search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மார்பழகுக்காக நீச்சல் பயிற்சி பெறும் பெண்கள்
    X
    மார்பழகுக்காக நீச்சல் பயிற்சி பெறும் பெண்கள்

    மார்பழகுக்காக நீச்சல் பயிற்சி பெறும் பெண்கள்

    நீச்சல் பயிற்சி பெண்களுக்கு அதிக ஆரோக்கியத்தையும், அழகையும் தரும் என்பதால் பெண்கள் இப்போது அதிக அளவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
    உடற்பயிற்சிகளில் மிக சிறந்தது, நீச்சல். இது நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் செலவாகும். அதனால் உடல் எடை குறையும். அதோடு சக்தி மேம்பட்டு, உழைக்கும் திறனும் அதி கரிக்கும். வாரத்திற்கு குறைந்தது 5 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் நீச்சல் பயிற்சியில் கடைப்பிடிக்கவேண்டியவை:

    * தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    * நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

    * முதல் 10 நிமிடங்களுக்கு கைகால்களை நீட்டி நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

    * நீச்சல் பயிற்சி செய்ய விரும்புவோர் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களையும் திடீரென்று கடலில் ஏற்படும் பெரிய அலைகள் கவிழ்த்து விடும்.

    * நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் குளத்தின் தண்ணீர் அடிக்கடி மாற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கவனியுங்கள்.

    * நீச்சல் குளத்தின் சுற்றுப்புறமும் சுத்தமாக இருத்தல் அவசியம்.

    * வலிப்பு நோய், ஆஸ்துமா மற்றும் தோல் வியாதி மற்றும் சிறுநீரை அடக்க முடியாத பாதிப்பு உள்ளவர்களும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது.

    மூன்று வகை நீச்சலும், அதன் பலன்களும்:

    முதல் வகை: இடுப்பளவு ஆழமுள்ள நீரில் கால்களை அழுத்தி பிறகு பின்பக்கமாக நீரில் உதைத்து கால்களை மாற்றி மாற்றி நீந்துவது. இவ்வாறு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கால் தொடை களுக்கு நல்ல வலிமை தரும்.

    இரண்டாவது வகை: கழுத்தளவு நீரில் மல்லாந்த நிலையில் படுத்துக்கொண்டு கைகளை நீரில் பரப்பி விரித்தும் சுருக்கியும் நீரைத்தள்ளிவிட்டு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கை புஜங்களுக்கும், மார்பு தசைகளுக்கும் நல்ல வலிமை தரும். பெண்களுக்கு மார்புகள் எடுப்பாகி அழகாகும்.

    மூன்றாவது வகை: கழுத்தளவு நீரில் தரையில் நிற்பதைப்போல செங்குத்தாக நின்று கொண்டு கைகளையும் கால்களையும் தண்ணீரில் மேலும் கீழும் அசைத்து உடல் எடையை சமநிலைப் படுத்தி நீச்சல் அடித்தால் ஒட்டு மொத்த உடலும் பலமாகும்.

    நீச்சல் பயிற்சி பெண்களுக்கு அதிக ஆரோக்கியத்தையும், அழகையும் தரும் என்பதால் பெண்கள் இப்போது அதிக அளவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
    Next Story
    ×