search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காயங்கள் ஏற்படாமல் உடற்பயிற்சி செய்வது எப்படி?
    X
    காயங்கள் ஏற்படாமல் உடற்பயிற்சி செய்வது எப்படி?

    காயங்கள் ஏற்படாமல் உடற்பயிற்சி செய்வது எப்படி?

    நாம் உடற்பயிற்சியின் விளைவுகளில் எந்த அளவுக்கு கவனத்தை செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு காயங்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்ய கவனம் கொள்வது அவசியம்.
    பாதுகாப்பான உடற்பயிற்சிக்கு திட்டமிடல் மற்றும் கவனமாக செயல்படுத்துதல் தேவைப்படுகிறது. உங்கள் திறமைக்கான சிறந்த பயிற்சியைக் கண்டறிந்து உங்கள் பயிற்சியை தொடங்குங்கள். உங்களுக்கு மூட்டுவலி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை செய்வது உடல் நலத்தை கெடுக்கும்.

    சரியான உபகரணங்களை தேர்ந்தெடுப்பது பாதுகாப்பான உடற்பயிற்சிக்கு உதவும். பளு தூக்கும் பயிற்சிகளை தொடங்கும் முன்னர், உங்கள் உடலின் பளு தூக்கும் திறனிற்கு ஏற்ற வகைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு ஏற்ற உடைகளையும் காலணிகளையும் அணிய வேண்டும். சாலைகளில் ஓட்ட பயிற்சி அல்லது சைக்கிளிங் செய்யும்போது பளிச்சென்ற ஆடைகளை உடுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு உங்களை அடையாளம் காண முடியும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும்.

    உடற்பயிற்சியின் போது காயங்கள் ஏற்படாமல் இருக்க இந்த விதிகளை பின்பற்றுங்கள்..

    உடலை சூடேற்றுங்கள் (வார்ம் அப் ): உடற்பயிற்சிக்கு முன் உடலை சூடேற்றுவது , ஊட்டச்சத்து நிறைந்த இரத்தத்தை தசைகளுக்குள் பாய செய்து இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் அதிகரிக்க செய்கிறது. தசைகளுக்குள் அதிகமான இரத்தம் பாயும்போது உடலில் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது . கைகளை வீசியபடி நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலை சூடேற்றலாம். ஒரு செட் அல்லது உங்கள் தினசரி வழக்கத்தை முடித்து விட வேண்டும் என்ற கட்டாயத்திற்காக உங்கள் நல்ல வடிவத்தையும் தோற்றத்தையும் தியாகம் செய்ய வேண்டாம்.

    நீங்கள் ஏற்கனவே அடிக்கடி மற்றும் தீவிரமாக உடற்பயிற்சி செய்யாவிட்டால், சிக்கலான உடற்பயிற்சி நடைமுறைகளுக்கு திட்டமிட்டு முன்னேறுங்கள். திட்டமிடாமல் திடீரென்று சிக்கலான உடற்பயிற்சியை மேற்கொள்வதால் உடல் அதற்கு பழக்கப்படாமல் சில காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படலாம்.

    அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்பட்ட களைப்பின்போது அல்லது உடல் நலிவடையும்போது தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சோர்வாக இருக்கும் போது பயிற்சியில் ஈடுபட்டால் கவனக்குறைவால் காயங்கள் ஏற்படலாம்.

    Next Story
    ×