search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம்
    X

    சுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம்

    மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது தான் மார்பக புற்றுநோயின் அறிகுறி.
    மார்பகத்தில் உள்ள சில செல்கள் அளவுக்கதிகமாக வளர்வது தான் மார்பக புற்றுநோயின் அறிகுறி. புற்று நோய் செல்கள் மற்ற செல்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள திசுக்களை ஆக்கிரமிக்கும்

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்றுநோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.

    இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக்கூடாது. பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன் அறிகுறியாக உள்ளது. மற்ற அறிகுறிகள்,

    1. மார்பகங்கள் அல்லது அக்குளில் புதிய அல்லது வழக்கத்துக்கு மாறான கட்டி, அல்லது தடித்து இருத்தல்
    2. மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம்
    3. மார்பக தோலில் சிவப்பு தடுப்புகள் போல தொரிவது
    4. மார்பு காம்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வடிதல்
    5. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது
    6. மார்பகங்களில் வலி இது

    - போன்ற சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது.

    சுயபரிசோதனை

    * 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாளைத் தேர்வு செய்து கொண்டு, தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    * 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள், மருத்துவமனைக்குச் சென்று, அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது மார்பகங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்;

    * குடும்பத்தில் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய்  பாதிப்பு இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் "மமோகிராம்' (சிறப்பு எக்ஸ் ரே) பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    * குடும்பத்தின் நெருங்கிய உறவினர் யாருக்காவது ஏற்கெனவே மார்பகப் புற்று நோய் அல்லது சினைப் பை புற்று நோய் இருந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 30 வயதுக்கு மேல் மார்பக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
    Next Story
    ×