search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த சிறுதானிய இடியாப்பம்
    X

    சத்து நிறைந்த சிறுதானிய இடியாப்பம்

    சிறுதானியங்களில் சத்தான சுவையான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானிய மாவில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    சிறுதானிய இடியாப்ப மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சாமை - 1 கப்
    தினை - 1 கப்
    வரகு - 1 கப்
    குதிரைவாலி - 1 கப்
    கேழ்வரகு - 1 கப்
    கம்பு - 1 கப்
    சோளம் - 1 கப்
     
    சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை நன்கு ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் நேரத்தில் எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    சிறுதானிய இடியாப்ப மாவு - 1 கப்
    கல் உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 2 கப்



    செய்முறை :

    தேவையான அளவு கல் உப்பினை இரண்டு கப் தண்ணீரில் சேர்த்து சூடேற்றவும். தண்ணீர் கொதித்ததும் இறக்கி விடவும்.

    சிறுதானிய இடியாப்ப மாவில் உப்பு சேர்த்த சுடுதண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையவும். மொத்த மாவினையும் சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.

    இம்மாவினை தேவையான அளவு எடுத்து இடியாப்பக் குழலில் இட்டு இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.

    பின்னர் இதனை ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான சிறுதானிய இடியாப்பம் தயார்.

    சத்துக்கள் நிறைந்த இதனை சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இந்த இடியாப்பத்துடன் தேங்காயப் பூ, தேங்காய் பால், குருமா, சாம்பார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேர்த்து உண்ணலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×