search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முத்தியா குஜராத்தி
    X
    முத்தியா குஜராத்தி

    முத்தியா குஜராத்தி செய்யலாம் வாங்க...

    குஜராத்தி உணவுகளில் முத்தியா குஜராத்தி மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டைக்கோஸ்  -  250 கிராம்,
    கடலைமாவு - 100 கிராம்,
    பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி,
    ப.மிளகாய் - 3,
    இஞ்சி - 1 துண்டு,
    மஞ்சள் தூள் -  1/4 தேக்கரண்டி,
    ஈனோ எனப்படும் புரூட் சால்ட் - 1/4 தேக்கரண்டி,
    எலுமிச்சை சாறு - 1,
    சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி,
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி.

    தாளிக்க

    எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,
    கடுகு - 1 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை,
    சீரகம் - 1/2 தேக்கரண்டி.

    செய்முறை:


    ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிகவும் பொடியாகத் துருவிய கோஸ் உடன் உப்புக் கலந்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் கோஸை நன்றாக பிழிந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.

    கடலைமாவு மற்றும் ப.மிளகாய், உப்பு, இஞ்சி, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி எண்ணெய், பெருங்காயம் ஆகியவற்றை கோஸ் உடன் சேர்த்து, தேவையான நீர் சேர்த்து, மென்மையான மாவு தயாரிக்கவும்.

    உள்ளங்கையில் சிறிது தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, உருளை வடிவில் உருட்டி, 15, 20 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.

    ஆறிய பின் துண்டுகளாக நறுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் தாளித்து ஆவியில் வேகவைத்த முத்தியாவுடன் சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும்.

    சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான முத்தியா குஜராத்தி ரெடி.
    Next Story
    ×