என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    காலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா? இந்த மஞ்சூரியனை செய்து பாருங்கள். மாலை நேர டிப்பனுக்கு இந்த இட்லி மஞ்சூரியன் சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி - 10
    மைதா மாவு - 2 ஸ்பூன்
    சோள மாவு - 1/2 ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 2
    பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    சோயா சாஸ், தக்காளி சாஸ் - தேவைகேற்ப
    எண்ணெய், உப்பு - தேவைகேற்ப

    செய்முறை :

    * இட்லியை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

    * வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.

    * மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.

    * பின்னர் இதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து கிரேவியாக வரும் போது இதில் ஏற்கனவே பொரித்துவைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கினால் சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீர் போண்டா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூரணத்துக்கு :

    துருவிய பன்னீர் - 1 கப்
    பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை - 1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 1\2 டீஸ்பூன்
    பொடித்த மசாலா (பட்டை, லவங்கம், ஏலக்காய்) - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - 1\4 கப்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
    உப்பு - 1 சிட்டிகை
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    மேல் மாவுக்கு :

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    மைதா மாவு - 1\4 கப்
    ஓமம் - 1\4 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1\2 டீஸ்பூன்
    சமையல் சோடா - 1\4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டைப் போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

    * நன்றாக வதங்கியதும், பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும். தேவைப்பட்டால் காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

    * காய்கள் சுருள வதங்கியதும், உப்பு, மிளகாய்த்தூள், பன்னீர் சேர்த்து நன்கு வதக்கி தனியாத்தூள், பொடித்த மசாலாத்தூள், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கினால் பூரணம் ரெடி! ஆறியதும் பூரணத்தை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் மேல் மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    * உருட்டிய பூரண உருண்டைகளை மாவில் தோய்த்தெடுத்து காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

    * சுவையான பன்னீர் போண்டா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது.
    தேவையான பொருட்கள் :

    மீன் - 1/4 கிலோ
    அரிசி - 2 ஆழாக்கு
    வெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 150 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
    புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    தயிர் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி

    செய்முறை :

    * மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.

    * ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

    * அடுத்து வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை சேர்த்து உடையாமல் வதக்கவும்.

    * பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.

    * குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.

    * சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

    *  இந்த பிரியாணி செய்ய துண்டு மீனை பயன்படுத்த வேண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    பாதாம் பால் செய்வது மிகவும் சுலபமானது. குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்,
    சர்க்கரை - அரை கப்,
    பாதாம் - ஒரு கைப்பிடி
    முந்திரி - ஒரு கைப்பிடி
    குங்குமப்பூ - 1 சிட்டிகை,
    ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்.

    செய்முறை :

    * பாதியளவு பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள்.

    * மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள்.

    * அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சுங்கள்.

    * சூடான பாலில் 2 ஸ்பூன் எடுத்து அதில் குங்குமப்பூவை போட்டு ஊற வைக்கவும்.

    * பால் பத்து நிமிடம் கொதித்ததும் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

    * அதில் சீவிய பாதாம், ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நன்றாக கலந்து, ஆறவிடுங்கள்.

    * ஆறியபின், பிரிட்ஜில் வைத்து குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

    * இந்த பாதாம் பாலை சூடாகவும் அருந்தலாம்.

    * குளுகுளு பாதாம் பால் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதத்தை கொண்டு எளிய முறையில் சுவையான ரைஸ் வெஜ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ரைஸ் வெஜ் பால்ஸ்


    தேவையான பொருட்கள் :

    வடித்த சாதம் - 2 கப்
    கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,
    பெரிய வெங்காயம் - 2
    கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன்
    கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
    பொட்டுக்கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.


    செய்முறை :

    * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வடித்த சாதத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    * கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் அரைத்த சாதம் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் போட்டு கொட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். மாவு தளர்வாகி விட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளலாம்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் கலந்து வைத்த கலவையை உருண்டைகளாக பிடித்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    * சூடான ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.

    * தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காரசாரமான மசாலா மீன் வறுவலை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மீன் - அரை கிலோ (முள் இல்லாதது)
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 12
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 10 பற்கள்
    கறிவேப்பிலை - சிறிது
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை பழம் - 1

    செய்முறை:

    * மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    * அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * கழுவி மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு கலந்து நன்றாக பிரட்டி 30 நிமிடம் பிரிட்ஜில் ஊற வைக்க வேண்டும்.

    * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * காரசாரமான மசாலா மீன் வறுவல் ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    மட்டனில் குருமா மிகவும் சுவையான இருக்கும். இப்போது செட்டிநாடு மட்டன் குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - ½ கிலோ
    நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
    இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
    சோம்பு தூள் - ½ டீஸ்பூன்
    கொத்துமல்லி - சிறிதளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    புதினா - சிறிதளவு
    தயிர் - 3 டீஸ்பூன்
    முந்திரி - 150 கிராம் (விழுதாக அரைக்கவும்)
    சீரகம் - ½ டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - 5
    ஏலக்காய், மிளகு - ½ டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    தக்காளி - 2
    தேங்காய் விழுது - 3 டீஸ்பூன்
    நெய் - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, பாதி அளவு தக்காளி, மஞ்சள் தூள், தயிர், மிளகாய்த் தூள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, முந்திரி விழுது, புதினா இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பிசைந்து, குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சேர்த்து, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வதக்கிய பின்னர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இஞ்சி விழுது மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் தக்காளி மற்றும் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள மட்டன் கலவையை சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.

    * விசில் போனவுடன் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து, அத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * சுவையான செட்டிநாடு மட்டன் குருமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப்,
    பால் - அரை லிட்டர்,
    திக்கான தேங்காய் பால் - ஒரு டம்ளர்
    சர்க்கரை - ஒரு கப்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    * பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.

    * பாலைக் காய்ச்சி இறக்கி சிறிது ஆறியதும் தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும்.

    * மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும்.

    * பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் போட்டு 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

    குறிப்பு:

    மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது.

    பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

    விருப்பப்பட்டவர்கள் முந்திரி, பாதாம் சேர்த்துக்கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவையான உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு  - அரை கப்,
    மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
    பெருஞ்சீரகம் - சிறிதளவு

    மசாலா செய்வதற்கு :

    உருளைக்கிழங்கு - 150 கிராம்,
    கேரட் - 1,
    உப்பு - தேவைக்கேற்ப,
    பெரிய - வெங்காயம்,
    பச்சை மிளகாய் - தலா 2,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை:

    * உருளைக்கிழங்குடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து ஒன்றும் பாதியாக மசித்து வைக்கவும்.

    * கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் கேரட் துருவல் சேர்த்துக் கிளறி, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.

    * கடைசியாக கொத்தமல்லி சேர்த்து, ஆறியதும் பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    * கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாகக் பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடனாதும் செய்து வைத்த உருண்டைகளை, இந்தக் மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    * சுவையான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவையான முந்திரி சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
    முந்திரிபருப்பு - 1 கைப்பிடி
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - சிறிதளவு

    செய்முறை :

    * சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * முந்திரியில் சிறிது எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். மீதியை நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதை சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * தக்காளி நன்றாக வதக்கிய பின் அதில் அரைத்த காய்ந்த மிளகாய் விழுது, சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் தேவையான அளவு உப்பு போடவும்.

    * அதன் பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்றாக வேக விடவும்.

    * அடுத்து அதில் அரைத்த முந்திரி விழுது மற்றும் நறுக்கிய முந்திரியை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக வைக்கவும்.

    * சிக்கன் வெந்து கிரேவி கெட்டியாகும் வரை கிளறவும்.

    * கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூடான முந்திரி சிக்கன் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவையான பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    கெட்டித் தயிர் - 1 கப்
    நெய் - 6 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
    பிரிஞ்சி இலை - 4
    பன்னீர் - 150 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    இஞ்சி விழுது - 1/2 ஸ்பூன்
    பூண்டு - 4 பற்கள்
    தக்காளி - 2
    பீன்ஸ் - 8
    கேரட் - 1
    கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
    காலிபிளவர் - 8 சிறிய பூக்கள்

    வறுத்து அரைக்க :

    கிராம்பு - 2
    பட்டை - 1 சிறிய துண்டு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    தேங்காயத் துருவல் - 6 டேபிள் ஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்
    மிளகாய் வற்றல் - 4
    பச்சை மிளகாய் - 2

    செய்முறை :

    * பாசுமதி அரிசியைக் களைந்து 1 கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    * கடாயில் சிறிது நெய் ஊற்ற அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் தேங்காய் துருவல் நீங்கலாக வறுத்து ஆறவைத்து மிக்சியில் அரைக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    * காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பன்னீரை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * ஒரு குக்கரில் மீதியுள்ள நெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயத் போட்டு வதக்கிய பின் இஞ்சி பூண்டு போட்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கிய பின்னர்  அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

    * வதக்கிய கலவையில் இருந்து நெய் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா, காய்கறிகள், காலிபிளவர், சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீர் சேர்த்து சிறிது வதக்கவும்.

    * தண்ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி 2 விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.

    * விசில் போனவுடன் திறந்து பரிமாறவும்.

    * சுவையான பன்னீர் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளுகுளு ஆரஞ்சு கீர் எளிமையாக முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆரஞ்சு பழம் - 3
    பால் - 4 கப்
    கண்டென்ஸ் மில்க் - 5 ஸ்பூன்
    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
    ரோஸ் எசன்ஸ் - 3 சொட்டு
    பாதாம், முந்திரி, திராட்சை - தேவைக்கு


    செய்முறை :

    * பாதாமை துருவிக் கொள்ளவும்.

    * ஆரஞ்சு பழத்திலிருந்து சதையை மட்டும் தனியாக எடுத்து உதிர்த்து வைக்கவும்.

    * பாலை நன்றாக காய்ச்சி 2 கப்பாக சுண்டயதும் ஆற வைத்து பிரிட்ஜில் வைக்கவும்.

    * பால் நன்றாக குளிர்ந்த பின்னர் பிரிட்ஜில் இருந்து அதை எடுத்து அதில் கன்டென்ஸ் மில்க்கை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * அடுத்து அதில் ஏலக்காய்தூள், உதிர்த்து வைத்த ஆரஞ்சு சதையை சேர்த்து நன்றாக கலந்து மறுபடியும் பிரிட்ஜில் வைக்கவும்.

    * கீர் நன்றாக குளிர்ந்ததும் அதை வெளியில் எடுத்து அதில் துருவிய பாதாம், முந்திரி, திராட்சை, ரோஸ் எசன்ஸ் சேர்த்து பருகவும்.

    * சுவையான ஆரஞ்சு கீர் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×