search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    உடற்கூறுக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
    X

    உடற்கூறுக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

    • 4 வகையான பாடிஷேப்ஸ் உள்ளன.
    • இந்திய பெண்கள் அதிகம்பேர் பியர் பாடிஷேப்பில் தான் இருப்பார்கள்.

    முதலில் நம்முடைய உடற்கூறு எப்படி உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு ஆடைகளை வாங்குவதை பழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். அதில் என்னென்ன உடல்கூறு நிலைகள் உள்ளன என்பதை பற்றி பார்க்கலாம். இதில் 4 வகையான பாடிஷேப்ஸ் உள்ளன.

    அதில் நமது இந்திய பெண்கள் இந்த 4 பாடிஷேப்களில் தான் இருப்பார்கள். அவை ஆப்பிள் பாடிஷேப், பியர் பாடிஷேப், ஆர்கிளாஸ் பாடிஷேப், ரெக்ட்டாங்கிள் பாடிஷேப் ஆகியவை உள்ளன.

    ஆப்பிள் பாடிஷேப்

    ஆப்பிள் பாடிஷேப்பில் இருப்பவர்களுக்கு அப்பர் பாடி கொஞ்சம் அதிகமாக இருக்கும். கால்கள் ஒல்லியாக இருக்கும். இவர்களுக்கு தோள்பட்டைகள் பெரியதாகவும் விரிந்தும் காணப்படும். எனவே இந்த மாதிரி இருப்பவர்கள் வி ஷேப் கழுத்துப்பட்டைகள் வடிவம் கொண்ட ஆடை வகைகளை தேர்வு செய்ய வேண்டும். இவர்கள் ஷாட் டாப்ஸ், மிட்லென்த் டாப் எல்லாம் ஒரு சூப்பரான சாய்ஸ். இவர்களுக்கு லோவர் பாடியை கவர் செய்கிற மாதிரி டிரஸ்செய்தால் நன்றாக இருக்கும்.

    பியர் பாடிஷேப்

    அடுத்து பியர் பாடிஷேப். நம் இந்திய பெண்கள் அதிகள அளவில் இந்த பாடிஷேப்பில் தான் இருப்பார்கள். அப்படி பாடி சின்னதாகவும், அதாவது இடுப்பு பகுதிக்கு கீழ் உள்ள பகுதி பெரியதாக காணப்படும். இவர்கள் பாடிஷேப்பிற்கு ஏ-லைன் டிரஸ்சஸ் இன்னும் சூப்பராக இருக்கும். ஏ-லைன் டிரஸ்சில் அப்பர் பாடி பிட்டாகவும், லோயர் பாடி பிளேர் விதத்திலும் இருக்கும். பியர் பாடிஷேப்பில் இருப்பவர்களுக்கு லேயர்டு டிரஸ்சஸ்சும் அழகாக இருக்கும். ஓவர்கோட் இருக்குற மாதிரியான டிரஸ் கூட அழகாக இருக்கும். இவர்கள் அப்பர் பாடியை கவர் செய்கிற மாதிரியான அடர்த்தியான ஜுவல்லரிகளை பயன்படுத்தலாம். அது இன்னும் உங்கள் அப்படி பாடியை மெருகேற்றும் வகையில் இருக்கும்.

    ரெக்ட்டாங்கில் பாடி ஷேப்

    ரெக்ட்டாங்கில் பாடி ஷேப் இருக்கிறவர்கள் பெரும்பாலும் விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும். இவர்களது உடலில் வளைவுகள் இருக்காது. தோள்பட்டையும், இடுப்பு பகுதியும் ஒரே அளவில் இருக்கிற மாதிரியாக இருக்கும். பஃப் ஸ்லீவ்ஸ், இவர்களுக்கு டஃப்ள்டு டாப் மற்றும் ஸ்கெட் (பாவாடை) வகை ஆடைகள் பொருத்தமாக இருக்கும். இவர்களுக்கு அனார்கலி, மேக்ஸி டிரஸ்கள் கூட மிகவும் பொருத்தமாக இருக்கும். எம்ப்பயர் லைன் இருக்கும் ஆடை வகைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

    ஆர்கிளாஸ் பாடிஷேப்

    அடுத்து ஐடியல் பாடிஷேப் அதாவது ஆர்கிளாஸ் பாடி ஷேப். இவர்களுக்கு இயற்கையாகவே இடை மெலிந்ததாக இருக்கும். எனவே எல்லாவகை ஆடைகளும் பொருத்தமாக இருக்கும். இவர்களுடைய இடை அழகை மெருகேற்றும் அளவுக்கு பெல்ட் வைத்தமாதிரி ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். பெல்ட் வைத்த ஆடைகளை தேர்வு செய்து அணிந்தால் இன்னும் அழகாக தெரிவார்கள்.

    Next Story
    ×