search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ரைஸ் வெஜிடபிள் கட்லெட்
    X

    ரைஸ் வெஜிடபிள் கட்லெட்

    மதியம் மீந்த சாதத்துடன், காய்கறிகள் சேர்த்து கட்லெட் செய்தால் அருமையாக இருக்கும். சரி, இப்போது ரைஸ் வெஜிடபிள் கட்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    அரிசி சாதம் - 1 கப்  
    உருளைக்கிழங்கு - 1  
    மிக்ஸ்டு வெஜிடேபிள் (பீன்ஸ், கேரட், குடைமிளகாய்) - 1 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சாதத்தை வேகவைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.

    காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, சாதம், பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள, மல்லித்தூள், சோள மாவு, கடலைமாவு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு தட்டில் பிசைந்து வைத்துள்ளதை கட்லெட் வடிவில் தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×