என் மலர்
உடற்பயிற்சி

புஜங்காசனம்
குப்புறப்படுத்து செய்யும் புஜங்காசனம்
ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும் அற்புத ஆசனமிது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம், இதய பலவீன முடையவர்கள் இதனை பயில வேண்டாம்.
செய்முறை: விரிப்பில் குப்புறபடுக்கவும். இரு கால்களையும் சேர்த்து படத்தில் உள்ளதுபோல் வைக்கவும். இரு கைகளையும் இதயம் பக்கத்தில் வைத்து மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டே உடம்பை பின்னால் வளைக்கவும். இடுப்பு வரை தரையில் இருக்கவும். இடுப்பிற்கு மேல் படத்தில் உள்ளது போல் வளைக்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மூச்சை வெளிவிட்டு தரையில் வந்து விடவும்.
புஜங்காசனத்தின் பலன்கள்: முதுகுத்தண்டு திடப்படும், அடிமுதுகு வலி, நடுமுதுகு வலி, கழுத்து முதுகு வலி நீங்கும். அதைச் சார்ந்த உள் உறுப்புக்கள் சிறுநீரகம், சிறுநீரகப்பை, சிறுகுடல், பெருங்குடல், இதயம், நுரையீரல், நன்கு சக்தி பெற்று இயங்கும்.
ராஜ உறுப்பான இதயம் பாதுகாக்கப்படுகின்றது. மழைக்காலம், குளிர்காலங்களில் வரும் மூக்கடைப்பு, சைனஸ், ஆஸ்துமா வராமல் பாதுகாக்கும் அற்புத ஆசனமிது. முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம், இதய பலவீன முடையவர்கள் இதனை பயில வேண்டாம்.
Next Story






