search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்
    X
    பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்

    நார்சத்து நிறைந்த பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்

    நார்சத்து நிறைந்த பார்லியுடன் ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து சத்தான சுவையான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி - 1 கப்
    ஒட்ஸ் - 1 கப்
    எண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    வதக்கி கொள்ள :

    எண்ணெய் - 1 தே.கரண்டி
    கடுகு - தாளிக்க
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    கேரட் துருவல் - கால் கப்
    பீன்ஸ் - 10
    கொத்த மல்லி, புதினா - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - 1/2 தே.கரண்டி

    பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்

    செய்முறை :

    வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, பீன்ஸ், கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை வேக வைத்து கொள்ளவும்

    ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும்.

    வேக வைத்த பார்லியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட் துருவல், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கொத்தமல்லி, புதினா தூவி,சிறிது நேரம் ஆறவிடவும்.

    ஆறிய மசாலாவில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த மாவை கட்லெட்டுகளாக விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேக விடவும்.

    ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு, திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேக விடவும்.

    சுவையான சத்தான சத்தான பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட் ரெடி.

    இதனை சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×