search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    கொசுக்களால் பரவும் நோய்கள்
    X
    கொசுக்களால் பரவும் நோய்கள்

    கொசுக்களால் பரவும் நோய்கள்: தடுப்புமுறைகளும்.. தீர்வுகளும்...

    ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் கொசுக்களால் பரவும் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அவை கொசுக்களால் எப்படி பரவுகிறது என்பது குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
    கொசுக்களிடமிருந்து இருந்து தற்காத்துக்கொள்ளாவிட்டால் கொசு கடித்தல், சரும அரிப்பு போன்ற பிரச்சினைகள் முதலில் தோன்றும். அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் கொசுக்களால் பரவும் இத்தகைய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அவை கொசுக்களால் எப்படி பரவுகிறது என்பது குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    மலேரியா: கொசுக்கடியால் ஏற்படும் பொதுவான மற்றும் ஆபத்தான நோய், மலேரியா. ஒவ்வொரு ஆண்டும் மலேரியா பாதிப்புக்குள்ளாகி சுமார் 4 லட்சம் பேர் இறக்கிறார்கள். தற்போது மலேரியா பற்றிய விழிப்புணர்வு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காய்ச்சல், கடும் குளிர், உடல் வலி போன்றவை மலேரியாவின் முக்கிய அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. மலேரியா நோய் அபாயத்தை தவிர்ப்பதற்கு மழைக்காலங்களில் கொசுவலைகளை பயன்படுத்த வேண்டும். கொசுக்களை விரட்டும் மருந்துகளையும் உபயோகிக்கலாம். மலேரியாவுக்கு தடுப்பூசி இல்லை என்பதால், தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதே பாதுகாப்பானது.

    டெங்கு காய்ச்சல்: கடந்த சில ஆண்டுகளில், டெங்கு நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும் டெங்குவை முற்றிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. டெங்கு காய்ச்சல் பரவும் ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால் டெங்குவுக்கு முழுமையான சிகிச்சை முறை இன்னும் கிடைக்கவில்லை.

    ஆதலால் டெங்குவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். டெங்குவை ஏற்படுத்தும் கொசு முற்றிலும் வேறுபட்டது. ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அறிகுறிகளை வெளிப்படுத்திவிடும். அத்தகைய கொசு கடித்து உடனே பாதிப்பை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.

    சிக்குன்குனியா: இந்தியாவிலும், ஆசியாவின் பிற பகுதிகளிலும் சிக்குன்குனியா, அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் பேர் சிக்குன்குனியா பாதிப்புக்குள்ளாகிறார்கள். மழைக்காலத்தின் தொடக்கத்தில் 29 டிகிரி வெப்பநிலைக்கு மேல் இருக்கும்போது இந்த நோயை பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் மூட்டு வலி போன்றவை சிக்குன்குனியாவின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள்.

    மஞ்சள் காய்ச்சல்:இந்த காய்ச்சல் பிளவி வைரஸ் மூலம் உண்டாகிறது. இந்த வைரஸ் ஒரு வகை கொசு மூலம் பரவுகிறது. கரீபியன், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் மஞ்சள் காய்ச்சல் அதிகமாக பரவும். அந்த நாடுகளுக்கு சென்றாலும் கூட இந்தியர்கள் சட்டென்று இந்த நோய் பாதிப்புக்கு ஆளாவதில்லை.

    எனினும் கடந்த ஆண்டுகளில் ஒரு சிலர் மஞ்சள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால் இந்த காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மஞ்சள் காய்ச்சல் பரவும் ஆபத்து உள்ள நாடுகளுக்கு செல்ல நேர்ந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது.

    என்செபாலிடிஸ்: இதுவும் கொசுக்களால் பரவும் நோயாகும். மூளையை சென்றடையக்கூடிய குருத்தெலும்புகளை சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மற்றவற்றை விட ஆபத்தானது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் இந்த நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் எளிதில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். காய்ச்சல், சளி, மூட்டு வலி, தசை வலி, சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
    Next Story
    ×