search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வைட்டமின் குறைபாடு
    X
    வைட்டமின் குறைபாடு

    நகரவாசிகளிடம் அதிகரிக்கும் வைட்டமின் குறைபாடு

    இன்றைக்கு நகரவாசிகள் அதிக அளவில் நோய்வாய்ப்படுவதும் ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான மருத்துவமனைகள் முளைத்து வருவதையும் காண முடிகிறது.
    இந்திய நகரவாசிகளிடம் கடும் வைட்டமின் பற்றாக்குறை காணப்படுவதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த சில விஞ்ஞானிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 30 முதல் 70 வயதுக்கு உள்பட்ட பலரை ஆய்வு செய்தனர். அதில் 100 பேரில் 46 பேருக்கு வைட்டமின் சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

    குறிப்பாக இளைஞர்களிடத்தில் வைட்டமின் பி2 மற்றும் பி6 ஆகிய வைட்டமின்களின் சத்து பற்றாக்குறை அதிக அளவில் காணப்பட்டது. இன்றைக்கு நகரவாசிகள் அதிக அளவில் நோய்வாய்ப்படுவதும் ஒவ்வொரு நகரத்திலும் ஏராளமான மருத்துவமனைகள் முளைத்து வருவதையும் காண முடிகிறது. மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு சத்து பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக இருப்பது ஏற்கனவே மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இது போன்ற சத்துப்பற்றாக்குறை என்பது பெரும்பாலும் வறுமை நிலவும் நாடுகளில் தான் இருந்து வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்திய அளவில் அதுவும் நகரப்பகுதிகளில் 100-ல் 46 பேருக்கு வைட்டமின் சத்து பற்றாக்குறை காணப்படுவது விஞ்ஞானிகளை திகைப்படைய வைத்துள்ளது.

    வைட்டமின் சத்து என்பது உடலின் இயல்பான செல்களின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் தேவையான நுண் சத்துக்களாகும். வைட்டமின் சத்துகள் போதிய அளவில் கிடைக்காவிட்டால் உடலின் இயக்கம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். உதாரணமாக ஒருவருக்கு வைட்டமின் பி2 அல்லது ரிபோபிளேவின் குறைபாடு இருந்தால் அவருக்கு நரம்பு தொடர்பான நோய்கள் சோகை மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் வரலாம். இதே போல் பி6 குறைபாடு ஏற்படும் போது மூளையின் செயல்பாடு பாதிப்படையும்.

    மேலும் வலிப்பு புற்றுநோய் ஒரு பக்க தலைவலி உடலில் வலி இதய பாதிப்பு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். நகரவாசிகளில் பலர் தோற்றத்தில் ஆரோக்கியமானவர்களாக தென்பட்டாலும் அவர்களில் பலருக்கு இந்த பாதிப்பு இருப்பதே தெரியவதில்லை. சில நேரங்களில் அவர்களுக்கு இது நீண்ட நாள் பாதிப்பாக மாறிவிடும். உடலில் சூரிய வெளிச்சம் படும் நிலையில் உடலின் தோல் தானாகவே வைட்டமின் டி யை உற்பத்தி செய்யும் என்பது இயற்கை. இந்தியாவை பொறுத்தளவில் நல்ல சூரிய வெளிச்சத்தில் தான் பெரும்பாலான மக்கள் இயங்குகின்றனர். ஆனாலும் தற்போது நகரவாசிகளிடம் பெருமளவில் வைட்டமின் டி குறைபாடு இருப்பதும் தெரியவந்துள்ளது.

    வைட்டமின் டி பற்றாக்குறை சர்க்கரை நோய் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக இருக்கிறது. நாட்டில் தற்போது பயன்படுத்தும் அரிசி என்பது ஆலைகளில் முற்றிலும் தீட்டப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அரிசியை ஆலைகளில் தீட்டுவதால் அதில் உள்ள பி2 வைட்டமின் உள்பட பல்வேறு சத்துக்கள் போய் விடுகின்றன. வைட்டமின் பி2 மற்றும் பி12 உடலுக்கு கிடைக்காமல் போவதால் இரத்தம் சார்ந்த நோய்கள் வருகின்றன. குறிப்பாக மூளை மற்றும் இதயத்தாக்குதலுக்கு இந்த வைட்டமின்களின் குறைபாடே காரணம்.

    எனவே இந்திய நகரவாசிகள் ஆரோக்கியம் உள்ளவர்களாக வாழ உணவு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது உணவில் அதிக அளவு வைட்டமின் சத்துகள் உள்ள காய்கறிகள் பழங்கள் கீரைகள் பால் பொருட்கள் முளை கட்டிய பயிர்கள் ஆகியவற்றை உண்ண வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×