என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    குங்குமப் பூ சுகப்பிரசவம் உட்பட கர்ப்பிணிகளுக்கு எண்ணற்ற பலன்களை அளிக்கிறது.
    பொதுவாகவே கர்ப்பிணி பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை அழகாகவும், வெள்ளை நிறமாகவும் பிறக்கும் என்பது இதுவரையிலும் நம்பப்பட்டு வருகிறது.

    ஆனால் குழந்தையின் நிறத்திற்கு காரணம் அவர்களது பெற்றோரின் ஜீன்கள் தான். குங்குமப் பூ சுகப்பிரசவம் உட்பட கர்ப்பிணிகளுக்கு எண்ணற்ற பலன்களை அளிக்கிறது.

    கர்ப்பத்தின் போது குங்குமப் பூ சாப்பிட்டால் கண்புரை போன்ற பிரச்சனைகள் வராது என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    கருவுற்ற 5-ஆம் மாதத்திலிருந்து 9-வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும், இரத்த சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.

    அதுமட்டுமின்றி ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்வதால், செரிமானம் மேம்படுகிறது. குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும், பிரசவத்தின் போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க உதவுகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகப்படுத்தவும், வயிற்றுவலி பிரச்னைகளிலிருந்து தீர்வு அளிக்கவும் இது உதவுகிறது. குங்குமப் பூ உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டதால் கர்ப்பிணிகள் அதிகளவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
    இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
    * சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

    * இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன. இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.

    * இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருக்கும்.

    * உயரத்திற்கு ஏற்ற எடை சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

    * இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

    * ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.

    * முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    * குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.
    இன்பத்தைத் தரும் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் உறவில் ஈடுபடும் போது குதூகலம் அடைய முடியும்.
    உடலுறவின் மூலம் ஒருவர் அடையும் இன்பத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட இன்பத்தைத் தரும் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் உறவில் ஈடுபடும் போது குதூகலம் அடைய முடியும்.

    முத்தம் கொடுக்க துணை அருகில் வரும் போது வாய் துர்நாற்றத்துடன் இருந்தால், பின் அது மனநிலையை மாற்றி, உலை வைத்துவிடும். எனவே மறவாமல் உடலுறவில் ஈடுபடும் முன் பற்களைத் துலக்க வேண்டும்.

    படுக்கையில் துணையுடன் கொஞ்சி விளையாட ஆரம்பிக்கும் முன், உங்கள் மீது வியர்வை நாற்றம் வீசினால், அது மனநிலையையே மாற்றிவிடும். இதனைத் தவிர்க்க நல்ல நறுமணம்மிக்க சோப்பைப் பயன்படுத்தி தேய்த்து குளிக்க வேண்டியது அவசியம்.

    உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர்ப்பை நிரம்பிய நிலையில் இருந்தால், பின் துணையுடன் கொஞ்சி விளையாட ஆரம்பிக்கும் போது, சிறுநீர் கழிக்கத் தோன்றி, அது இருவரது மனநிலையையும் கெடுத்துவிடும். எனவே தவறாமல் உடலுறவில் ஈடுபடும் முன் சிறுநீர் கழித்துவிடுங்கள்.

    முக்கியமாக தோற்றத்தை மேன்மேலும் கவர்ச்சியாக வெளிக்காட்டும் வகையிலான உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம். வெளித்தோற்றம் கவர்ச்சியாக இருந்தால், அதுவே படுக்கையில் குதூகலத்துடன் இருக்க வழிவகை செய்யும்.

    நல்ல நறுமணமிக்க இதமான பெர்ஃப்யூம்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் மீது நல்ல நறுமணம் வீசினாலே போதும், அதுவே தானாக மனநிலையை மேன்மேலும் அதிகரித்து, உறவில் சிறப்பாக செயல்பட உதவும்.

    குறிப்பாக உடலுறவில் ஈடுபடும் முன் மொபைலை அணைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், முக்கியமான தருணத்தில் தேவையில்லாத போன்கால்கள் வந்து, உங்களின் மனநிலையை சிதைத்துவிடும்.

    பெண்கள் அன்றையதினம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதை நினைத்துக்கொண்டு இருந்தால் படுக்கையில் அறையில் உங்கள் மனநிலையை மட்டுமல்ல உங்கள் துணையின் மனநிலையையும் கெடுத்து விடும். எனவே எந்த பிரச்சனையை பற்றியும் யோசிக்காதீங்க.

    மேற்கூறிய விஷயங்கள் பெண்களுக்கு மட்டுமின்றி, இவற்றுள் சில ஆண்களுக்கும் பொருந்தும். எனவே உங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக அமைய நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ளதை தவறாமல் பின்பற்றுங்கள்.
    பருவ கால பழங்களில் மிகவும் சிறந்ததான மாம்பழங்களில் பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, ஏ, மற்றும் பி6 போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன.
    கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் அவர்களுக்கு உணவு சம்பந்தப்பட்ட மாறுதல் மற்றும் பசி போன்றவை மிக இன்றியமையாதது. இந்த 9 மாதங்களில், ஒரு பெண் எந்தவித உணவுக்கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல், தன் உடல் எடை அதிகரிப்பது பற்றி அதிகம் கவலைப்படாமல், நல்ல உணவை விரும்பி உண்கின்றாள்.

    ஒரு தாயானவள் சத்துக்கள் நிறைந்த உணவை அதிகம் உண்பது அவளுடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு தாய் உட்கொள்ளும் உணவானது அவளுடைய வருங்காலக் குழந்தைக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும் அருமருந்தாகும். எனவே ஒரு தாய் உட்கொள்ளும் எந்த ஒரு உணவும் அவளுடைய குழந்தையை நேரிடையாக பாதிக்கின்றது.

    ஒரு கர்ப்பிணி பெண் உட்கொள்ளும் உணவு மூலம் அவளுக்கு கிடைக்கும் சத்துக்கள் கர்ப்பத்தில் உள்ள அவளுடைய குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் கிடைக்கின்றது. எனவே, ஒரு கர்ப்பிணிப் பெண் அவளுடைய சாப்பாட்டில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

    ஒரு சில உணவுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஆயினும் சில உணவுகள் தாய்க்கும் அவளுடைய கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலை தரவல்லது.

    பருவ கால பழங்களில் மிகவும் சிறந்ததான மாம்பழங்களில் பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, ஏ, மற்றும் பி6 போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எவ்வுளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும்.

    இதைத் தவிர மாம்பழங்கள் கர்ப்பிணிப் பெண்ணிற்கு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பைத் தருகின்றது. மாம்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளன.

    மாம்பழங்கள் செரிமானத்திற்கு உதவும். எனவே இது கர்ப்ப காலத்தில் தோன்றும் சில செரிமானம் சம்பந்தப்பட்ட நோய்களான மலச்சிக்கல் போன்றவற்றை தீர்க்க உதவும். ஏனெனில் மாம்பழத்தில் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

    கர்ப்ப காலத்தில் இனிப்பை அதிகம் விரும்பும் பெண்களுக்கு ஒரு சிறந்த மற்றும் இயற்கையான மாற்றுப் பொருளாக மாம்பழம் உள்ளது. இதன் மூலம் உடல் பருமன் மற்றும் அஜீரணம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து கர்ப்பிணிப் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    எனவே, இது ஒரு கர்ப்பிணி பெண் எந்தவித பயமும் இன்றி மாம்பழங்களை சாப்பிடலாம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

    மாம்பழங்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளதால் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் அவதிப்படும் பெண்கள் மாம்பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

    கல் வைத்து அல்லது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே நீங்கள், இயற்கையாக விளைந்த மற்றும் தானாகவே பழுத்த மாம்பழங்களை மட்டுமே வாங்க வேண்டும்.
    கர்ப்பிணிகள் காபி, டீ குடித்தால் தீங்கு விளையும், ஆனால் அது அளவுக்கு அதிகமாக எடுத்தால் தான்.
    பொதுவாக காபி மற்றும் டீ போன்றவற்றை தூக்கம் வரும் நேரத்திலோ அல்லது சோர்வாக இருக்கும் போதோ குடித்தால், மனநிலை மேம்படும்.

    கர்ப்பிணிகள் எந்த ஒரு உணவையோ அல்லது பானத்தையோ குடித்தாலும், அது நஞ்சுக்கொடி மூலம் கருவை அடையும். மேலும் நஞ்சுக்கொடி குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் உணவுகளை வழங்குவதோடு, நச்சுமிக்க பொருட்கள் கருவை அடையாதவாறு தடையை ஏற்படுத்தி நல்ல பாதுகாப்பை வழங்கும். கர்ப்பிணிகள் காபி, டீ குடித்தால் தீங்கு விளையும், ஆனால் அது அளவுக்கு அதிகமாக எடுத்தால் தான்.

    ஒரு நாளைக்கு 200மி.கி-க்கு மேல் அதிகமாக காப்ஃபைனை எடுக்கக்கூடாது. அப்படியெனில், ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிக்கலாம். அதுவும் பாலில் அளவாக காபித் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இருப்பினும் கர்ப்ப காலத்தில் காபி குடிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது.

    200 மிலி அளவு கொண்ட கப்பில் அளவாக காபி தூள் சேர்க்கப்பட்ட காபி குடிக்கலாம். ஆனால் மிகவும் தூளாக்கப்பட்ட காபித் தூள், எஸ்பிரஸ்ஸோ போன்றவற்றில் காப்ஃபைன் அதிகம் இருக்கும் என்பதால், இவற்றைத் தவிர்க்கவும்.

    ஒரு நாளைக்கு ஓர் கர்ப்பிணிப் பெண் 200 மிகி-க்கு அதிகமாக காபியை குடித்து வந்தால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி. குழந்தை மிகவும் குறைவான எடையுடன் பிறக்கவும் வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க நினைத்தால், காபி குடிப்பதை ஒர் 10 மாதத்திற்கு நிறுத்தி வைக்கலாமே!

    நன்கு வளர்ந்த மனிதருக்கே காப்ஃபைன் தீங்கான ஓர் பொருளாக இருக்கும் போது, முழுமையாக வளர்ச்சியடையாமல் கருவில் உள்ள குழந்தைக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அதுவும் கர்ப்பிணிகள் காபியைக் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் இரத்தத்தில் கலந்துவிடும். நஞ்சுக்கொடி இதனை தடுக்காது. எனவே காபி குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

    காபியுடன் ஒப்பிடுகையில் டீ குடிப்பது சிறந்தது எனலாம். ஏனெனில் காபியை விட டீயில் காப்ஃபைன் அளவு குறைவாக உள்ளது. கர்ப்பிணிப் பெண் டீ குடிப்பதாக இருந்தால், அளவாக டீ தூள் சேர்த்து தயாரிக்கப்பட்ட டீயைக் குடிப்பது நல்லது. அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் காப்ஃபைன் அளவு அதிகமாக இருப்பதோடு, இதில் உள்ள வேறு சில சேர்மங்கள் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.

    ஆண்கள் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகளை சரி செய்துக் கொண்டால். அந்தப்புரம் இன்பப்புரம் ஆகிவிடும்.
    ஆண்கள் கட்டிலில் செய்யும் சிறு சிறு தவறுகள் பெண்களை வெறுப்படைய செய்கிறதாம். என்னதான் வெறுப்பு வந்தாலும், கணவன் என பெண்கள் பொறுத்துப் போகின்றனர். ஆண்கள் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகளை சரி செய்துக் கொண்டால். அந்தப்புரம் இன்பப்புரம் ஆகிவிடும் என சாஸ்திரீக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    அந்த தவறுகளை தொடர்ந்து செய்து வந்தால், ஆண்கள் பின் நாட்களில் நிறைய சங்கடங்களை அனுபவிக்க நேரிடும் என வல்லுனர்கள் மீண்டும் கூறுகின்றனர். சரி, அப்படி என்ன சின்ன சின்ன தவறுகளால் பிரச்சனை ஏற்படுகிறது என தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்…

    ஆண்கள் பிறவியிலேயே அந்த விஷயத்தில் சீக்கிரம் உச்சம் கொள்ளும் பண்புடையவர்கள். ஆனால், பெண்கள் அப்படியில்லை, அவர்கள் உச்சமடைய ஆண்கள் தான் உதவ வேண்டும். அதை தவிர்த்து தன் வேலையை மட்டும் பார்த்து கொண்டு சுகம் அனுபவிக்க ஆண்கள் முயல்வது முதல் தவறு. பெரும்பாலான பெண்கள் ஆண்களின் வார்த்தை விளையாட்டில் தான் உச்சம் அடைகின்றனர். எனவே கட்டிலில் ஆண்கள் இந்த தவறை செய்யவேக் கூடாது.

    சில ஆண்களுக்கு கடிக்கும் பழக்கம் இருக்கும். உடலுறவில் இது ஒருவகையான விளையாட்டு தான் என்றாலும். பெண்களின் மென்மையான பாகங்களை ஆண்கள் சில சமயம் வலுவாக கடிப்பதனால், பெண்கள் மிகவும் வேதனை அடைகின்றனர். எனவே, இந்த வேலை செய்வதை ஆண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    ஆண்கள் பல சமயங்களில் ஆங்கில படத்தை பார்த்துவிட்டு, இந்திய பெண்களிடம் அவர்கள் செய்வதைப் போல செய்ய தூண்டுவது தவறு என்கின்றனர். அனைத்து பெண்களுமே அனைத்தும் அறிந்தவராக இருக்கமாட்டார்கள். ஆண்கள் தான் மெல்ல மெல்ல புரிய வைத்து அனுபவிக்க வேண்டும். அதை தவிர்த்து பெண்களைக் கட்டாயப்படுத்துதல் தவறு.

    ஏதோ இன்று தான் கடைசி நாள் என்பது போல, அதிக வேகம் காட்டுதலை பெண்கள் வெறுப்பதாக கூறப்படுகிறது. பெண்கள் இந்த விஷயங்களில் பொறுமையாக செயல்படும் ஆண்களையே விரும்புகின்றனர். எனவே, நீங்களும் இனி உங்கள் பெண் விரும்பும் ஆணாக செயல்பட வேண்டியது அவசியம்.

    ஆண்கள் தங்கள் இன்பம் முடிந்த பின்பு, அவர்களது துணையும் முழு திருப்தி அடைந்தாரா என தெரிந்துக் கொள்வதில்லை.
    பல ஆண்களுக்கு காரியம் முடிந்தவுடன் உறக்கம் வந்துவிடும். ஆனால், பெண்களோ காரியம் முடிந்த பின்னர் தான் அதிகம் சுகம் தேடுவர். ஆண்கள் காரியம் முடிந்த பின்னர் பெண்களிடம் நிறைய பேச வேண்டும், அவர்களின் ஆசை தணியும் வரை பேச வேண்டும் என்று விரும்புவார்கள்.

    இந்திய ஆண்கள் பொதுவாகவே சாப்பாட்டிலேயே முழு கவனமாக இருப்பார்கள் சைடு-டிஷ்ஷை மறந்துவிடுவார்கள். இதே தவறை பல ஆண்கள் இரவிலும் செய்கின்றனர். அது தவறு, வேலை முடிந்த பிறகு தான் பெண்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள். முக்கியமாக ஆசையான முத்தங்கள். இதை பெரும்பாலான ஆண்கள் நிறைவேற்றுவதில்லை என பெண்கள் கூறுகின்றனர்.

    தினந்தோறும் ஒரே உணவை சமைத்தால் பெண்களை திட்டும் ஆண்கள், தினம்தோறும் அவர்கள் மட்டும் அந்த விஷயத்தில் ஒரே மாதிரி செயல்படுதல் குறித்து யோசிப்பது இல்லை. எனவே, ஆண்கள் நிறைய வெரைட்டிகளைக் கையாள வேண்டும்.
    கருப்பை கட்டிகள் பொதுவாக நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படக்கூடியவை.
    கருப்பை கட்டிகள் பொதுவாக நடுத்தர வயது பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. இவற்றின் அளவு மிகச்சிறிய அளவில் இருந்து மிகப்பெரிய அளவு வரை வேறுபடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட பல கட்டிகள் உண்டாகலாம்.

    அறிகுறிகள்:

    அதிகப்படியான இரத்தப்போக்கு, அடிக்கடி இரத்தப்போக்கு, மாதவிலக்கின்போது அதிகமான வலி, அடிவயிறு வலி மற்றும் வீக்கம், இளம் வயது பெண்களுக்கு கருத்தரிப்பதில் காலதாமதம் மற்றும் கருச்சிதைவு, மிகப்பெரிய அளவிலான கருப்பை கட்டிகள் சில சமயங்களில் நீர்ப்பை மற்றும் மலக்குடலை அழுத்துவதால் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் வலி மற்றும் சிரமம் ஏற்படலாம்.

    சிகிச்சை முறைகள்:

    இளம் வயது பெண்களுக்கு இந்த வகை கட்டிகள் ஏற்பட்டால் கருப்பையை முழுமையாக அகற்ற வேண்டியது இல்லை. மையோமைக்டெமி எனும் அறுவை சிகிச்சையின் மூலம் இந்த கட்டிகளை கருப்பைக்கு எந்தவித சேதமும் இல்லாமல் அகற்றலாம். இதனால் பிற்காலத்தில் கருத்தரிக்க ஏதுவாகிறது. ஆனால் 40 வயதிற்கு மேல் இக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் கருப்பை முழுவதையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது நல்லது. ஏனென்றால் இவ்வகை கட்டிகள் திரும்ப திரும்ப வளரும் தன்மை கொண்டவை.

    சிலருக்கு மிகச்சிறிய அளவிலான கட்டிகள் எந்தவித தொந்தரவுகளையும் கொடுப்பதில்லை. அப்படிப்பட்ட கட்டிகளுக்கு வைத்தியம் தேவை இல்லை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேன் செய்து அவற்றின் வளர்ச்சியை கண்காணித்து கொண்டு வர வேண்டும். அவை மிக அதிகமாக வளர்ந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை அவசியமாகிறது. 45 வயதிற்கு மேல் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் அவை தானாகவே சுருங்கி மறைந்து விடுகின்றன.

    மிகப்பெரிய அளவிலான பைப்ராய்டு கட்டிகளை கூட லேப்ராஸ்கோப் மூலம் மிகச்சிறு சிறு துண்டுகளாக்கி அகற்ற முடியும். இதனால் ஆபரேஷனுக்கு பின்னால் ஏற்படும் வலி இருப்பதில்லை. விரைவில் வீடு திரும்பி 5 தினங்களுக்குள் அன்றாட வேலைகளில் வழக்கம் போல் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

    உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
    தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும்.

    ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும்.

    இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.
    ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் தவறாமல் கடைப்பிடித்து வரவேண்டும்.

    கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் வெகு நேரம் இருப்பதை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. மழையில் நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

    எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் குடிப்பது நல்லது. அதிக நீர் குடிக்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

    அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

    சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

    மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. பழங்களாக சாப்பிட பிடிக்காதவர்கள் ஜூஸ் செய்து அருந்தலாம். கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது.

    அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

    பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர்.
    பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்த சோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம.

    பெண்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறி பழங்களில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவுகள் பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.

    பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய சால்மன், நெத்தலி, கானாங்கெளுத்தி, நெத்திலி மற்றும் மத்தி உள்ள அனைத்து வகை மீன்களையும் உட்கொள்ளலாம். மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்றநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். வால் நட் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது.

    இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

    அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், விட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    அதேபோல் பெண்கள் தினசரி இருவேளை பால் உட்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. விட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.

    ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் விட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு பிஎம்எஸ் எனப்படும் மாதவிடாய் கால சிக்கல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

    கீரைகளில் எண்ணற்ற விட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் பெண்களுக்கு பி.எம்.எஸ் சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரையை உட்கொள்ள வேண்டும்.

    தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும்.
    இந்த வகை கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத்தாய் அறிய வாய்ப்பில்லை.

    கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக்குழாயில் வளர்ந்தால் அந்தக்கருவை காப்பாற்றமுடியாது. கவனிக்காமல்விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம். இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு உருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச்சென்று கர்ப்பப்பையினுள் வைக்கிறது.

    அங்கு அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும். கர்ப்பப்பை மட்டுமே கருவைத்தாங்கி அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது.

    மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளரமுடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச்செய்துவிடும். சில நேரங்களில் கருவானது குழாயிலேயே அழுகிப்போகலாம். அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும் கருவானது கர்ப்பப்பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

    அப்படித்தெரியாவிட்டால் கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம். இரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா என கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்றமுடியாது. அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச்செய்யவேண்டும்.

    அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து கருக்குழாயை பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் கருக்குழாயையும் நீக்கவேண்டி வரும். இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால் அந்தப்பெண் பயப்படத் தேவையில்லை. கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது. 
    பெண்ணை தாயாக்கும் கர்ப்பம் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு பலவித சங்கடங்களையும் கொடுக்கிறது.
    பெண்ணை தாயாக்கும் கர்ப்பம் உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுத்தாலும், உடல் ரீதியாக அந்த பெண்ணுக்கு பலவித சங்கடங்களையும் கொடுக்கிறது. ஆனால் இந்த கர்ப்ப காலத்திலும் சங்கடம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் காலமும் உண்டு.

    ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை வெளியே சொன்னால் ஒழிய மூன்று மாதங்கள் வரை வயிற்றுப்பகுதியில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. நான்காவது மாதத்தில்தான் வயிறு பெரிதாவது தெரியும். வயிற்றின் தசைகளும், தோலும் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடைகின்றன. ஒவ்வொரு மாதமும் இது அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

    குழந்தை பிறந்த பின், தோல் மறுபடியும் சுருங்கத் தொடங்கும். வயிறு விரிந்து, சுருங்குவதால் குழந்தை பெற்ற பெண்களுக்கு அடி வயிற்றுப்பகுதியில் நரம்புகள் போல் கோடுகள் நிரந்தரமாக விழுவதுண்டு. கொஞ்சம் கவனமாக இருந்தால் இந்த வெள்ளை தழும்புகளை வரவிடாமல் தவிர்க்கலாம். கோகோ பட்டர், ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடி வயிறு முழுக்க தடவி, அரை மணி நேரத்திற்குப் பின் குளித்தால் வயிற்றில் அதுபோன்ற கோடுகள் விழாது.

    அதே போல் சமையலுக்கு பயன்படும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தடவலாம். வயிற்றில் எண்ணெய் தடவும் இந்த முறை வயிறு விரிவடையத்தொடங்கும் நான்காவது மாதத்தில் இருந்தே ஆரம்பித்து விடுவது நல்ல பலனை தரும். வயிறு போன்றே இந்த காலக்கட்டத்தில் சில பெண்களுக்கு மார்பகம் கூட சராசரி அளவை விட பெரிதாகி பின்னர் சிறிதாகும். இதனால் மார்பக பகுதிகளிலும் கூட இந்த வெள்ளைக்கோடுகள் தென்படத் தொடங்கும்.

    அதற்கும் இதே வழியைப் பின்பற்றலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண் உடல் ரீதியாக தொல்லை இன்றி சந்தோஷமாக இருக்கும் காலக்கட்டமும் இந்த நான்காவது மாதம்தான். சாப்பிட முடியாமல் தலைச்சுற்றி மயக்கம் வருவதெல்லாம் முதல் 3 மாதங்களோடு சரியாகிவிடும்.

    நான்காவது மாதத்தில் இருந்து ஓரளவுக்கு நன்கு சாப்பிட முடியும். ஊட்டமான சாப்பாடு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் பூரிப்பு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறையாத தன்மை ஆக இந்த 3 காரணங்களும் ஒன்றாக சேர நான்காவது மாதத்தில் இருந்து 6-வது மாதம் இறுதி வரை பெண்களின் முகம் பளிச்சென்று பூரிப்போடு பிரகாசிக்கும்.
    ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.
    பல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும்.

    உடல் ரீதியான நெருக்கத்தை வளர்த்தல் மற்றும் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துதல் எனும் போது, உடலுறவில் பல பயன்கள் உள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு அதிக பயன்கள் அடங்கியுள்ளன.

    * வாரத்திற்கு 4 தடவைக்கு மேல் உடலுறவில் ஈடுபடுபவர்கள் தங்கள் உண்மையான வயதை விட 10 மடங்கு இளமையாக தோன்றுவார்கள் என 10 ஆண்டு கால ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆக்சிடாஸின் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகள் உள்ளதால், உடலுறவில் ஈடுபடுவது நன்மையை அளிக்கிறது. “உடலுறவு கொள்ளும் போது, ஆக்சிடாஸின் மற்றும் பீட்டா எண்டோர்பின்கள் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகளில் உங்கள் சருமம் குளிக்கும். நமக்கு வயது ஏறும் போது, நமக்கு பழுது ஏற்படும் அளவிற்கு குணமாகும் தன்மை இருப்பதில்லை. ஆனால் உடலுறவு கொள்வதால் இந்த பிரச்சனை நீங்கும்.

    * உடலுறவு கொள்வதால் ஒற்றைத் தலைவலி பிரச்சனைகள் தடுக்கப்படும் என தற்போதைய ஆய்வுகள் கூறுகிறது. உடலுறவில் ஈடுபடும் போது உற்பத்தியாகும் என்டார்பின்கள் நல்ல உணர்வை உண்டாக்கும். இது வலியை குறைக்க உதவும்.

    * இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தலைவலிக்கு கூறப்பட்ட அதே காரணம் இதற்கும் பொருந்தும். அதற்கு காரணம் எண்டார்பின்கள் மற்றும் ஆக்சிடாக்சின் போன்ற ஹார்மோன்கள் வெளிப்படும் போது பதற்றம் மற்றும் அழுத்தம் நீங்கும்.

    * சீரான முறையில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்வாய் படும் வாய்ப்புகள் குறையும். அதிகமாக உடலுறவு கொள்ளாதவர்களை விட, அதிகமாக உடலுறவு கொள்பவர்களுக்கு ஆன்டிஜென் இம்யூனோக்ளோபின் ஏ 30% அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சளி மற்றும் காய்ச்சலில் இருந்து ஆன்டிஜென் உங்கள் உடலை பாதுகாக்கும். இதனை உங்கள் உணவிலும் சேர்த்துக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.

    * உடல் எடையை குறைக்கும் சந்தோஷமான வழிகளில் தாம்பத்தியமும் ஒன்று. உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆண்கள் 4.2 கலோரிகளையும், பெண்கள் 3.1 கலோரிகளையும் எரிக்கின்றனர்.
    ×