search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூச்சுப் பயிற்சி
    X
    மூச்சுப் பயிற்சி

    கொரோனாவை விரட்டும் மூச்சுப் பயிற்சி

    தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேர செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதன் காரணாமாக கொரோனா மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு நோயும் வராது. இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்யும்போது இருக்கின்ற நோயும் கட்டுப்படும் அல்லது வெகு சீக்கிரத்தில் குணமாகும்.

    ஆழ்நிலை மூச்சுப் பயிற்சி

    நம்மை அறியாமல் இயல்பாக சுவாசிக்கும்போது குறைந்த அளவே ஆக்ஸிஜன் நம் நுரையீரலுக்கு செல்லும். அதுவே ஒரு முறையான சுவாசப் பயிற்சி மூலம் செய்யும்போது அதிகமான சக்தி நம் நுரையீரலுக்கு செல்லும். அதனால் இந்த பயிற்சி முக்கியமானது.

    செய்முறை:-

    சுகாசனத்திலோ அல்லது முடிந்தவர்கள் பத்மாசனத்திலோ நேராக நிமிர்ந்து அமர வேண்டும். மூட்டு வலி இருப்பவர்கள் நாற்காலியில் அமரலாம். முதுகு தண்டு நேராக இருக்க வேண்டும்.

    முதலில் மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுத்து வயிறு முழுவதும் நிரப்ப வேண்டும். மார்பு பகுதியை தாண்டி வயிறு சற்று முன்னோக்கி வர வேண்டும். பின்பு மெதுவாக இழுத்த மூச்சை வெளியிட வேண்டும். அப்போது வயிறு பழைய நிலைக்கு வரவேண்டும். கண்கள் மூடி இருக்க வேண்டும். ஒரு முறை உள்ளிழுத்து வெளியிடுவது ஒரு சுற்று ஆகும். இதுபோல தினமும் 10 எண்ணிக்கை செய்யலாம். எவ்வளவு மெதுவாக செய்கிறோமோ அந்த அளவு மனம் ஒரு நிலைப்படும். அந்த அளவு சக்தி உடம்பு முழுவதும் பரவும். செய்யும்போதே நீங்கள் இதை உணர முடியும். வேகமாகவோ அல்லது அழுத்தம் கொடுத்தோ அல்லது அவசரமாகவோ செய்யக்கூடாது. நிதானமாக மனம் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.

    மூச்சை உள்ளிழுக்கும்போது அதிகமான பிராண சக்தி உடம்புக்குள்போவது போலவும், வெளிவிடும்போது உள்ளிருக்கும் அனைத்து கெட்டதும் வெளியேறுவது போலவும் நினைக்க வேண்டும்.

    தியானம்

    மேற்கண்ட மூச்சுப்பயிற்சி செய்து முடித்தவுடன், அதே நிலையில் கண்கள் மூடியபடி இருக்க இரண்டு கைகளும் இரு தொடையின் மீது சின் முத்திரையில் (கட்டை விரல் நுனி இரண்டாவது விரலாகிய சுண்டு விரல் நுனியை லேசாக தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்) இருக்க வேண்டும். மனதை அமைதியாக்கி எதையும் சிந்திக்காமல் மூச்சை மட்டுமே கவனிக்க வேண்டும். சுமார் 20 நிமிடம் இந்த தியான நிலையில் இருந்து பின் மெதுவாக கண்களை திறந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும்.

    இதேபோல யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைந்து செய்யும்போது கொரோனா மட்டுமல்ல, எந்த நோய்களும் வராது.

    டாக்டர் த.இங்கர்சா யோகாசன நிபுணர்
    Next Story
    ×