என் மலர்

  ஆரோக்கியம்

  வெறுங்காலில் நடைப்பயிற்சி
  X
  வெறுங்காலில் நடைப்பயிற்சி

  வெறுங்காலில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது காலணிகள் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். இவ்வாறு வெறும் காலில் நடைப்பயிற்சி செய்தால் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
  காலணிகள் அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பதன் பெயர் தான் (Earthing /Grounding) புவி தொடுப்பு அல்லது மண் அணைத்தல்.
   
  1. ஆய்வுகளின்படி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
   
  2. இதயத் துடிப்பை சீராக்குகிறது.
   
  3. பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.

  4. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.

  5. நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.

  6. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
   
  7. போதுமான எலக்ட்ரான்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

  8. பூமியிலிருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்தும், பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்னேயும் பாதுகாக்கும்.

  இதன்பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது காலணிகள் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். புல்தரை, கான்கிரீட், மணல் என அனைத்துமே எதிர்மறை எலக்ட்ரான்களைத் தருகிறது.

  இந்தப் பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களிலேயே உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D போலவும், தண்ணீரீலிருந்து கிடைக்கும் மினரல் போலவும், பூமியிலிருந்து பெறப்படும் எலக்ட்ரான்களும் முக்கியம்.

  Next Story
  ×