search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இருதய நோய்
    X
    இருதய நோய்

    கொரோனா பாதிப்பால் வரும் இருதய நோய்களும், தடுக்கும் வழிமுறையும்

    கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதய நோய்கள், ரத்த கட்டிகளையும் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும்.
    கொரோனா நோய் (கோவிட் 19) கிருமியானது நுரையீரலை மட்டுமில்லாமல் இருதயத்தையும் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது இருதயமானது எப்பிகார்டியம், மையோ கார்டியம், என்டோ கார்டியம் ஆகிய மூன்றடுக்கு தசையினால் ஆன உறுப்பாகும்.

    கொரோனா கிருமியானது நம் உடலில் உள்ள ஆஞ்சியோ டென்சின், கன்வெற்டிங் என்சைம் என்று அழைக்கப்படும் ரிசிப்டர் மூலம் நம் உடல் உறுப்புகளுக்குள் செல்கிறது. நம் உடலில் உள்ள பல உறுப்புகளை போல இருதயத்திலும் இந்த ஆஞ்சியோ டென்சின் கன்வெற்டிங் என்சைம் ஏற்பி அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக கோவிட் 19 கிருமியினால் எளிதாக நமது இருதய தசையை தாக்க முடிகிறது.

    நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டதை போல இருதயத்தில் உள்ள மூன்றடுக்கு தசையினுள் ஒன்றின் பெயர் தான் மயோகார்டியம். கொரோனா வைரஸ் கிருமியானது இருதய தசையை பாதிக்கிறது. இந்த மயோகார்டைடில் என்று அழைக்கப்படும் நோயை இருதயத்திற்கென்றே உரிய ரத்த பரிசோதனை மூலம் நம்மால் அறிய முடிகிறது.

    கொரோனா நோயினால் வரும் இருதய தசை வீக்கம் மற்றும் தசை செயல் இழப்பு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது.

    இருதய தசையில் ஏற்படும் பாதிப்பினால் இருதய துடிப்பின் அளவு குறையும். அவ்வாறு குறையும் போது இருதயத்தால் மற்ற உறுப்புகளுக்கு தேவையான ரத்தத்தை கொடுக்க இயலாத நிலை ஏற்படும். இதனால் நுரையீரலில் நீர் புகுந்து மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் ரத்த கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் வரும்.

    எனவே கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதய நோய்கள், ரத்த கட்டிகளையும் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும். அவ்வாறு முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் முறையான சிகிச்சையை அளிப்பதன் மூலம் கொரோனா கிருமியினால் ஏற்படும் இருதயம் மற்றும் ரத்த பக்க விளைவுகளில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.

    இவ்வாறு கால்வின் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கால்வின் டேவிட்சிங் கூறினார்.
    Next Story
    ×