என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெண்கள் இறுக்கமான உடை அணிந்தால் என்னனென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். இளம் பெண்கள் உடை அணிந்ததே தெரியாத அளவுக்கு, லெகின்ஸ், டைட்ஸ் என நவநாகரிக உடைகள் இப்பொழுது கடைகளில் கிடைக்கின்றன. பெண்கள் நடந்து செல்வதற்கும், வண்டி ஓட்டுவதற்கும், இறுக்கமான உடைதான் சௌகரியம் என்று கருதுகின்றனர்.
ஆனால், உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உடலுக்கு நல்லதல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும்.
அணியும் உள்ளாடைகள், காலணி உறைகள் உட்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும். உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.
ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. காற்று உட்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.

சிறுநீர் கழிப்பதை பொறுத்தவரை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கீழே பார்க்கலாம்.
ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக்குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப்பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப்பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத பெண்களுக்கு உள்ளது. இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.
ஆண் பெண் இருபாலரின் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவப் பிரிவுக்கு ‘யுராலஜி (Urology) என்று பெயர். மகளிர் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பிரிவுக்கு ‘கைனகாலஜி’ (Gynaecology) என்று பெயர்.
மகளிர் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு மட்டும் பிரத்தியேகமாகச் சிகிச்சை அளிக்க ‘யுரோகைனகாலஜி’ (Urogynaecology) என்ற சிறப்பு மருத்துவப் பிரிவு உள்ளது.
இவ்வாறு மகளிர் சிறுநீரியல் மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள டாக்டருக்கு ‘யுரோகைனகாலஜிஸ்ட்’ (Urogynaecoligist) என்று பெயர்.
ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.
இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.
இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாத வகைக்கு ஏற்ப அதைத் தீர்க்க நல்ல மாத்திரைகள் உள்ளன. பிரச்சினைக்கு ஏற்ப மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தற்போது நவீன சிகிச்சை முறை உள்ளது. டிவிடி (Tension Free Vaginal Tape) என்ற இந்த நவீன சிகிச்சை முறையில் டேப்பைக் கொண்டு பாதிப்புக்கு வலுப்படுத்தப்படும். இந்த நவீன எளிய சிகிச்சையை காலையில் செய்து கொண்டு மாலையில் வீடு திரும்பி விடலாம். இச்சிகிச்சை, லாப்ராஸ்கோப்பி சிகிச்சையைக் காட்டிலும் எளிமையானதும் சிறந்த பலனை அளிக்கக்கூடியதும் ஆகும்.
அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை.
அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.
இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, குழந்தைக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.
இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
புண்ணாகிவிட்ட நிப்புளை என்னதான் செய்வது?
குழந்தைக்கு பால் கொடுக்காத நேரங்களில் நிப்புளில் வேக்சலின் போன்ற க்ரீமைத் தடவி (டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு) வரலாம். பால் கொடுக்கும் சமயத்தில் மார்பகத்தை தண்ணீர் மற்றும் மைல்டான சோப்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு குழந்தைக்குப் பால் கொடுக்கலாம்.
குறைப் பிரசவத்தால் பிறந்த குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது?
ஒரு சில நேரங்களில் குழந்தை சரியாகப் பாலைக் குடிக்கத் தெரியாமல் திணறலாம். அல்லது நிப்புள் புண்ணாகிவிட்டது போன்ற சில சங்கடமான நேரங்களில் அம்மாவும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் போகலாம்.
இந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்வது?
மேலும் சில சமயங்களில் குழந்தை ஃப்ரீ - மெச்சூராக அதாவது, டெலிவரிக்கான தேதிக்கு வெகுநாட்கள் முன்பாகவே பிறக்கும். அந்தக் குழந்தைகளை தாயிடம் உடனே கொடுத்துவிடாமல் பெரும்பாலும் இன்குபேட்டர் பெட்டியில் வைத்துதான் பராமரிப்போம். இன்னும் சில குழந்தைகள் பிறக்கும் போதே உதடு பிளந்தது போன்ற (CLEFT LIP) நிலையில் பிறக்கலாம். இப்படி சில பிரச்சனைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்ய இதோ ஒரு வழியிருக்கு..
இதுபோன்ற சமயங்களில் குழந்தைக்கு Expressed Milk கொடுக்கலாம்.
இது ஒன்றும் பெரிய விஷயமில்லை... தாய்ப்பாலைத் தாயிடமிருந்து வேறு வழிகளில் எடுத்துச் சேகரித்துக் கொடுப்பதுதான்.
மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இந்நிலை நீடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
எலும்பரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை. எலும்புகள் எலும்பரிப்பால் பலகீன மடைந்திருக்கும் போது பலமாக இருமினால்கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் தற்சமயம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட ‘எலும்பரிப்பு நோய்’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.
இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள். ஆண்களைவிட பெண்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.
35 வயது வரையில் எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் பெண்களுக்கு ஒரே சீராக உள்ளது. அதன்பின் ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை அடைகிறது. அதுதான் எலும் பரிப்பு துவக்க நிலை. 35 வயதுக்குப் பின் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் 0.3 சதவீதம் என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படுகிறது. மாதவிலக்கு நின்ற பின் பெண் களுக்கு எலும்பு எடை குறைவு 0.5 சதவீதம் என அதிகரிக்கிறது. இந்த வேகத்தில் ஒரு பெண் தன் 60 வயதிற்குள் 30 முதல் 35 சதவீத அளவுக்கு எலும்பின் எடை குறையும் அபாயத்தை எட்டுகிறாள். இந்நிலையில் எலும்பு முறிவுகள் வெகு சுலபமாக ஏற்படுகிறது.
எலும்புகள் கல் போன்று உறுதி கொண்டவை என நாம் நினைக்கிறோம். இது ஒரு தவறான கருத்து. பல்வேறு ரசாயன ஊக்கிகளின் தாக்குதலுக்கு இணக்கமாகி சுண்ணாம்புச் சத்து உயிரியத்தால் மென்மைப்பட்டு வலுக்குறைந்து முறியும் நிலைக்கு உள்ளாகி விடுகிறது.
மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட்ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
சுண்ணாம்புச் சத்து சமநிலையில் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும். அதிலும் பெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும்.
மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.
நோயைத் தடுக்கும் முறைகள் :
நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ‘ஈஸ்ட் ரோஜன்’ அளவு குறைவதும் எலும்பரிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.
சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.
மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.
ஆல்கஹால், சிகரெட் பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும். உணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறையும் பண்களுக்கு எலும்பரிப்பு நோய் ஏற்படுவது போல Testosterone அளவு குறைந்தால் ஆண்களுக்கும் இந்நோய் ஏற்படுகிறது.
மாதவிலக்கு நின்ற பெண்களும், குடும்பத்தில் எலும்பரிப்பு நோய் உள்ளவர்களும் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்நோய் தீவிரமடையாமல் தடுக்கலாம்.
கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடலில் பல விதமான மாற்றங்கள் காணப்படும். உடல் ரீதியாக பெண்கள் நிறைய மாற்றங்கள் உணர்வார்கள். அதனை பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.
* உடலில் கர்ப்பம் சார்ந்த ஹார்மோன் அதிகரிப்பதால் சில சுரப்பிகள் அதிகரிக்கும். இந்த சுரப்பி மார்பகம் பெரிதாக காரணியாக இருக்கின்றது. இதனால், கர்ப்பக் காலத்தில் பெண்கள் மார்பகத்தை சற்று பாரமாக உணர்வார்கள்.
* நீல நிறத்தில் நரம்புகள் மார்பக பகுதியில் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் அதிகப்படியான இரத்த ஓட்டம் தான்.
* கருவுற்ற பெண்கள் சிலருக்கு மார்பக முலைக்காம்பு பகுதி கடினமாகவும், பெரிதாகவும் காணப்படும். திசு பெரிதாகும் போது சில பெண்கள் மத்தியில் இந்த மாற்றம் காணப்படலாம்.
* இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் போதே கர்ப்பிணி பெண்களுக்கு பால் சுரக்கும். இதனால், அவர்களுக்கே அறியாமல் பால் வடிதல் உண்டாக வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறக்கும் முன்னரே பால் வடிதல் உண்டாவது இயல்பு தான்.
* மார்பகங்கள் திடீரென பெரிதாவதால் ஸ்ட்ரெச் மார்க் உண்டாகலாம்.
* மார்பகங்கள் பெரிதாவதால் தொங்குவது போன்ற தொய்வு காணப்படும். இது கர்ப்பக் காலத்தில் குறைவாக இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதை தவிர்க்க, பெண்கள் பிரசவத்திற்கு பிறகு முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும்.
மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை 'பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும்.
இந்த 'பி.எம்.எஸ்.' பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு 'பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது.
அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம்.
மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.
- கோபம் தொடர்ந்து நீடித்தல்.
- வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.
- சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.
- காரணமில்லாமல் அழுதல்.
- தன்னால் எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.
- மற்றவர்களை தன்பக்கம் ஈர்க்கத் தெரியாமல் தடுமாறுதல்.
- கடுமையான சோர்வு.
- உறக்கம் இல்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
- பசியில்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
- கட்டுப்பாடற்ற சில செயல்பாடுகள் போன்றவை பி.எம்.டி.டி.யின் இதர அறிகுறிகள்.
சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.
பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் 'சிரோட்டோத்தின்' அளவு குறையும். இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.
பி.எம்.டி.டி. பாதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் என்னென்ன?
ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அதுபோல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.
நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளை அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது.
பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.
உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. குறைபாடுகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் சமமாக அதிகரித்து கொண்டு வருகிறது. உணவு பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் மாறிவருவதால் பெண்களில் நீர்கட்டிகள் (Fibroid), கர்ப்பப்பை கட்டிகள் மற்றும் மாதவிடாய் தொந்தரவுகள் அதிகமாகிறது.
அதுமட்டுமின்றி தைராய்டு, சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் கருமுட்டையின் தரமும், எண்ணிக்கையும் குறைகிறது. இது வயது ஆக ஆக மேலும் குறைந்து கொண்டே போகும். இது போல் ஆண்களுக்கு உடலுறவு சம்மந்தமான பிரச்சினைகள் மட்டுமின்றி விந்தணுக்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
50% சதவீதம் பேருக்குதான் விந்துகளால் DNA Fragmentation ஏற்படுகிறது. இது முக்கியமாக Stress மற்றும் அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படுகின்றது. இதை தெளிவாக ஸ்கேன் மற்றும் DF1 என்ற முறையின் மூலமாக தெரிந்துக்கொண்டு சிகிச்சை அளித்தால் கருவின் தரத்தை அதிகரித்து IVF சிகிச்சையில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கமுடியும்.
கடந்த முப்பது வருடங்களில் குழந்தை பேறின்மை துறையில் பலவகையான முன்னேற்றங்கள் வந்தாலும், கரு உருவான சில தினங்களிலேயே அதிகமாக கருக்கலைப்பு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு முக்கியமாக தம்பதியரை முதலிலேயே சரியாக கண்டறிதல் (Fertility Evaluation) மிக பெரிய காரணம் ஆகிறது.
IVF சிகிச்சையில் ஒரு டாக்டரின் பங்கு மிக முக்கியமானது. Cup dub. Personalized Infertility Care (PIC) மூலமாக ஒரு தம்பதியரை முழுமையாக ஆய்வு செய்து சரியான நேரத்தில் கருவை வைக்கும் போது IVF சிகிச்சையில் அதிகமாக வெற்றி கிட்டுகிறது. அது மட்டுமின்றி கருகலைதலும் பெரிதும் தடுக்க முடியும்.
“GBR கருவுறாமை மையத்தில் நான் முதலில் சிகிச்சைக்கு வருபவருக்கு எல்லா விதமான தகுதிகளும் உள்ளதா என Personalized Infertility Care (PIC) மூலமாக கண்டறிந்து அவர்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அதை நிவர்த்தி செய்த பின்னரே சிகிச்சை அளிக்கப்படும். இதனால் IVF சிகிச்சையில் வெற்றி அடைவதற்கு மிகவும் அதிகமான வாய்ப்புகள் உண்டு.
ஆண்களின் விந்துக்கள் மிகவும் ஆழமாக ஆராயப்பட்ட பின்னர், பெண்களின் கருவின் தரத்தை உயர்த்தி சரியான நேரத்தில் கருவில் கருவை வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு மூன்றுமுறை தோல்வி அடைந்தவருக்கு கருப்பையில் ERA என்ற ஒரு ஸ்பெஷல் Biopsy செய்யப்பட்டு கருவின் ஒட்டும் நேரத்தை துல்லியமாக கண்டறியப்படுகிறது. பின்பு அந்த நாளில் கருவைக்கும்போது Implantation அதிகரித்து நிறைமாதம் வரை பிரச்சினை இன்றி கரு சுகமாக வளர்கிறது.
ஒரு சிலருக்கு கருவில் குறைபாடுகள் இருப்பின் அவர்களுக்கு PGD என்கின்ற முறையில் சரியான கருவை தேர்வு செய்து வைக்கப்படுகிறது. இந்த மாதிரியான பல நுட்பங்கள் மற்றும் சிகிச்சைகளால் மிக அதிகமான வெற்றி வாய்ப்பை கொடுப்பதோடு Recurrent Pregnancy Loss என்கின்ற அடிக்கடி கரு கலையும் பிரச்சினையும் பெரிதும் தடுக்கப்படுகிறது.
- டாக்டர். ஜி.புவனேஸ்வரி,

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு உடனடியாக முடிந்த வரை தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியமானது.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு மாதத்தில் தாய்ப்பால் நிறைய அளித்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, கவனிக்கும் திறன், கற்கும் திறன் ஆகியவை அதிகரிக்கும். அதேபோல் அந்த குழந்தைக்கு வயது 7 ஆகும்போது, மூளையின் செயல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை தீவிர குழந்தை சிகிச்சை பிரிவில் வைத்திருக்கும்போது, உடனடியாக முடிந்த வரை தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பது மிக அவசியம். இவை மருத்துவ சிகிச்சையோடு, தாய்ப்பாலின் மகத்துவமும் சேர்ந்து விரைவில் குழந்தை முழுவளர்ச்சி அடைய உதவுகின்றது.
போதிய வளர்ச்சி இல்லாமல் முன்னதாக பிறக்கும் குழந்தைக்கும், கல்லீரல், மூளை மற்றும் மற்ற உறுப்புகள் சரிவர முழுமையடைந்திருக்காது. அந்த சமயங்களில் தாய்ப்பால்கள் கொடுக்கும்போது, வேகமான முன்னேற்றம் காணப்படுகிறது.
தாய்ப்பாலின் மகத்துவம் எவ்வாறு குறைபிரசவக் குழந்தைகளுக்கு நன்மைகளைத் தருகிறது என ஆராயும் நோக்கில் இந்த ஆராய்ச்சியை சுமார் 180 குறைப் பிரசவ குழந்தைகளிடம் மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி அவர்கள் 7 வயது ஆகும் வரை தொடர்ந்தது.
ஆனால் நிறைய தாய்மார்கள் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க சிரமப்படுகின்றனர். காரணம் அந்த குழந்தைகளுக்கு உதடுகள் சரிவர வளர்ச்சி அடைந்திருக்காது.
மேலும் குழந்தையால் குடிக்க முடியாமல் திணரும். இந்த நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது சவாலாகவே இருக்கும். இதற்கு மருத்துவமனைகளிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்களின் தக்க உதவியோடு, தாயால் குழந்தைக்கு தாய்ப்பாலை கொண்டு சேர்க்க முடியும் என அவர் கூறுகிறார்.
காரணம் இந்த சமயத்தில் தாய்களுக்கு மன அழுத்தம், சரியான தூக்கமில்லாமலும், ஹார்மோன் மாற்றங்களாலும், அவர்களின் உடல் பாதிக்கப்படும். இந்த மாதிரியான கட்டங்களில் அவளுக்கு அரவணைப்பும், போதிய ஊடச்சத்தும் மிக முக்கியம்.
இந்த 7 வருட ஆய்வில், குறைபிரசவக் குழந்தைகளுக்கு அதிகம் தாய்ப்பால் தரப்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சி, கற்கும் திறன் ஆகியவை, மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக காணப்பட்டது.

மாதவிடாய் சரிவர வராததற்கு காரணங்கள் இவைதான் என குறிப்பிடும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
மாதவிடாய் 28- 30 நாட்களுக்குள் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதென பொருள். மாதவிடாய் வரும்போது உங்களுக்கு உடல் அசதி, கால் வலி, தசை வலி வருகிறதே என கவலைப்படாதீர்கள்.
மாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு தடவை வந்தால் அதற்கு பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனைகள் என்று சொல்லலாம். ஆனால் எப்போதும் இப்படி சீரற்ற மாதவிலக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. உங்கள் சீரற்ற மாதவிடாய்க்கு கீழே சொல்பவைகளும் காரணமாக இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி டயட் என இருக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக காணப்படும். கொலஸ்ட்ரால் பாலின ஹார்மோன்கள் சுரக்க இன்றியமையாதது. கொலஸ்ட்ரால் குறைவால் ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காமல் போகும். இதனால் சீரற்ற மாதவிடாய் தோன்றலாம்.
தைராய்டு பிரச்சனை, மன வியாதிக்கு என எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாத விடாய் சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். மருந்துக்களின் வீரியமும் ஹார்மோன் மாற்றங்களுக்கு காரணமாகலாம்.
கொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்திக்கு தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிடாய் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
மன அழுத்தம் தரக் கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும்போது, அது பலப் பிரச்சனைகளை உண்டாகும். அதிலொன்று சீரற்ற மாதவிடாய். மன அழுத்தம் இனப்பருக்க மண்டலத்தை பாதிக்கும்.
போதிய தூக்கம் இல்லாமல் போனாலோ, அல்லது ஒழுங்கு முறையில்லாமல், தாமதமாக தூங்கச் செய்வது ஹார்மோனை பாதிக்கும். குறிப்பாக நைட் ஷிஃப்ட் முறையில் இரவில் வேலை செய்து, பகலில் தூங்குபவர்களுக்கு சீரற்ற மாதவிடாய் வருவது நடக்கிறது.
வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபாஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஆகவே பயப்படத் தேவையில்லை.

கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களில் சமைத்து உண்பது, வாசனை திரவியம் பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லி அடித்த உணவுகள் சாப்பிடுவது என அனைத்தும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும்.
நாம் இன்று உயர்ந்த தொழில்நுட்பம் என்ற பெயரில் பயன்படுத்தி வரும் பல பொருட்கள் நமக்கே தெரியாமல் நமது உடலுக்கு தீய விளைவகளை ஏற்படுத்தி வருகிறது. இது நாம் தினமும் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டில் துவங்கி, ஆண்டி-பாக்டீரியா சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள், வாசனை திரவியம் என நீள்கிறது.
சாதாரண மக்களை விட கர்ப்பிணி பெண்கள் மத்தியில் தான் அதிக தாக்கங்களை உண்டாக்குகிறது, குறிப்பாக கருவில் வளரும் சிசுவிற்கு. கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களில் சமைத்து உண்பது, வாசனை திரவியம் பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லி அடித்த உணவுகள் சாப்பிடுவது என அனைத்தும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும்.
ஃப்தலெட்ஸ் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் கலப்பு கொண்டிருக்கும் பொருளாகும். டிடர்ஜென்ட், பெயின், காஸ்மெடிக்ஸ் மற்றும் உணவு பேக்கிங் செய்ய உதவும் பொருட்கள், போன்றவற்றில் இந்த ஃப்தலெட்ஸ் கலப்பு இருக்கிறது. நீண்ட நாட்கள் பயனளிக்க, சேதமடையாமல் இருக்க இது பயன்படுத்தப்படுகிறது. அதிகமாக கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்துவதால் சிசு வளர்ச்சியில் தாக்கம் மற்றும் கருகலைப்பு ஆகும் அபாயமும் இருக்கிறது என கூறப்படுகிறது.
முடிந்த வரை பிளாஸ்டிக் கண்டெயினர்கள், டின் கேன்கள், செயற்கை வாசனை திரவியங்கள், இரசாயன டிடர்ஜெண்ட்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும், குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மை, பாட்டில்களிலும் கூட ஃப்தலெட்ஸ் கலப்பு இல்லாத பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
முடிந்த வரை, ஆர்கானிக் உணவுகளை உண்ணுங்கள். மேலும், ஷாம்பூ, சோப்பு, லோஷன் போன்றவற்றை கர்ப்பக் காலத்தில் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
மிகவும் மோசமான கெமிக்கல் இந்த டிரைக்ளோசான். நாம் பயன்படுத்தும் ஆண்டி-பாக்டீரியா சோப்பு, டூத்பேஸ்ட் போன்றவற்றில் இது கலப்பு கொண்டிருக்கிறது. பல ஆய்வுகளில் இந்த கெமிக்கல் தீய பக்கவிளைவுகள் ஏற்படுத்துகின்றது என கண்டறியப்பட்டுள்ளது. இது வளரும் சிசுவின் உடலில் தைராயிடு பிரச்சனை உண்டாக காரணியாக இருக்கிறது.
நாம் கை கழுவ பயன்படுத்தும் திரவியம், சோப்பு, டூத்பேஸ்ட் போன்றவற்றில் இதன் கலப்பு உள்ளது. எனவே, கர்ப்பக் காலத்தில் இவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
பி.பி.எ, இந்த கெமிக்கல் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களில் கலப்பு கொண்டுள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதில் தாக்கம் ஏற்படுத்துகிறது. இது, சிசுவின், மூளை வளர்ச்சியை கெடுக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும், இது சிசுவின் உடல் எடை குறைவாக பிறக்கவும் ஓர் காரணியாக விளங்குகிறது.
பல் மேற்பூச்சுகள், பிளாஸ்டிக் மற்றும் டின் வகையிலான பொருட்களால் அடைக்கப்பட உணவு / பானம் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.

வெள்ளைப்படுதல் பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு ஆயுர்வேதத்தில் நிரந்தர தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
வெள்ளைப்படுதல் பிரச்சனையை ஒவ்வொரு பெண்ணும் தங்களின் மாதவிடாய் சுழற்சி நெருங்கும் காலத்தில் அனுபவிப்பார்கள். ஆனால் இந்த வெள்ளைப்படுதல் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் இருந்து, அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அதனால் இனப்பெருக்க உறுப்பே மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும்.
வெள்ளைப்படுதல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வெள்ளைப்படுதலுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், நோய்த்தொற்றுகள், செரிமான பிரச்சனைகள், மோசமான டயட், இரும்புச்சத்துக் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் ஒருசில தீர்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
அமரந்த் என்னும் கீரை வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கீரையில் ஆன்டி-பயாடிக் பொருட்கள் அதிகம் உள்ளதால், இது வெள்ளைப்படுதலை சரிசெய்வதோடு, இனப்பெருக்க உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அமரந்த் கீரையை நீரில் போட்டு சிறிது நேரம் நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் பருக வேண்டும். இப்படி செய்வதால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காய் உடலில் உள்ள கபத்தைக் குறைக்க உதவுகிறது. உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, மோருடன் கலந்து தினமும் இருவேளை பருகி வர நல்ல பலன் கிடைக்கும். இல்லையெனில் நெல்லிக்காய் பொடியை தேன் சேர்த்து கலந்து தினமும் இருவேளை எடுத்து வரலாம்.
வெந்தம் கூட பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதற்கு 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
வாழைப்பழத்தில் வெள்ளைப்படுதலுக்கும் இது ஓர் நல்ல நிவாரணியாகும். பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், வெள்ளைப்படுதலில் இருந்து விடுபடலாம். வேண்டுமானால் வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தினமும் உட்கொண்டு வந்தாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.