என் மலர்

  ஆரோக்கியம்

  கல்லீரலின் வேலையும் - பாதுகாக்கும் வழிமுறையும்
  X

  கல்லீரலின் வேலையும் - பாதுகாக்கும் வழிமுறையும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்லீரல் ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதி. இதன் மிக முக்கியமான வேலைகளையும், கல்லீரலை பாதுகாக்கும் வழிமுறைகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  ஒருவரது உடல் நலம் பல காரணங்களை கூட்டாகக் கொண்டே அமையும். உணவு, தூக்கம், பரம்பரை, சுற்று சூழ்நிலை, உறவுகளின் ஒற்றுமை, சுறுசுறுப்பான அன்றாட வாழ்க்கை. உடல் எந்த அளவு மூச்சுக்களை உடனடியாக வெளியேற்றுகின்றது என்பதை பொறுத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியம் அமைகிறது. இதில் அநேகமானவற்றை நம் கவனம், அக்கறை மூலம் சீராய் வைத்துக் கொள்ள முடியும்.

  நாம் எப்போதும் நம் உடலின் நச்சுப் பொருள் வெளியேற்றம் சீராய் இருக்கின்றதா? என்பதனை கவனிக்கத் தவறி விடுகின்றோம். கல்லீரல் ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதி. 500 வகைகளுக்கும் மேலான வேலையினைச் செய்வது. உடலின் உள் உறுப்புகளில் பெரிதான உறுப்பு. இதன் மிக முக்கியமான வேலைகளில் சிலவையாக.

  பித்த நீர் உற்பத்தி

  * பித்த நீர் தான் கொழுப்பு, புரதம், சில வைட்டமின்கள் இவற்றினை உடைத்து குடல் முலம் உடலில் உறிஞ்சப்பட உதவுகின்றது.

  * மெட்டபாலிஸம் எனப்படும் வளர் சிதை மாற்று முறையில் ஹீமோகுளோபினை உடைத்து பிலுரூபின் எனும் புரத உருவாக்கத்திற்கு உதவுகின்றது. வெளிவரும் இரும்பு கல்லீரல் மற்றும் எலும்பு மஞ்ஜையில் சேமிக்கப்பட்டு புது ரத்த செல்கள் உருவாக உதவுகின்றது.

  * உடலில் அடிபட்டு ரத்தம் கசியும்போது அதிக ரத்தம் வெளியேறாமல் ரத்தம் உறைய உதவுகின்றது.

  * ரத்தம் உறைய வைட்டமின் கே சத்தும் அவசியமான ஒன்று. பைல் எனும் பித்த நீர் வைட்டமின் கே உடலில் உறிஞ்சப்பட அவசியமானது.

  * கார்போஹைடிரேட் என்பது மாவு சத்தின் வளர் சிதை மாற்றங்கள். கார்போஹைடிரேட்டுகளை கல்லீரல் உடைத்து க்ளுகோஸாக ரத்தத்தில் சேர்த்து உடலின் அனைத்து செல்களும் சக்தி பெற்று செயல்பட உதவும்.

  * அதிக க்ளுகோஸ் கல்லீரலில் க்ளைகோகனாக சேமிக்கப்பட்டு அவசர நேரத்தில் உடல் செயல்பாட்டிற்கு உதவும்.

  * கல்லீரல் வைட்டமின்கள் ஏ, பி12, சி, டி,,இ.கே தாது உப்புகளான இரும்பு, காப்பர் இவற்றினை சேமித்து வைத்து உணவில் இவற்றில் பற்றாக்குறை ஏற்படும் போது தற்காலிக அவசரத்திற்கு உதவி அளிக்கின்றது.

  * ரத்தத்தினை வடிகட்டி சுத்தம் செய்கின்றது. நச்சுப்பொருட்கள் அதிக ஹார்மோன் போன்ற பல பாதிப்பு ஏற்படும் பொருட்களை வடிகட்டி சுத்தம் செய்து உடலுக்கு அளிக்கின்றது.

  * நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்ட உதவுகின்றது.

  * உள்உறுப்புகளில் கல்லீரல் ஒன்று தான் காயப்பட்டாலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை உள்ளது. இப்படி கல்லீரலின் அபார முக்கிய செயல்களை விவரித்துக்கொண்டே செல்லலாம். அதிக உடல் பாதிப்புகளும், ஆல்கஹாலும், பெரிதும் கல்லீரலை பாதித்துவிடும்.

  * வைரஸ் ஹைப்படைடிஸ் ஓ.லி.சி

  * ஆல்கஹால் இல்லாத கொழுத்த கல்லீரல் பாதிப்பு நோய்.

  * அதிக காப்பர் சேர்க்கை.

  * பித்தநீர் குழாய் சீராக இன்மை.

  * க்ளூகோஸ் வளர் சிதை மாற்ற குறைபாடு (பரம்பரை காரணம்).

  * கல்லீரல் தசை தடிப்பு. அதிக சர்க்கரை உண்ணும் பழக்கம்.

  * கிருமிகள் தாக்குதல் போன்றவைகள் கல்லீரல் பாதிப்பிற்கான காரணங்கள் ஆகின்றன. கல்லீரலை பாதுகாக்க

  * அதிக சர்க்கரை உண்பதைத் தவிருங்கள்.

  * இப்பொழு தெல்லாம் ஊசி போடுவது கூட அவரவருக்கு போட்டவுடன் நீக்கப்படுகின்றது. ஆகவே ஊசிகள் மூலம் எந்த தொற்றும் பரவாமல் தடுக்கப்படுகின்றது. கல்லீரல் சரிவர வேலை செய்யவில்லை என்பதனைக் காட்டும் அறிகுறிகள்.

  * மஞ்சள் காமாலை * வயிற்று வீக்கம் வலி * வீங்கிய கால்கள், கணுக்கால், * அரிக்கும் சருமம் * அடர்ந்த நிறம் கொண்ட சிறுநீர் * தார்போல் நிறத்தில் வெளிப்போக்கு * ரத்தம் கசிந்த வெளிப்போக்கு * அதிகசோர்வு * குழப்பம் * மூட்டுவலி * ரத்தப்போக்கு ஆகியவை ஆகும். ஆக கல்லீரலை எல்பொழுதும் ஆரோக்யமாக வைத்துக்கொள்வது நம் உடலை பாதுகாக்கும் சிறந்த முறையாகும்.

  தவறான உணவுகளை உட் கொள்வதைத் தவிருங்கள். ரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிருங்கள் கெட்ட கொழுப்பு உணவுகளை தவிருங்கள். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதோடு இருதய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு பாதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அலர்ஜி என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடுகின்றன. எனவே இவைகளை சிறுவயது முதலே தவிர்த்து விடுங்கள்.

  * காய்கறி சாறு குடியுங்கள்- வெகு எளிதாக கல்லீரலை  காத்துக் கொள்ளும் முறை காய்கறி சாறு குடிப்பது தான். * எலுமிச்சை * வெள்ளரி * தர்பூஸ் * புதினா * கொத்தமல்லி * காரட் * பீட்ருட்* கீரை* முட்டைகோஸ் * இஞ்சி  * பூண்டு * திராட்சை.  மற்றும்  கடலை பீர்க்கை, சுரைக்காய் போன்ற காய்களில் தினமும் சிலவற்றினை  ஜூஸாக செய்து குடிப்பது கல்லீரலை மிகவும் சிறப்பாக பாதுகாக்கும். மிகவும் எளிதானதும் கூட.

  * பொட்டாசியம் சேர்க்க வேண்டும்- கல்லீரல் பாதிப்பு உடையவர்களுக்கு ரத்தத்தில் பொட்டாஷியம் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும்  எனப்படும் கொழுப்பு சேர்ந்த கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கும் பொட்டாஷியம் குறைபாடு ரத்தத்தில் இருப்பதற்கும் தொடர்பு  இருக்கின்றது.

  என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கல்லீரலுக்கு பொட்டாஷிய சத்து கிடைத்தாலே பல முக்கிய வேலைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கும்.சிறு நீரக பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனைப்பெற்றே பொட்டாஷியம் சத்தினை அவர் அறிவுரைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

  * பீன்ஸ் பிரிவுகள் * பீட்ருட் கீரை * சர்க்கரை வள்ளி
  * தக்காளி ஜூஸ் *  வாழைப்பழ-ம் போன்றவை வெகுவாய் உதவும்.
  * மஞ்சளை சமையலில் நன்கு பயன்படுத்துங்கள்.
  *  மது பழக்கத்தினை அடியோடு விட்டு விடுங்கள்.

  இன்சுலின் செயல்பாடு தடை:

  உடலின் செல்களால் ஹார்மோன் இன்சுலினை சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகின்றது. இதனை சரிசெய்ய மேலும் இன்சுலின் சுரக்கும். நாளடைவில் உறுப்புகள் பாதிப்பும் ஏற்படுகின்றது. அதிக கார்போஹைடிரேட் உணவு, இனிப்பு இவையெல்லாம் பாதிப்பினை கூட்டுகின்றன.

  இதன் அறிகுறிகளாக * அதிக தாகம் * சிறுநீர் போக்கு *  அதிக பசி * அதிக சோர்வு * பார்வை சரியின்மை * கை, கால்கலில் மதமதப்பு * புண்கள் சீக்கிரம் ஆறாமை * காரணமின்றி எடை குறைதல் * வறட்சியான சருமம் *  எளிதில் கிருமிகள், பூஞ்ஞை பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.
  மேலும் இவர்களுக்கு

  * மனச்சோர்வு * இருதய நோய் * அதிக கொழுப்பு * உயர் ரத்த அழுத்தம் * சிறுநீரக நோய் * நரம்பு பாதிப்பு * பக்கவாதம் என மனிதனை உலுக்கி எடுத்து விடுகின்றன.

  சர்க்கரை நோய் பாதிப்பு  ஒரு இரவில் ஏற்படுவதில்லை. ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடித்து விட்டால் உணவு குறை, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை இவற்றில் முறையான மாற்றங்களை கொண்டு வந்து கட்டுப்பாட்டில்  சர்க்கரையின் அளவினை கொண்டு வந்துவிடலாம்.
  மேலும் அமைதியான வாழ்க்கை முறை, 8 மணி நேர தூக்கம், தியானம், யோகா இவை இன்றைய ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமாகி விட்டது என்பதனை அறிந்து அதனை கடைப்பிடிக்க வேண்டும்.

  பூஞ்ஞை (அ) காளான் தொற்று

  கான்டிடா எனப்படும் பூஞ்ஞை தொற்று உடலில் பல பிரச்சினைகளை உருவாக்கலாம். இது உணவுக்குழாயில் பொதுவாக காணப்படும் ஒன்று. இதன் அளவு பெருகும் பொழுது பிரச்சினைகள் உணவு குழாயோடு மற்றும் நிற்காமல் பரவுகின்றன.

  இதனது அதி தீவிர வளர்ச்சி குடல் சுவற்றில் ஒட்டைகளை உருவாக்கு கின்றது. இதனால் நச்சுப் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் கலக்கின்றது. கல்லீரல் பாதிப்பு ஏற்படுகின்றது. சர்க்கரை அளவு மாறுபடுகின்றது. ஹார்மோன்கள் கட்டுப்பாடு பாதிக்கப்படுகின்றது.

  ஏன் இந்த கன்டிடா பூஞ்ஞை அதிக வளர்ச்சி பெறுகின்றது. கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது. அதிக மன அழுத்தம், மது அருந்துவது அவசியம் காரணமாக சில நேரங்களில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் அதிக அளவினால் நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவது போன்றவை இந்த பூஞ்ஞை அதிக உருவாக்க காரணம் ஆகின்றன.

  இதன் அறிகுறிகள்


  * தோல், நகங்களில் தொற்று * மலச்சிக்கல் * வயிற்றுப்போக்கு * செரிமான பிரச்சினை * பிறப்புறுப்பில் அரிப்பு, தொற்று * இனிப்பு அதிகம் உண்ண ஆசைப்படுவது ஆகியவைகள் ஆகும்.

  இது வந்து விட்டால் மருத்துவ சிகிச்சை மிக அவசியம். ஆனால் தவிர்ப்பு முறைகளாக

  * தேங்காய் எண்ணெய் உடலில் தடவி குளியுங்கள்
  * அதிக மாவு சத்து உணவுகளைத் தவிருங்கள்
  * இனிப்பு அதிகம் உண்ணாதீர்கள்
  * அன்றாடம் ஒரு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்
  * பூண்டு உணவில் தினமும் சேருங்கள்
  * பச்சை காய்கறிகள், கீரை உணவுகளை உண்ணுங்கள்.
  Next Story
  ×