என் மலர்

  ஆரோக்கியம்

  கருவுற்றபின் கரு கலைகிறதா...
  X

  கருவுற்றபின் கரு கலைகிறதா...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது.
  இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. குறைபாடுகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் சமமாக அதிகரித்து கொண்டு வருகிறது. உணவு பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் மாறிவருவதால் பெண்களில் நீர்கட்டிகள் (Fibroid), கர்ப்பப்பை கட்டிகள் மற்றும் மாதவிடாய் தொந்தரவுகள் அதிகமாகிறது.

  அதுமட்டுமின்றி தைராய்டு, சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் கருமுட்டையின் தரமும், எண்ணிக்கையும் குறைகிறது. இது வயது ஆக ஆக மேலும் குறைந்து கொண்டே போகும். இது போல் ஆண்களுக்கு உடலுறவு சம்மந்தமான பிரச்சினைகள் மட்டுமின்றி விந்தணுக்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

  50% சதவீதம் பேருக்குதான் விந்துகளால் DNA Fragmentation ஏற்படுகிறது. இது முக்கியமாக Stress மற்றும் அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படுகின்றது. இதை தெளிவாக ஸ்கேன் மற்றும் DF1 என்ற முறையின் மூலமாக தெரிந்துக்கொண்டு சிகிச்சை அளித்தால் கருவின் தரத்தை அதிகரித்து IVF சிகிச்சையில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கமுடியும்.

  கடந்த முப்பது வருடங்களில் குழந்தை பேறின்மை துறையில் பலவகையான முன்னேற்றங்கள் வந்தாலும், கரு உருவான சில தினங்களிலேயே அதிகமாக கருக்கலைப்பு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு முக்கியமாக தம்பதியரை முதலிலேயே சரியாக கண்டறிதல் (Fertility Evaluation) மிக பெரிய காரணம் ஆகிறது.

  IVF சிகிச்சையில் ஒரு டாக்டரின் பங்கு மிக முக்கியமானது. Cup dub. Personalized Infertility Care (PIC) மூலமாக ஒரு தம்பதியரை முழுமையாக ஆய்வு செய்து சரியான நேரத்தில் கருவை வைக்கும் போது IVF சிகிச்சையில் அதிகமாக வெற்றி கிட்டுகிறது. அது மட்டுமின்றி கருகலைதலும் பெரிதும் தடுக்க முடியும்.

  “GBR கருவுறாமை மையத்தில் நான் முதலில் சிகிச்சைக்கு வருபவருக்கு எல்லா விதமான தகுதிகளும் உள்ளதா என Personalized Infertility Care (PIC) மூலமாக கண்டறிந்து அவர்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அதை நிவர்த்தி செய்த பின்னரே சிகிச்சை அளிக்கப்படும். இதனால் IVF சிகிச்சையில் வெற்றி அடைவதற்கு மிகவும் அதிகமான வாய்ப்புகள் உண்டு.

  ஆண்களின் விந்துக்கள் மிகவும் ஆழமாக ஆராயப்பட்ட பின்னர், பெண்களின் கருவின் தரத்தை உயர்த்தி சரியான நேரத்தில் கருவில் கருவை வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு மூன்றுமுறை தோல்வி அடைந்தவருக்கு கருப்பையில் ERA என்ற ஒரு ஸ்பெஷல் Biopsy செய்யப்பட்டு கருவின் ஒட்டும் நேரத்தை துல்லியமாக கண்டறியப்படுகிறது. பின்பு அந்த நாளில் கருவைக்கும்போது Implantation அதிகரித்து நிறைமாதம் வரை பிரச்சினை இன்றி கரு சுகமாக வளர்கிறது.

  ஒரு சிலருக்கு கருவில் குறைபாடுகள் இருப்பின் அவர்களுக்கு PGD என்கின்ற முறையில் சரியான கருவை தேர்வு செய்து வைக்கப்படுகிறது. இந்த மாதிரியான பல நுட்பங்கள் மற்றும் சிகிச்சைகளால் மிக அதிகமான வெற்றி வாய்ப்பை கொடுப்பதோடு Recurrent Pregnancy Loss என்கின்ற அடிக்கடி கரு கலையும் பிரச்சினையும் பெரிதும் தடுக்கப்படுகிறது.

  - டாக்டர். ஜி.புவனேஸ்வரி,
  Next Story
  ×