search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி
    X
    உடற்பயிற்சி

    அதிக உடற்பயிற்சி இதய செயலிழப்புக்கு காரணமாகும்

    தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது. ஆனால் அதிக உடற்பயிற்சியும் இதய செயலிழப்புக்கு காரணம் என்பது பலருக்கும் தெரியாது.
    உடற்பயிற்சி செய்யாதவர்கள் இதயநோய், சர்க்கரை நோய் போன்றவைகளோடு உடல்பருமனாலும் பாதிக்கப்படுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதிக உடற்பயிற்சியும் இதய செயலிழப்புக்கு காரணம் என்பது பலருக்கும் தெரியாது.

    உடலின் பொதுவான ஆரோக்கிய நிலை, வயது போன்றவைகளை கருத்தில்கொண்டு எந்த உடற்பயிற்சியை செய்யவேண்டும்? எவ்வளவு நேரம் செய்யவேண்டும்? என்பதை தீர்மானிப்பது அவசியம். உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே உங்களால் பேசமுடியவேண்டும். முணுமுணுத்தபடி ஒரு பாடலை மெதுவாக பாடவும் முடியவேண்டும். இவைகளை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டால் உடனே உடற்பயிற்சியை நிறுத்திவிடவேண்டும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதே போதுமானது.

    உடற்பயிற்சியே செய்யாதவர்கள் திடீரென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. கனமான பொருட்களை தூக்குவது போன்ற செயல்களையும் செய்யக்கூடாது. அதனால் திடீர் இதய செயலிழப்பு உருவாகிவிடக்கூடும். ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை வந்த பின்பு பத்து நாட்கள் வரை கவனமாக இருக்கவேண்டும். அந்த காலகட்டத்தில் ஆரோக்கியமானவர்களைகூட ஐந்து முதல் பத்து சதவீதம் அளவுக்கு இதயநோய்கள் தாக்கலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அதனால் அந்த பத்து நாட்களும் பளு நிறைந்த வேலைகளை செய்யாமலும், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமலும் உடலை பாதுகாக்கவேண்டும்.

    Next Story
    ×