search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல் (Health)

    சிக்கன் - முட்டை சூப் செய்வது எப்படி
    X

    சிக்கன் - முட்டை சூப் செய்வது எப்படி

    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன், முட்டை சேர்த்து சூப்பரான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    சிக்கன் துண்டு - 4 பெரியது எலும்புடன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    சோயாசாஸ் - 1/2 ஸ்பூன்
    முட்டை வெள்ளை கரு - 2
    பால் - அரை கப்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
    பட்டர் - தேவையான அளவு '



    செய்முறை  :

    முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து 3 கப் தண்ணீர் சேர்த்து உப்பு, சோயா சாஸ் சேர்த்து வேக வைக்கவும்.

    வெந்தததும் தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும்.

    சிக்கனில் உள்ள துண்டுகளை தனியாக பிரித்து எடுத்து உதிர்த்து கொள்ளவும்.

    ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கிய பின்னர் சிக்கன், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சிக்கன் வடித்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

    தனியாக பால், தண்ணீர் சேர்த்து காய்ச்சி சூப்பில் சேர்க்கவும்.

    கடைசியாக அடித்து வைத்துள்ள முட்டை வெள்ளை கருவை ஒரு கையால் ஊற்றி கொண்டே மறு கையால் சூப்பை கிளறவும்.

    தேவைக்கு மிளகு தூள், உப்பு சேர்த்து பரிமாறவும். .

    சுவையான சிக்கன் - முட்டை சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×