search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    மூத்ராக்ஷய முத்திரை, ஜலோதர நாசக் முத்திரை
    X
    மூத்ராக்ஷய முத்திரை, ஜலோதர நாசக் முத்திரை

    சிறுநீரகம் சிறப்பாக இயங்கும் முத்திரைகள்

    சிறுநீரக இழப்பு பொதுவாக தவறான உணவுமுறை, உயர் ரத்த அழுத்தம், மது, சிகரெட் பிடித்தல், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் உண்ணுதல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.
    மூத்ராக்ஷய முத்திரை:

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண்களை திறந்து மோதிரவிரல், சுண்டு விரலை மடக்கி உள்ளங்கையை தொடும்படி வைத்து மோதிரவிரல் மீது கட்டை விரலை வைக்கவும்.  ஆள்காட்டி விரலும், நடுவிரலும் நீட்டி இருக்க வேண்டும்.

    இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் காலை, மதியம், மாலை சாப்பிடும்முன்  செய்யவும்.  மூன்று முறைகள் பயிற்சி செய்ய முடியாதவர்கள் காலை, மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்யவும்.

    ஜலோதர நாசக் முத்திரை:

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  கண்களை மூடி மெது வாக மூச்சை இழுத்து மெது வாக மூச்சை வெளி விட வும்.  ஒரு பத்து முறைகள்.  பின் கண் களை திறந்து சுண்டு விரலின் நகத் திற்கு கீழ் கட்டைவிரல் நுனியை தொட வேண்டும்.

    மடக்கிய சுண்டு விரலின் நகத்தின் மேல் கட்டைவிரல் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது.

    சுண்டுவிரல் நீர் மூலகம், கட்டை விரல்நெருப்பு மூலகம்.  நீர் மூலகத்தின் மேல் நெருப்பு மூலகம் உள்ளது. இரண்டு நிமிடங்கள் காலை, மாலை பயிற்சி செய்யவும்.  சிறுநீரகம் மிகச் சிறப்பாக சக்தி பெற்று இயங்கும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    Next Story
    ×