கூட பெண்கள் யோசிக்கிறார்கள்.

    * பெரும்பாலும், முதலிரவன்று தூங்கி எழுந்த பெண்களுக்கு எழும் முதல் எண்ணம், "நான் எங்க இருக்கேன்..?". பெண்களின் மனது கண்டதை எல்லாம் யோசிக்கும் என்று தெரியும். ஆனால், இந்த அளவிற்கு யோசிக்கும் என்பது இப்போது தான் தெரிகிறது.

    தோல் உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
    கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த தோல் உளுந்து சிறந்த மருந்தாகும்.

    இவர்கள் தோல் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

    இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

    தோல் உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

    தோல் (கருப்பு) உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

    தோல் (கருப்பு) உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

    தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

    சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
    இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் கருப்பு உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

    சிறு குழந்தைகளுக்கு தோல் உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

    நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

    மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் அவசியமானது கருப்பு உளுந்து. பெண்களின் இடுப்பு எலும்பை வலுப்படுத்தும்.

    குழந்தை பெற்ற பெண்களுக்கு கருப்பு உளுந்தில் உணவு செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும், வளர்ச்சியும் மேம்படும். கோடை காலத்தில் அதிகளவில் கிடைக்கும் தர்பூசணியை பெண்கள் சாப்பிடுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிகளின் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ளும்.

    உண்மையில் தர்பூசணியை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் இதில் கருவின் வளர்ச்சிக்கும், தாயின் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

    கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இருக்க வேண்டும். அதிலும் கோடை என்றால் கர்ப்பிணிகள் அதிக அளவில் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானங்கள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால், உடலின் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும்.

    தர்பூசணியில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை அனைத்தும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள். எனவே எவ்வித அச்சமும் இல்லாமல் கர்ப்பிணிகள் தர்பூசணியை சாப்பிடலாம்.

    கர்ப்பிணிகள் தர்பூசணியை உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தால் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறுவதோடு, சோர்வு ஏற்படுவதும் தடுக்கப்படும்.

    தர்பூசணியை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படும்.

    தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் கடுமையான தசைப் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் தரும்.

    தர்பூசணியில் உள்ள அதிகப்படியான லைகோபைன், கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வில் இருந்தும், குமட்டல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் தரும்.


    ஹார்மோன் செயல்பாடு மாற்றங்கள், உடல் பாகங்களின் செயற்திறன் மற்றும் குழந்தை பிறக்கும் முன்னர், பிறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்படுகிறது.
    கருத்தரிப்பதில் இருந்து குழந்தை பிறந்த ஆறேழு மாதம் வரை பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இதில் பெரும்பாலானவை மிக இயல்பானவை மற்றும் இயற்கையாக அனைவருக்கும் ஏற்படுவது தான். ஆனால், அந்தந்த பெண்களின் உடல்கூறு மற்றும் உடற்சக்தியை வைத்து சிலவன சீக்கிரமாக சரியாகிவிடும், சிலருக்கு சரியாக நாட்கள் அதிகரிக்கும். இதுப்போன்ற சமயங்களில் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது நல்லது.

    குழந்தை பிறந்து தொப்புள் கொடி அறுத்து பிரித்த பிறகு பெண்களின் கருப்பையில் ஒருவிதமான வலி உண்டாகும். இதற்கு மருத்துவர்கள் (அ) மருத்துவச்சி கருப்பை பகுதியில் ஒருவகையான மசாஜ் செய்துவிடுவார்கள். இதை ஆங்கிலத்தில் "Fundal Massage" என கூறுகிறார்கள்.

    இவ்வாறு ஃபண்டல் மசாஜ் செய்வது, பிரசவித்த பெண்ணின் வலி குறைய உதவும் என கூறப்படுகிறது. சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என இரு வகையாக இருப்பினும் இந்த வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது அந்தந்த பெண்ணின் உடற்கூறு, உடல் வலிமையை பொருத்தது.

    குழந்தை பிறந்த ஒருசில மணிநேரத்தில் இருந்து ஒருநாள் வரை பெண்களுக்கு உடல் நடுக்கம் அல்லது குலுங்குதல் போன்ற உணர்வு இருக்கும். இதற்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் தான் காரணம். ஒரு நாளுக்குள் இதுவே தானாக சரியாகிவிடும்.

    அறுவை சிகிச்சை மட்டுமின்றி, சுகப்பிரசவமாக இருப்பினும் கூட தையல் போட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏனெனில், பிரசவத்தின் போது பெண்ணுறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதியில் உண்டாகும் விரிதலால் சில சமயங்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், தையல் போட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

    குழந்தை பிறக்கும் போது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகும் கூட கருப்பையில் இருந்து இரத்தப் போக்கு ஏற்படும். இது இயல்பு தான், தானாக அதுவே சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை தொடர்ந்து இரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரிடம் கூற வேண்டியது அவசியம்.

    பொதுவாக ஆறேழு மாதத்தில் இருந்தே கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வர். இது மிகவும் இயல்பு. ஆனால், குழந்தை பிறந்த பிறகும் கூற இது தொடரும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம் பிரசவத்தின் போது சிறுநீர் பாதையில் ஏற்படும் மாற்றம் தான். இதனால், சில சமயங்களில் உணர்வின்றி கூட சிறுநீர் கசிவு ஏற்படலாம். தும்மல், இருமல் வரும்போது கூட சிறுநீர் கசியலாம். இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

    மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது தான் மார்பக புற்றுநோயின் அறிகுறி.
    மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது தான் மார்பக புற்றுநோயின் அறிகுறி. புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை ஆக்கிரமிக்கும்

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.

    இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது. மற்ற அறிகுறிகள்,

    1. மார்பகங்கள் அல்லது அக்குளில் புதிய அல்லது வழக்கத்துக்கு மாறான கட்டி, அல்லது தடித்து இருத்தல்
    2. மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்
    3. மார்பக தோலில் சிவப்பு தடுப்புகள் போல தொரிவது
    4. மார்பு காம்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வடிதல்
    5. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது
    6. மார்பகங்களில் வலி இது

    - போன்ற சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

    சுயபரிசோதனை

    * 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டு, தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    * 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவமனைக்குச் சென்று, அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது மார்பகங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்;

    * குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய்  பாதிப்பு இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் "மமோகிராம்' (சிறப்பு எக்ஸ் ரே) பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    * குடும்பத்தின் நெருங்கிய உறவினர் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் அல்லது சினைப் பை புற்று நோய் இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்கு மேல் மார்பக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
    பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம்.
    பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    சொல்லப்போனால் வெளியே எங்காவது செல்லும் போது, பிறர் முன் தாய்ப்பால் கேட்டு மானத்தை வாங்கிவிடுவர். அதனால் குறுநடை போடும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது மிக முக்கியம். கடினமான செயல் எனினும், சில முயற்சிகள் கொண்டு கீழே உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குறுநடை போடும் குழந்தைகளை தாய்ப்பாலில் இருந்து நிறுத்திவிடலாம்.

    முதலில் தாய்ப்பால் நிறுத்த நினைக்கும் போது தாயானவள், தன்னையே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால், தாய்ப்பாலை இயற்கையாகவே நிறுத்தப்படலாம். இது தாயின் உடல்வாக்கை பொறுத்து அமையும். எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம் இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். இல்லையெனில், முட்டைகோஸ் இலையை மார்பக பகுதிகளில் சில மணி நேரங்கள் வைத்து கொள்வதன் மூலமும் பால் குறைய வாய்ப்புள்ளது.

    திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் தாயின் உடல் சிறிது பாதிக்கப்படலாம். சில நேரங்களில் பால் கொடுக்காமல், தாயின் மார்பக பகுதியில் வலி ஏற்படும். அது மட்டுமின்றி குழந்தையின் மனநிலையும் பாதிக்கும். ஏனெனில் திடீரென நிறுத்தவதால், அவர்களுக்கு புரிந்து கொள்ளும் தன்மை குறைவாக இருப்பதால், அவர்களது மனநிலை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் தாய்ப்பால் நிறுத்தும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    படிப்படியாக மெதுவான முறையில் தாய்ப்பாலை விடுவித்தலால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாயானது அடைபட்டு, வீக்கம் அடைவது அல்லது மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே குழந்தைகளுக்கு முன்பு அடிக்கடி கொடுப்பதை நிறுத்திவிட்டு, மதிய வேளையில் இருமுறை கொடுத்தால், அந்த நேரம் ஒரு முறை வேறு ஏதாவது உணவு கொடுத்தும், மறுமுறை தாய்ப்பால் கொடுத்தும் வர வேண்டும். இதை செய்யும் போது, போக போக தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, உணவுகளைக் கொடுத்து மறக்க வைக்கலாம்.

    பால் கொடுக்கும் போது அவர்களுக்கு அழகான பாட்டிலில் கொடுக்கலாம். அதிலும் அந்த பாட்டிலை தாயானவள் குழந்தைக்கு கொடுக்கும் போது அதனை வர்ணித்தோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்துவிடுவோம் என்று பயமுறுத்தியோ கொடுக்கலாம். ஏனெனில் பொதுவாக சில குழந்தைகள், அவர்களுக்குரிய பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்கமாட்டார்கள். மேலும் சில குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருந்தால், தான் பால் குடிப்பார்கள், அப்போது தாயானவள் குழந்தையை மடியில் போட்டு அரவணைத்து, பாட்டிலின் மூலம் பாலைக் கொடுக்கலாம்.

    குழந்தையை உங்கள் மார்பகங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் முன்னிலையில் உடை மாற்றுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. குழந்தையுடன் சேர்ந்து குளியல் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகம் பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

    மேலும் குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும் போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். இதனால் அவர்களை தாய்ப்பாலில் இருந்து மறக்கடிக்கலாம்.

    காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவது பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்
    பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள்.

    அடிப்படைக் காரணம் முற்றும் புதியதான வாழ்க்கை முறைதான் என நம்பப்படுகிறது.

    சத்தான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது.இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியுறுகிறது.  எடை அதிகரிக்கிறது. அதீத எடை ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    பருவமடையும் வயது முன் நகர்வதற்கு இது காரணம் எனலாம். இன்றைய வாழ்க்கை முறைகள் காரணமாக முந்தைய சமூகத்தினரை விட இன்றைய பிள்ளைகள் சிறு வயதிலேயே புதியவை பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அனுபவிக்கவும் செய்கிறார்கள்.

    தொலைக்காட்சி மற்றும் கணினி காரணமாக இன்றைய பிள்ளைகளில் அறிவு விருத்தி வேகமாக கிடைக்கிறது. அதேபோல பாலியல் சம்பந்தமான அறிவும் விரைவில் கிட்டுகிறது. தொலைக்காட்சி, சினிமா ஊடாக இவை பற்றிய உணர்வுகளையும் பெறுகிறார்கள்.

    இவையே பாலியல் ஹோர்மோன்கள் விரைவில் தூண்டப்படுவதற்கு மற்றொரு காரணம் என நம்பப்பட்டது.

    இதைத் தவிர குழந்தைகள் பாலகர்களாயிருக்கும் காலத்தில் சோயா சார்ந்த பால் மாக்களையும் போசாக்கு மாக்களையும் பிரதான உணவாக உட்கொள்வதும் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    சோயாவில் உள்ள Phytoestrogen பெண்களின் ஹார்மோனான ஈஸ்ரஜின்னை ஒத்தது. இது பொதுவாக உடலுக்கு நல்லது என்றே கருதப்படுகிறது. ஆயினும் குழந்தைகளில் சோயா சார்ந்தவை பிரதான உணவாக அமைந்தால் பாதகமாக அமையலாம் எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    பரம்பரைக் காரணிகளும் அடங்கும். தாய் குறைந்த வயதில் பருவமடைந்தால் குழந்தைக்கும் அவ்வாறு நேர்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

    பூப்படைதல் என்பது முதல் முதலாக பெண்ணுறுப்பிலிருந்து குருதிக் கசிவு ஏற்படுவதாகும். அதாவது முதல் முதலாவது மாதவிடாய் ஏற்படும் நிகழ்வாகும். ஆனால் பருவடைதல் என்பது பூப்படைதலுக்கு முன்னோடியான நிகழ்வு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    பாதகங்கள்

    காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவது பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். காரணங்கள் இருக்கின்றன.

    எதிர்காலத்தில் இப்பெண்களுக்கு பாலுறுப்புகள் சம்பந்தமான புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். ஆஸ்துமா வருவதற்கான சாத்தியமும் அதிகமாகும். சமூக ரீதியாக அத்தகைய பெண் பிள்ளைகள் தவறான பாலியல் செயற்பாடுகளில் வயதிற்கு முன்னரே ஈடுபடுவதும், போதை பொருட்கள் பாவனையில் சிக்குவதும் அதிகம் என அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

    வகுப்பறை சிநேகிதர்களாலும் வெளி நபர்களாலும் இவர்கள் அதிகளவில் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகுகிறார்கள். இதனால் சில குழந்தைகள் உளநெருக்கீடு, மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பாதிப்பிற்கு ஆளாக நேர்வது துர்ப்பாக்கியமே.
    பருவமடைதலானது மூளை வளர்ச்சி நிறைவுறுவதுடன் தொடர்புடையது. எனவே காலத்திற்கு முந்திப் பருவமடைந்தால் மூளை வளர்ச்சி பூரணமடைவது பாதிப்படையலாம் எனவும் நம்பப்படுகிறது.
    ×