search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்
    X

    ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்

    தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை சுத்தம் செய்கின்றன. செல்களை புதுப்பிக்கின்றன. தசைகளை வலுப்படுத்துகின்றது. கொழுப்பினை உடைக்கின்றது.

    ரத்தத்தில் சர்க்கரை அளவினை சீர் செய்கின்றது. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழ பழகுங்கள். அத்துடன் தினமும் 8-10 மணி நேரம் தூங்குங்கள். தூக்கம் வரவில்லை எனில் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். சீக்கிரம் தூங்கி விடுவீர்கள்.

    * இரவு உணவினை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்ற அறிவுரையினை மருத்துவ உலகம் கூறுகின்றது. 7 மணிக்குள் உணவினை முடித்துக் கொண்டால் 9 மணிக்கு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது என பலர் கூறுகின்றனர்.  ஏதேனும் புரதமாக சிறிதளவு எடுத்துக் கொள்வது வயிறு நிறைவினை தரும். ஆரோக்யத்தினையும் அளிக்கும். சிறிதளவு பன்னீர் அல்லது சில பாதாம் கொட்டைகள் இவையே போதும். மாவு சத்து, சர்க்கரை சேர்ந்த உணவு கண்டிப்பாக வேண்டாம்.

    * தூங்குவதற்கு முன்னால் சில எளிய யோகாசனங்கள் செய்யலாம்.

    * குடல், உணவுப் பாதை நன்கு இருந்தால் உடல் சிறந்த ஆரோக்கியம் பெறும். எனவே அன்றாட உணவில் கொழுப்பில்லாத தயிர், மோர் இவற்றினை எடுத்துக் கொள்வதும் தூக்கத்திற்கு உதவும்.

    * கால்ஷியம், மக்னீசியம் இவை தேவையான அளவு உங்கள் உடலில் உள்ளதா என்பதை உங்கள் மருத்துவர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

    * வெந்நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவது இரவில் உடலினை ஆசிட் தன்மை இல்லாது  வைக்கும். ஆசிட் தன்மை இல்லாது இருந்தாலே உடல் தொந்தரவின்றி இருக்கும். 
    Next Story
    ×