search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
    X

    நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    • நீரிழிவு நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன.
    • கீழ்க்கண்ட பாதிப்புகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோயால் ஏறக்குறைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன. கீழ்க்கண்ட பாதிப்புகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது:

    இதய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து மாரடைப்பு, இதய தசை நோய் (Cardiomyopathy), உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மன ஆரோக்கிய பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு மன அழுத்தத்தினால் கோபம், எரிச்சல், வெறுப்பு, சலிப்பு போன்றவை ஏற்படலாம்.

    கண் பாதிப்பு: கண் விழித்திரை பாதிப்பு, கண் அழுத்த நோய் (Glaucoma), கண் புரை போன்ற கண் பார்வை குறைபாடு பிரச்சினைகள் வரலாம்.

    சிறுநீரக பாதிப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரக செல்கள் பாதிப்படைவதால் சிறுநீரகங்கள் வீக்கம் அடைகின்றன. ரத்தம் வடிகட்டும் செயல்பாடு குறைவதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.

    நரம்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்படைந்து டிமென்ஷியா, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    சரும பிரச்சினைகள்: நீரிழிவு நோயாளிகள் சருமத்தில் கருமையாதல், சருமத்தில் தடிப்பு உருவாகுதல் (அகான்த்தோஸிஸ் நைக்ரிகன்ஸ்), தோல் தொற்று, கொப்பளங்கள், தோல் வறட்சி, அரிப்பு போன்றவை ஏற்படலாம்.

    நோய் எதிர்ப்பு மண்டல பாதிப்பு: ரத்த சர்க்கரை அதிகமாகும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து தொற்றுகள் ஏற்பட வழி வகுக்கிறது.

    நீரிழிவு மாத்திரைகளை சரியான நேரத்திலும் அளவிலும் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டு இந்த பாதிப்புகள் பெருமளவு குறையும்.

    Next Story
    ×