என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு இனிப்பு பண்டங்கள் மிகவும் பிடிக்கும். வாழைப்பழத்தை வைத்து சுவையான இனிப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதி கனிந்த வாழைப்பழம் - 2 (செவ்வாழை)
    துருவிய தேங்காய் - ½ கப்
    பனை வெல்லம் தூளாக்கியது - ½ கப்
    ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
    முந்திரி, திராட்சை, நெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * பாதி கனிந்த செவ்வாழைப்பழத்தை தோலுடன், புட்டு வேக வைப்பது போல ஆவியில் வேக வைத்து கொள்ளவும். பிறகு அதன் தோலை உரித்து அதிலுள்ள விதைகளை நீக்கி தண்ணீர் சேர்க்காமல் அதைப் பிசைந்து தனியே வைத்துக்கொள்ளவும்.

    * சிறிதளவு தண்ணீரில் பனை வெல்லத்தைச் சேர்த்து, சர்க்கரைப் பாகு எடுத்துக்கொள்ளவும்.

    * அந்த பாகில் துருவிய தேங்காயை கலந்துகொள்ளவும். அதனுடன் நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை கலந்து பூரணமாக செய்துக்கொள்ளவும்.

    * வேக வைத்த வாழைப்பழத்தை சிறு உருண்டையாக்கி, அதன் நடுவே இந்தப் பூரணத்தை வைத்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    * சுவையான வாழைப் பழ இனிப்பு உருண்டை ரெடி!

    * கொழுக்கட்டைக்கு செய்யும் இனிப்பு பூரணத்தையும் இதில் வைத்து சமைத்து பார்க்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மைதா ஸ்வீட் சிப்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - ஒரு கப்,
    பொடித்த சர்க்கரை - அரை கப்,
    ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,
    ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.

    செய்முறை :

    * மைதா மாவுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பிசைந்து, ஃபுட்கலர் சேர்த்து, நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

    * தேய்த்த மாவில் சிறிய மூடிகளால் 'கட்’ செய்து, (வேண்டிய வடிவில்) கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெட்டி வைத்ததை போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சூப்பரான மைதா ஸ்வீட் சிப்ஸ் ரெடி.

    * குறிப்பு : மாவை சப்பாத்தி போல் செய்து கத்தியால் கட்டங்களாக வெட்டியும் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீருடன் பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் குருமா சூப்பராக இருக்கும். இந்த குருமாவை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்
    பச்சைப் பட்டாணி - அரை கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1 பெரியது
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 3 பல்
    மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிது
    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
    கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
    புதினா - ஒரு கொத்து
    உப்பு - தேவைக்கு

    அரைக்க :

    தேங்காய் பத்தை - 3
    கசகசா - ஒரு டீஸ்பூன்
    முந்திரி - 10 (அல்லது) சிறிது பொட்டுக்கடலை

    தாளிக்க :

    எண்ணெய்
    கிராம்பு - 3
    பட்டை - சிறு துண்டு
    சீரகம்
    பெருஞ்சீரகம்
    வெந்தயம் - 4 (வாசனைக்கு)

    செய்முறை :

    * பச்சைப்பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட‌வும்.

    * வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..

    * இஞ்சி, பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

    * பன்னீரை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்த பின் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

    * பிறகு வெங்காயம், தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போக நன்றாக வதக்கவும்.

    * அடுத்து பட்டாணியை சேர்த்து 5 நிமிடம் வதக்கிவிட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

    * மற்றொரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பன்னீரை போட்டு லேசாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

    * குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும்.

    * குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய், கசகசா, முந்திரி அரைத்த விழுதை குருமாவில் சேர்க்கவும்.

    * எல்லாம் சேர்ந்து கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது எலுமிச்சை சாறு, கொத்துமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.

    * சூப்பரான பன்னீர் - பச்சைப்பட்டாணி குருமா

    * இது சாதம், சப்பாத்தி, பரோட்டா இவற்றிற்கு சூப்பராக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு இனிப்பான சுவையில் போண்டா செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    சீஸ் - 1 கப் (துருவியது)
    கனிந்த வாழைப்பழம் - 4 (மசித்தது)
    கோதுமை மாவு - 1 கப்
    மைதா - 1/2 கப்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    மிளகு தூள் - தேவையான அளவு
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
    சோடா மாவு - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * முதலில் ஒரு பௌலில் வாழைப்பழம், துருவிய சீஸ், கோதுமை மாவு, மைதா மாவு, மிளகு தூள், சீரகப் பொடி, தயிர், சோடா மாவு, சர்க்கரை சேர்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, போண்டா பதத்திற்கு பிசைந்து, 2 மணிநேரம் மூடி ஊற வைக்க வேண்டும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை உருண்டை பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து சூடாக பரிமாறவும்.

    * இப்போது சுவையான சீஸ் வாழைப்பழ போண்டா ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மழைக்காலத்தில் ஏதாவது சூடான சாப்பிட ஆசையாக இருக்கும். அப்போது இந்த ரச வடையை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - 2 கப்
    உளுந்தம் பருப்பு - 1 கப்
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 1

    ரசத்திற்கு :

    நீர் - தேவையான அளவு
    மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி
    மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    புளி - 3 தேக்கரண்டி
    பூண்டு - 6 பற்கள்
    பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    கொத்தமல்லிதழை - சிறிதளவு

    செய்முறை :

    வடை செய்ய :

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு அதனை வடிகட்டி மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.

    * அரைத்த மாவில் உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை உருண்டைகளாக பிடித்து போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

    ரசம் செய்ய :

    * பூண்டை நசுக்கிக்கொள்ளவும்.

    * கொத்தமல்லிதழை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், உப்பு, மல்லித் தூள், நசுக்கிய பூண்டு, புளி, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்பு புளியை தண்ணீரில் கரைக்கவும். நன்றாக கரைத்த பின்னர் புளி கோதல் மற்றும் பூண்டின் தோலை வெளியேற்றி விடவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

    * பின்பு கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். தாளிக்க வேண்டிய அவசியமில்லை.

    * பின்பு வடையை அதில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து பரிமாறும் போது கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும்.

    * மழைக்கு சூப்பரான ரச வடை ரெடி.

    * பழைய ரசம் இருந்தாலும் அதையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் அதை வைத்து மாலையில் சூப்பரான ரைஸ் வெஜ் பால்ஸ் செய்து சாப்பிடலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வடித்த சாதம் - 2 கப்
    கோஸ், கேரட், பீன்ஸ் - ஒரு கப்,
    பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்),
    கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை :

    * வடித்த சாதத்தை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, கோஸ், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்துப் நன்றாக பிசிறி, சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

    * சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜ் பால்ஸ் ரெடி.

    * தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

    * மதியம் செய்த சாதம் மீந்து விட்டால் மாலையில் இவ்வாறு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம்.

    * விருப்பப்பட்டால் சீஸ் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். காலையில் டிபன் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பரான ஹாட் மசாலா நூடுல்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    பிளெய்ன் நூடுல்ஸ் - 2 பாக்கெட் (200 கிராம்),
    வெங்காயம் - 2
    கோஸ் -  சிறிதளவு
    கேரட் - 1 ,
    குடமிளகாய்-  1
    பூண்டு - 4 பல்
    பச்சை மிளகாய் - 2,
    மிளகுத்தூள், சாட் மசாலாத் தூள் - தலா அரை டீஸ்பூன்,
    தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன்,
    சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்,
    சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்,
    வெங்காயத்தாள் - கால் கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை :

    * வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கோஸ், கேரட், குடமிளகாயை நீளவாக்கில் மெலிதான நறுக்கி கொள்ளவும்.

    * நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, பின் வடிகட்டி, குளிர்ந்த நீரில் போட்டு அலசி தனியே வடித்து வைக்கவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கி... கோஸ், கேரட், குடமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி... தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கலக்கவும்.

    * பின்னர் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்றாகக் கலக்கி... வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஸ்பைசி முட்டை மசாலா சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி
    இலை - சிறிதளவு
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
    கடுகு - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - ருசிக்க
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    * முட்டையை வேகவைத்து பாதியாக வெட்டி வைக்கவும்.

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

    * பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி சிறிது வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது முட்டையை போட்டு உடையாமல் கிளறி கொத்தமல்லி தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

    * சுவையான ஸ்பைசி முட்டை மசாலா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் உருளைக்கிழங்கு பிடிக்கும். செட்டிநாடு ஸ்டைலில் ஸ்பைசியான உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குட்டி உருளைக்கிழங்கு - 15
    வரமிளகாய் - 5
    கொத்துமல்லி விதை/தனியா -1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். உருளைக்கிழங்கில் முட்கரண்டியால் ஆங்காங்கே குத்தி வைக்கவும்.

    * வெறும் கடாயில் மல்லி, சீரகம், வரமிளகாயை போட்டு வாசனை வரும்வரை வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெந்த உருளைக்கிழங்குகளை சேர்க்கவும்.

    * மிதமான தீயில் கிழங்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    * அடுத்து அதில் பொடித்து வைத்த பொடியைச் சேர்க்கவும். பொடி எல்லாக் உருளைக்கிழங்கிலும் படும்படி பிரட்டிவிட்டு சில நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

    * ஈஸியான டேஸ்ட்டியான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.

    * எல்லா வகையான சாதங்களுடனும் பக்க உணவாகச் சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு சுவையான சிற்றுண்டியாக காய்கறிகளால் ஆன சத்தான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 2 கப்
    உருளைக் கிழங்கு - 2
    கேரட், பீன்ஸ், - 2 கப்
    சீஸ் - அரை கப்
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன்
    பிரெட் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    பூரணம் செய்முறை :

    * உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

    * சீஸை துருவிக்கொள்ளவும்.

    * காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்..

    * வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி நன்றாக சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

    * மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.

    * சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமாக தீயில் எரிய விடவும்.

    * காய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். நன்றாக கெட்டியாக சேர்ந்தாற்போல் வர, ரொட்டித்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளலாம். மசாலா நன்றாக ஆறியவுடன் அதனுடன் துருவிய சீஸை போட்டு நன்றாக கிளறி வைக்கவும்.

    சோமாஸ் செய்முறை :

    * மைதா மாவை சலித்து எடுத்து கொஞ்சம் நெய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    * மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்து இலேசாக வட்டமாக தேய்த்து காய்கறி பூரணத்தை நடுவில் வைத்து மடித்து ஓரங்களை சோமாஸ் கத்தியால் வெட்டவும்.

    * இதேபோல் மொத்தமாக சோமாஸ்கள் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்துள்ள சோமாஸ்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * சுவையான காய்கறி சீஸ் சோமாஸ் ரெடி.

    * தொட்டுக்கொள்ள தக்காளி கெட்ச்அப் ஏற்றது. மாலை நேரத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலருக்கு மட்டன் கொழுப்பு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கான மட்டன் கொழுப்பு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கொழுப்பு - 100 கிராம்
    சின்னவெங்காயம் - 10
    மிளகாய்த்தூள்  - ஒரு டீஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மட்டன் கொழுப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் அல்லது கொழுப்பு வேகும்வரை வேகவிட்டு இறக்கவும்.

    * கொழுப்பு மட்டுமே சேர்த்து செய்யும் இந்தக் கறி, சுவையாக இருக்கும். இட்லியுடன் பரிமாறவும்.

    குறிப்பு :

    * கொழுப்பில் இருந்து அதிகம் எண்ணெய் பிரியும் என்பதால், தாளிக்க குறைந்த அளவு எண்ணெய் சேர்த்தால் போதும்.  

    * வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த குழம்பை சாப்பிட வேண்டாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆந்திரா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். நாளை (சன்டே) ஆந்திரா ஸ்டைலில் மீனை நன்கு காரசாரத்துடன் ஃப்ரை செய்து அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்)
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    மசாலாவிற்கு...

    வெங்காயம் - 1
    பூண்டு - 5 பல்
    இஞ்சி - 1 இன்ச்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    தனியா - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வர மிளகாய் - 4
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மீனை துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து சூடாதும் அதில் 1 ஸ்பூன் ஊற்றி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அந்த மசாலாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து மீனின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.

    * இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×