search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்
    X
    சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்

    சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்

    பட்டர் பீன்ஸில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றுகிறது. இதய நோய் ஏற்படாமல் இக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள் நம்மைப் பாதுகாக்கின்றன.
    தேவையான பொருட்கள்

    பட்டர் பீன்ஸ் - 150 கிராம்
    உருளைக்கிழங்கு - 1
    பெரிய வெங்காயம் - 2
    மீடியம் சைஸ் தக்காளி - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4

    தாளிக்க

    பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு
    கொத்தமல்லி இலை, புதினா இலை - 1 கைப்பிடி
    நெய் - ஒரு ஸ்பூன்

    செய்முறை

    தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் போட்டு நன்கு வாசனை வந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்..

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    பின்னர் அதில் கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கழுவி வைத்துள்ள பட்டர் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாசனை போனவுடன் நாம் ஏற்கனவே 10 நிமிடம் ஊற வைத்துள்ள அரிசியை உள்ளே சேர்த்து ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். இறுதியாக உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு குக்கரை மூடவும்

    இப்போது சத்தான சுவையான பட்டர் பீன்ஸ் புலாவ் ரெடி
    Next Story
    ×