search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வெள்ளரிக்காய் ஜூஸ்
    X
    வெள்ளரிக்காய் ஜூஸ்

    கோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்

    வெள்ளரிக்காயில் விட்டமின் சி அதிகம் உள்ளது. நீர்சத்தும் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம், கால்சியம் என நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது.
    தேவையான பொருட்கள்:

    வெள்ளரிக்காய் - 1
    இஞ்சி - சிறிய துண்டு
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    தேன்- 2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்

    செய்முறை:

    வெள்ளரிக்காயை தோலுரித்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டி ஜூஸில் கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!
    Next Story
    ×