search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    உணவில் இறைச்சியை அதிகம் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படுமா?
    X

    உணவில் இறைச்சியை அதிகம் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

    • சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும்.
    • கோழி மற்றும் மீன் இறைச்சி சாப்பிடுவது நல்லது.

    பொதுவாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சி என்பது பாலூட்டிகளில் இருந்து பெறப்பட்ட இறைச்சியாகும். இதில் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சி அடங்கும். இதை பார்க்கும்போது சிவப்பு நிறமாக இருப்பதால் இதை சிவப்பு இறைச்சி என்று கூறுகின்றனர்.

    கோழி மற்றும் மீன் இறைச்சி சாப்பிடுவது நல்லது. கோழி இறைச்சியில் புரதம் அதிகமாக இருப்பதாலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதாலும் நாம் இதை சாப்பிடலாம். பொறித்த வடிவிலோ, வறுத்த வடிவிலோ சாப்பிடக்கூடாது.

    மீன் இறைச்சியிலும் அதிகமாக புரதங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மையான பொருட்கள் உள்ளன. மேலும் வைட்டமின் டி, வைட்டமின் பி 6, பி 12 போன்றவையும் இருக்கிறது. 2018-ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 48 சதவிகிதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. ஆகையால் நீங்கள் சிவப்பு இறைச்சியை குறைவாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறையும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×