search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ‘ப்ளாங்க் உடற்பயிற்சி
    X
    ‘ப்ளாங்க்' உடற்பயிற்சி

    ‘ப்ளாங்க்' உடற்பயிற்சி செய்யும் போது இத மறக்காதீங்க..

    முதலில் ப்ளாங்க் உடற்பயிற்சிக்கான அடிப்படையை கற்றுக்கொண்டு, பிறகு ப்ரோன் ப்ளாங்க், ஸ்பைடர்மேன் ப்ளாங்க்... என நீளும் அதன் வகைகளை செய்து பார்க்கலாம்.
    ப்ளாங்க் உடற்பயிற்சியில் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரும். அதனால் முதலில் ப்ளாங்க் உடற்பயிற்சிக்கான அடிப்படையை கற்றுக்கொண்டு, பிறகு ப்ரோன் ப்ளாங்க், ஸ்பைடர்மேன் ப்ளாங்க்... என நீளும் அதன் வகைகளை செய்து பார்க்கலாம்.

    ப்ளாங்க் செய்வதற்கு, மூச்சுப் பயிற்சி அடிப்படை. ப்ளாங்க் பற்றிய அடிப்படை தெரியாதவர்களும், செய்யத் தெரியாதவர்களும், அடுத்தடுத்த வகைகளை செய்வதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ‘ப்ரோன் ப்ளாங்க்’ என்ற ப்ளாங்க் வகைப் பயிற்சியைச் செய்து, நன்கு பழக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே, ஸ்பைடர்மேன் ப்ளாங்க் எளிய பயிற்சியாக இருக்கும். யோகா, பைலேட்ஸ், க்ராஸ் பிட் அனைத்திலும், அதன் பயிற்சி முறைகளுக்கு ஏற்ப, சில மாற்றங்கள் செய்து பரிந்துரைக்கப்படும்.

    பொதுவாகவே எந்தப் பயிற்சியையும், வெகுநாள்களுக்கு தொடரக்கூடாது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பயிற்சியையும், முடிந்தால் பயிற்சி முறைகளையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், குறிப்பிட்ட தசைக்கு மட்டும் பயிற்சிக் கொடுப்பதும், குறிப்பிட்ட தசைக்குப் பயிற்சியே கொடுக்காமல் இருப்பதும் தசை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    வயிற்றின் அடிப்பகுதிக்காக மட்டும் பயிற்சிகளை செய்பவர்கள் (சிட்-அப்ஸ்), கூடவே முதுகு மற்றும் பின் தொடைக்கான பயிற்சியையும் செய்ய வேண்டும். ப்ளாங்க் செய்யும்போது இத்தகைய பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதில்லை. காரணம், இதைச் செய்யும்போது உடலின் முன், பின் பக்கங்கள் இரண்டுமே செயல்படும்; அனைத்துத் தசைகளும் ஆக்டிவ்வாக இருக்கும். இதனால்தான் இந்தப் பயிற்சியை அன்றாட பயிற்சிகளோடு சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
    Next Story
    ×