என் மலர்

  சமையல்

  ரமலான் நோன்பு ஸ்பெஷல்: ஆலு டிவிஸ்டர் சமோசா
  X

  ரமலான் நோன்பு ஸ்பெஷல்: ஆலு டிவிஸ்டர் சமோசா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பார்க்க கஷ்டமாக தெரிந்தாலும் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுபலம்.
  • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

  தேவையான பொருட்கள்

  மைதா - 2 கப்

  நெய் - 2 டீஸ்பூன்

  உப்பு - சுவைக்கு

  சீரகம் - அரை டீஸ்பூன்

  உருளைக்கிழங்கு - 4

  துருவிய கேரட் - 2 டீஸ்பூன்

  குடைமிளகாய் -2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

  கொத்தமல்லி தழை - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

  ப.மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

  சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  தனியா தூள் - 1 டீஸ்பூன்

  மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

  சோள மாவு - 2 டீஸ்பூன்

  செய்முறை

  ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, நெய், உப்பு, சீரகம் போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

  ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய கேரட், குடைமிளகாய், கொத்தமல்லி தழை, ப.மிளகாய், உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள்,தனியா தூள், மஞ்சள் தூள், சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  பிசைத்து வைத்த மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.

  தேய்த்த மாவில் நடுவில் மசாலாவை வைத்து மாவு முழுவதும் பரப்பி விடவும். அதன் மேல் மற்றொரு சப்பாதியால் மூடி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும்.

  இப்போது சப்பாத்தியின் 4 ஓரங்களையும் வெட்டி (சதுர வடிவில்) விடவும். அடுத்து கத்தியால் கைவிரல் அகலத்தில் துண்டுகளாக வெட்டவும்.

  வெட்டிய ஒரு துண்டின் நடுவில் நீளமான குச்சியால் நடுவில் அழுத்தினால் இருபக்க ஒரங்களிலும் விரிந்து வரும்.

  இப்போது அதை இருபக்க முனைகளையும் பிடித்து வெவ்வோறு கோணத்தில் முறுக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

  கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்ததை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  இப்போது சூப்பரான ஆலு டிவிஸ்டர் சமோசா ரெடி.

  Next Story
  ×