என் மலர்

  ஆரோக்கியம்

  ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியுமா?
  X

  ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக சர்க்கரை வியாதி மற்றும் ரத்தக்கொதிப்பு நோய்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதை போல ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
  ஆஸ்துமா ஒரு வகையான ஒவ்வாமை மற்றும் அழற்சி நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூண்டும் பொருட்களால் நமது மூச்சு குழாய் சுருங்கியும், அழற்சியின் காரணமாக அதன் உட்பகுததி தடித்தும் விடுகிறது. இதன் விளைவாக மூச்சு குழாய் வழியாக காற்று உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினமாகிறது. இதனால் மூச்சிரைப்பு, இருமல் ஏற்படுகிறது.

  ஆஸ்துமாவில் மூன்று நிலைகள் உள்ளது. குறைந்த அளவு, அதிகளவு, மிக அதிகளவு ஆஸ்துமா என மூன்று நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்துமா சிகிச்சையில் ஸ்டீராய்டு மருந்துகள் உபயோகிப்பதால் அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப மருந்தின் அளவு குறைக்கப்படும். மிக அரிதாக மூச்சுத் திணறல் ஏற்படும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே உபயோகப்படுத்தப்படும்.

  இந்த நிலையில் ஸ்டீராய்டின் பாதிப்பு இருக்காது. அதிகம் மற்றும் மிக அதிகம் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகளவு ஸ்டீராய்டுகள் உடலுக்கு மிகக் கெடுதி என்பதால் தொடர் சிகிச்சையில் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டு மிக அதிக அளவிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே பரிந்துரைக்கப்படும்.

  ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முக்கியமாக அவர்களுக்கு ஒப்புக் கொள்ளாத உணவு, இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது, குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியானவற்றை உண்ணாமல் தவிர்ப்பது, முறையான டயட், வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்வது, வெளியே செல்லும்போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்வது போன்றவற்றால் இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாது.

  ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இன்ஹேலரை பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால், மிக அதிகளவு கடைசி நிலையில் உள்ளவர்களுக்கு மருந்தில் அதிகளவு ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுவதால் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், ஆஸ்துமாவின் தீவிரத்தின் காரணமாக இவற்றின் மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு பின் ஸ்டீராய்டின் அளவு படிப்படியாக குறைக்கப்படும்.
  Next Story
  ×