என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    நேந்திரம் பழம் அல்வா
    X
    நேந்திரம் பழம் அல்வா

    தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

    குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரம் பழம் - 4
    தேங்காய்த்துருவல் - கால் கப்
    முந்திரிப்பருப்பு - 50 கிராம்
    சர்க்கரை - தேவைக்கு
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    நெய் - தேவைக்கு

    செய்முறை:

    நேந்திரம் பழத்தை தோலூரித்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் இட்லி தட்டில் 5 நிமிடங்கள் வேகவிட்டு ஆற வைக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு கூழாக அரைத்துக்கொள்வும்.

    அதனை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயில் வைத்து கிளறிவிடவும்.

    அத்துடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூளை சேர்த்துக்கொள்ளவும்.

    கொஞ்சம் கொஞ்சமாக நெய் ஊற்றி கிளறி விடவும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும்போது கீழே இறக்கிவிடவும்.

    அதில் முத்திரி பருப்புகளை தூவி ருசிக்கலாம்.
    Next Story
    ×