search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடற்பயிற்சி
    X
    உடற்பயிற்சி

    மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி அவசியம்

    மாணவர்கள் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இல்லை. மாணவிகளும் எளிமையான உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வதன் மூலம் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. உடல் வலிமை பெறும். கோபம் குறையும். ரத்த ஓட்டம் சீராகிறது.
    உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் வளமும், மன வளமும் மேம்படும். ஊக்கம், சுய கட்டுப்பாடு போன்ற அரிய பண்பு நலன்களுக்கு காரணமாய் அமைவதும் உடற்பயிற்சி ஆகும். இன்றைக்கு கொரோனா வைரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 3 மாதத்துக்கும் மேலாக மாணவ-மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அவர்கள், தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன்களை பயன்படுத்துவது, கேரம், செஸ் விளையாடுவது என்றே பொழுதை கழிக்கிறார்கள்.

    இதனால், அவர்கள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனை தவிர்க்க வீடுகளில் சிறு, சிறு உடற்பயிற்சி செய்யலாம். மாணவர்கள்தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று இல்லை. மாணவிகளும் எளிமையான உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வதன்மூலம் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. உடல் வலிமை பெறும். கோபம் குறையும். ரத்த ஓட்டம் சீராகிறது.

    உடற்பயிற்சி செய்யும் போது சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். அதேபோல யோகாவும் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். சுவர் இல்லாமல் சித்திரம் எழுத இயலாது. பிள்ளைகளுக்கு சரீர பலம் ஏற்படுத்தாமல் வெறுமனே படிப்பு மாத்திரம் கொடுப்பதால் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறையும். அவர்களது தீராத துக்கத்திற்கும் இரையாகும்படி நேரிடும் என்று பாரதியார் தம், சரீரபயிற்சி என்ற கட்டுரையில் கூறியுள்ளார்.

    இளைஞர்களே பலம் உள்ளவர்களாக திகழுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் விவேகானந்தர். ஆகவே, மாணவ-மாணவிகள் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்து படிப்பிலும் கவனம் செலுத்தி பட்டம் வாங்கி விட்டால் ராணுவம், காவல்துறை போன்றவற்றில் தேர்வாகி விட்டால் இந்த நாட்டு மக்களுக்கு நம் கடமையை செய்ய முடியும். ஆகவே, உடற்பயிற்சி செய்யுங்கள். வாழ்க்கையில் சாதித்து காட்டுங்கள்.
    Next Story
    ×