search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எவ்வளவு நேரம் கார்டியோ உடற்பயிற்சி செய்யலாம்
    X
    எவ்வளவு நேரம் கார்டியோ உடற்பயிற்சி செய்யலாம்

    எவ்வளவு நேரம் கார்டியோ உடற்பயிற்சி செய்யலாம்

    சரியான அளவில் தான் கார்டியோ உடற்பயிற்சி செய்கிறோமா இல்லை அளவுக்கு அதிகமாக ஈடுபடுகிறோமா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம் வாங்க...
    கார்டியோ உடற்பயிற்சி போன்றவற்றை அதிகமாக செய்யும் போது நம் தசைகள் இழக்கப்படுகின்றன. இதனால் காயங்கள், எடை இழப்பை பெறுவதில் தாமதம் உண்டாகிறது. எனவே சரியான அளவில் தான் கார்டியோ உடற்பயிற்சி செய்கிறோமா இல்லை அளவுக்கு அதிகமாக ஈடுபடுகிறோமா என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    பொதுவாக உடல் எடையை குறைக்க ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று வந்தால் நிறைய பேர் கார்டியோ உடற்பயிற்சியைத் தான் மேற்கொள்வார்கள். ஆனால் எந்தவொரு உடற்பயிற்சியையும் சரியான அளவே மேற்கொள்ள வேண்டும். கொஞ்சம் யோசித்து பாருங்கள் நடைபயிற்சியையே ரொம்ப தூரம் நடந்தால் என்னவாகும். கண்டிப்பாக அதற்கான பக்க விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல செய்கின்ற உடற்பயிற்சி கூட நஞ்சு தான். அந்த வகையில் நீங்கள் அதிகமாக கார்டியோ உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது. அதிக கார்டியோ உடற்பயிற்சி செய்யும் போது உங்க உடலானது கீழ்க்கண்ட அறிகுறிகளை காட்டுமாம். இதய துடிப்பு அதிகரிக்கும் உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் என்ன நடக்கும். அதன் பின்னால் இருக்கும் விளைவை பற்றி புரிந்து கொள்ளாமல் நடந்து வருகிறோம்.

    இருதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது, மனநிலையை அதிகரிப்பது வரை கார்டியோ உடற்பயிற்சியின் நன்மைகள் ஏராளமாக இருக்கலாம்.  ஆனால் அதே நேரத்தில் அதிக கார்டியோ உடற்பயிற்சியால் உங்க தசைகளை நீங்கள் இழக்க நேரிடலாம். தசை வேதனையை அனுபவிக்க நேரிடலாம். எனவே இது குறித்து உடற்பயிற்சி நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

    தசைகளை இழப்பது உங்க வளர்ச்சிதை மாற்ற செயலை குறைப்பதை குறிக்கிறது. தசைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது மேற்கொண்டு கார்டியோ உடற்பயிற்சி செய்யும் போது ஆபத்து 10 மடங்கு வரை அதிகரிக்கிறது. எனவே அதிகப்படியான கார்டியோ உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கிறது.

    கார்டியோ உடற்பயிற்சி செய்யும் அளவு நம்முடைய வயது, மருத்துவ நிலைமைகள், கடந்த கால காயங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூற்றுப்படி 150 நிமிடங்கள் அல்லது 75 நிமிடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட மிதமான தீவிர செயல்பாட்டை ஒரு வாரத்திற்கு என மட்டுமே பரிந்துரைக்கிறது. இதன் மூலம் அதிகப்படியான கார்டியோ உடற்பயிற்சியால் வரும் பிரச்சினைகளை தடுக்க முடியும். அதே மாதிரி வாரத்திற்கு 5 தடவை சுறுசுறுப்பான நடைபயிற்சி மேற்கொண்டு வாருங்கள்.

    எனவே இனி நீங்கள் கார்டியோ உடற்பயிற்சி செய்யும் போது மேற்கண்ட விஷயங்களை மனதில் வைத்து செயல்படுவது நல்லது.
    Next Story
    ×