search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணவில் உப்பு அதிகமானால் இந்த பிரச்சனைகள் வரலாம்...
    X
    உணவில் உப்பு அதிகமானால் இந்த பிரச்சனைகள் வரலாம்...

    உணவில் உப்பு அதிகமானால் இந்த பிரச்சனைகள் வரலாம்...

    உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பதன் பின்னே இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
    முற்கால மனிதன் தனது உணவில் உப்பை மிக குறைவாகவே பயன்படுத்தி வந்தான். இந்த அளவுகோல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு 2.4 மடங்கு கூடியிருக்கிறது. இதெல்லாம் மேலைநாடுகளின் கணக்கு. இந்தியாவின் நிலைமையை கேட்கவே வேண்டாம்.

    உப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு உள்ளது. சோடியமும் குளோரைடும் உடலுக்கு தேவையான ஒன்று. இவை மட்டுமில்லாமல் நமது உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.

    இந்த வகை தனிம உப்புகளுக்கு நாம் உணவில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், சோடியத்தை மட்டும் செயற்கையாக மனிதர்கள் அதிக அளவில் சேர்க்கிறார்கள். இப்படி சேர்க்கத் தேவையில்லை என்று உணவியல் நிபுணர்கள் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள்.

    உப்பு உடலில் அதிகமாகும்போது என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்றால், உப்பு கூடும்போது கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள். இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் புரைநோய் வேகமாக பரவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் 'சோடியம் அல்கினேட்' என்ற உப்பை கலக்குகிறார்கள். இதனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

    எனவே உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவில் உள்ள உணவுகளை தொடாதீர்கள் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பதன் பின்னே இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.
    Next Story
    ×