என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு கேரட் கீர்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு கேரட் கீர்

    கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளுகுளு ஜூஸ் கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். இன்று கேரட் வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    பால் - அரை லிட்டர்
    சர்க்கரை - ஒரு கப்
    நெய் - ஒரு டீஸ்பூன்
    பொடித்த முந்திரி, பாதாம் - விருப்பத்திற்கு ஏற்ப



    செய்முறை :

    பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் கலந்து ஆறவைக்கவும்.

    கேரட்டைக் கழுவித் தோல் நீக்கிச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    குக்கரில் நெய்விட்டு, கேரட்டைச் சேர்த்து வதக்குங்கள்.

    காய்ச்சிய பாலை அரை கப் எடுத்து அதில் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும்..

    ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து மீதமுள்ள பாலை கேரட்டுடன் கலந்து ஃப்ரிட்ஜில் வையுங்கள்.

    குளிர்ந்தவுடன் எடுத்து பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, குடிக்கக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

    சூப்பரான கேரட் கீர் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×