search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இஞ்சி- மஞ்சள் ஜூஸ்
    X
    இஞ்சி- மஞ்சள் ஜூஸ்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி- மஞ்சள் ஜூஸ்

    நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தும் பழச்சாறு வகைகளை வீட்டில் தயாரித்து பருகிவரலாம். அந்த வகையில் இன்று இஞ்சி- மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இஞ்சி  - 100 கிராம்
    மஞ்சள் - தேவைக்கு
    எலுமிச்சை பழம் - 2
    மிளகு தூள் - கால் டீஸ்பூன்

    இஞ்சி- மஞ்சள் ஜூஸ் தேவையான பொருட்கள்

    செய்முறை

    இஞ்சி மற்றும் மஞ்சளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

    பின்னர் இரண்டையும் தனித்தனியாக மிக்சியில்  போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்தையும் சாறு பிழிந்து கொள்ளவும்.

    பின்னர் இஞ்சி, மஞ்சள் விழுதை எலுமிச்சை பழ சாறுடன் கலக்கவும்.

    அதனுடன் மிளகு தூளை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    காலையில் வெறும் வயிற்றில் 60 முதல் 80 மில்லி லிட்டர் பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    Next Story
    ×