search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாக்லெட்
    X
    சாக்லெட்

    ‘சாக்லெட்’ பற்றிய இனிப்பான தகவல்கள்

    கேக், ஐஸ்கிரீம் மற்றும் பல்வேறு இனிப்புகளில் ‘சாக்லெட்’ ஒரு முக்கிய பொருளாக பயன்படுகிறது. சரி இன்று ‘சாக்லெட்’பற்றிய இனிப்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
    சாக்கொலெட் அல்லது சாக்லெட் என்பது, கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருள்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்கச் சொல். கேக், ஐஸ்கிரீம் மற்றும் பல்வேறு இனிப்புகளில் இது ஒரு முக்கிய பொருளாக பயன்படுகிறது. உலகில் பெரும்பாலானவர்களால் மிகவும் விரும்பப்படும் சுவை மணங்களில் இதுவும் ஒன்றாகும். கொக்கோ கொட்டையின் திடப்பொருள் மற்றும் அதன் கொழுப்பு பாகம் ஆகியவை சேர்ந்ததே இந்த இனிப்புப் பண்டம். இவற்றுடன் சர்க்கரை, பால் மற்றும் பிற பொருள்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

    ஒயிட் சாக்லெட்

    ஒயிட் சாக்லெட் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால்பொருள், நறுமணப் பொருள்கள் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் கசப்பு நிறைந்த கொக்கோ திடப்பொருள் பயன்படுத்துவதில்லை. இனிப்பாக, அதிக அளவு கலோரிகள் இருந்தாலும் இதில் மருத்துவக்குணங்கள் மிகமிகக் குறைவே. ஒயிட் சாக்லெட்கள், இனிப்பு சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்படுகிறது.

    டார்க் சாக்லெட்

    இதில் கொக்கோ திடப்பொருள் அதிக அளவு உள்ளது. மேலும் இதனுடன் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை போன்றவை சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. இதில் கசப்புச் சுவை இருந்தாலும்கூட இது ஆரோக்கியமானதே. காரணம் இதில் சேர்க்கப்படும் கொக்கோ திடப்பொருளில் ப்ளவோனல் ஆன்டி-ஆக்சிடென்டுகள் போன்ற உடலுக்கு நன்மையளிக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன.

    சத்துகள்

    ஒரு அவுன்ஸ் சாக்லெட்டில் 168 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட் - 12.8 கிராம், புரோட்டின் - 2.2 கிராம், நார்ச்சத்து - 3.1 கிராம், கொழுப்பு - 12 கிராம் இவற்றோடு, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், வைட்டமின்களும் உள்ளன.

    இதில் டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட், மில்க் சாக்லெட் என பலவகை இருந்தாலும் அதில் கொக்கோ எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அது ஆரோக்கியமானது. ஆகவே இவற்றை வாங்கும்போது அதில் கொக்கோவின் அளவு 70 சதவிகிதத்துக்கு குறையாமல் இருக்கிறதா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.
    Next Story
    ×